சமீபத்தில் மூன்று புத்தகங்கள்
வெளிவர இருக்கின்றன.
ஒன்று முன்னாள் குடியரசுத் தலைவர்
திரு. அப்துல் கலாம் எழுதிய Turning Points.
இரண்டாவது முன்னாள் மத்திய பிரதேச
முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.அர்ஜுன் சிங் எழுதிய A Grain of Sand
in Hourglass of Time.
மூன்றாவது மூத்த பத்திரிக்கையாளர்
திரு. குல்தீப் நய்யர் எழுதிய ‘Beyond the Lines’.
பொதுவாக இது போன்ற
சுயசரிதை அல்லது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் புத்தகங்கள் அரசியல்
ஆர்வலர்கள், ஊடகங்கள்
மற்றும் பத்திரிக்கைகளில் சலசலப்பை உறுவாக்கும். (சில நேரங்களில்
இந்த சலசலப்புகளே அப்புத்தகங்களின் விற்பனை வெற்றிக்கு உதவும் என்பதால்
வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்பும் விஷயங்கள் நுழைக்கப்படுவது உண்டு).
இப்பொழுது, இந்த மூன்று புத்தகங்களும் கிளப்பியுள்ளச் சர்ச்சைகளைப் பார்ப்போம்....
இதில் முதலில் கலாம் அவர்களின்
புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அவர் தன் புத்தகத்தில் 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி அமைக்க இருந்த சமயத்தில் சோனியாகாந்தி
பிரதமராக ஆவதை அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த கலாம் அதை விரும்பாமல் மறுத்ததாகவும்
அதைத் தொடர்ந்து மன்மோஹன் சிங் பிரதமராக ஐமுமு-வால் தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும்
உலவிய வதந்தியை மறுத்துள்ளார். மேலும், 2002-இல் குஜராத்
கலவரங்கள் நடந்த பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ததன் பின்னர் நிகழ்ந்த அரசியல்
நிகழ்வுகளையும் குறிப்பிட்டு இருப்பது. இதில்,
கலாமை காங்கிரஸ் மீண்டும் குடியரசுத் தலைவராக நியமிக்க மறுத்துவிட்டதற்கான
காரணமாகச் சொல்லப்படுவது சோனியாவை (பிரதமராக) நியமிக்க மறுத்த கிசுகிசுதான். இந்த
முறை கலாமை பாஜக முதலில் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. பின்னர், பிரணாப்
முகர்ஜியின் பெயர் வெளியிடப்படக் கூடும் என்றவுடன் மம்தா பானர்ஜி அவர் பெயரை முன்
மொழிந்ததைத் தொடர்ந்தும் முகநூல், எலெக்ட்ரானிக் ஊடகங்களில் அவர் பெயருக்குக்
கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து தான் கலாமின் பெயரை பாஜக அவர் பெயரை வெளியிட்டது.
இதற்கு, குஜராத் சம்பவமும் காரணமாக இருக்கலாம். ஆனால், இதே புத்தகத்தில்
குஜராத் சுற்றுப் பயணத்தில் மோடியும் அவரது அரசும் அளித்த ஒத்துழைப்பைச்
சிலாகித்துள்ளதைப் பற்றி ஊடகங்கள் எதுவும் கூறவில்லை என்பதையும் நாம்
பார்க்கவேண்டும்.

இதில் நரசிம்மராவ்
அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு காலந்தவறியதாகவே படுகிறது. மேலும்
இராஜீவை குற்றமற்றவர் என இவர் சான்றளித்து இருப்பது ஒருவேளை பிரணாப் முகர்ஜியால்
ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இவர் பெற முயற்சி செய்கிறார் என்பது போலத்தான்
தோன்றுகிறது. அதனால் தான் நேரு குடும்பத்திற்கானத் தன் விசுவாசத்தை மீண்டும்
புணர்ப்பிக்கச் செய்யும் முயற்சிகள்.

இந்தக்
குற்றச்சாட்டைப் பொறுத்தவரை நரசிம்ம ராவின் மகன் திரு. ரங்காராவ், குற்றச்சாட்டை
மறுக்கவோ தன்னிலை விளக்கம் அளிக்கவோ தன் தந்தை உயிருடன் இல்லாத நிலையில் நய்யார்
இதைச் சொல்வது சரியில்லை என்று கூறியுள்ளார். லிமாயே-வோ 1995-லேயே
காலமாகிவிட்டார்.
மேற்கூறிய மூன்று
புத்தகங்களில் இரண்டில் நரசிம்ம ராவ் அவர்களைக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கூறப்படும்
சம்பவங்கள் அவர் ஆட்சியில் இருந்த பொழுதோ அல்லது அதன் பின்னர் அவர் உயிருடன்
இருந்த பொழுதோ வெளிவந்திருக்க வேண்டும். தற்போது அதை மீண்டும் கிளறுவது சரியில்லை
தான்.
இது அதீதம் மின்னிதழில் வெளிவந்தது.
அடேங்கப்பா ! எவ்வளவு விவரங்கள் ! அசத்தீட்டீங்க சீனி !
பதிலளிநீக்குநன்றிகள் மோஹன்.
நீக்குசிறப்பான பகிர்வு. அதீதம் மின்னிதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் சீனி.
பதிலளிநீக்குஅசத்தற போ!
த.ம. 3
நன்றிகள் வெங்கட்.
நீக்குபுத்தகம் வெளிவரும் முன்பே பல தகவல்கள் தந்துளீர்கள், உங்கள் எழுத்து நடை சோர்வலிக்காமல் உள்ளது
பதிலளிநீக்குத ம 4
நன்ற்கள் சீனு.
நீக்குவருமுன் காப்போம் திட்டம் மாதிரி இது புத்தகம் வருமுன் விமர்சனமா! தாக்குங்க. (ஆமா! நம்ம அஜ்ஜூ (அதான் அ.சிங்) இன்னுமா அடங்கல)
பதிலளிநீக்குபுத்த்கங்கள் இன்னமும் வெளிவரவில்லை என்றாலும் அதிலுள்ள குறிப்புகள் அவை வரும் முன்னரே சர்ச்சையில் உள்ளனவே. [பதிவில் குறிப்பிட்டபடி சில அவற்றின் விளம்பரத்திற்காகவும் வெளியிடப்பட்டிருக்கலாம்.] அதைவைத்துத் தான் எழுதியுள்ளேன்.
நீக்கு//அ.சிங்) இன்னுமா அடங்கல//
ஐக்கிய முன்னணியின் இரண்டாம் இன்னிங்க்ஸின் ஆட்டத்தில் அவரைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இப்பொழுது முயற்சித்துப் பார்க்க எண்ணுகிறார். அதற்கு சோனியாவின் ஆசி முக்கியம். அதான் புத்தகத்தில் போபால் சம்பவத்தில் இராஜீவிற்கு இவர் நற்சான்றிதழ் வழங்கும் காரணம்.
ம்ம்ம் வேலிக்கு ஓணான் சாட்சி என்பது பழமொழி.
அது சரி... அர்ஜுன் சிங் போய் ஓராண்டு ஆகி விட்டதே. இப்போது அவருடைய புத்தகம் என்ன பயன்தரப்போகிறது... அர்ஜுன் சிங், சங்மா, ரங்கராஜன் எல்லாரும் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்த காலத்தில் பத்திரிகையாளனாக நெருக்கமாக அவதானித்தவன் என்ற வகையில் சொல்கிறேன் - காங்கிரசில் இன்று இருக்கிற கும்பலோடு ஒப்பிடும்போது அர்ஜுன் சிங் ஆயிரம் மடங்கு நல்லவர்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள் ஷாஜஹான்.
பதிலளிநீக்கு//அர்ஜுன் சிங் போய் ஓராண்டு ஆகி விட்டதே.//
அவராக விலகவில்லை. ஐமுமு இரண்டாவது தடவை ஆட்சி அமைத்த பொழுது அவர் கண்டு கொள்ளப்படவில்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் தோல்வியின் காரணமாகக் கூட அது இருக்கலாம்.
அரசியல் ரீதியாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் (போபால் சம்பவத்தைத் தவிர்த்து லாட்டரி ஊழல், சர்க்கரை ஊழல் போன்றவை) அவர் பெயர் அடிபட்டதுண்டு. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றிய விமர்சனம் தங்களைப் போன்றவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.
நன்றிகள்.