புதன், ஜூலை 18, 2012

ராஜேஷ் கன்னா

இந்தி திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் ராஜேஷ் கன்னா சற்று முன் காலமானார்.

1966-ல் தேவ் ஆனந்தின் அண்ணன் சேதன் ஆனந்தின் படமான ’ஆக்ரி கத்’ (கடைசி கடிதம்) படத்தின் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் 1969-ல் வெளிவந்த ‘ஆராதனா’ பட்த்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார்.  அதன்பின் 1969-க்கும் 1972-க்கும் இடைப்பட்ட காலத்தில், 15 தொடர் வெற்றிப் படங்களைத் தந்ததன் மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். இந்த சாதனை இன்றுவரை இந்திய திரை உலகில் யாராலும் முறியடிக்கப் படவில்லை.

1973-ல் அப்போதைய கனவுக்கன்னி டிம்பிள் கபாடியாவை மணந்தது அன்றைய தினங்களின் பரபரப்புச் செய்தி. ஏனென்றால், அப்பொழுது டிம்பிள்-க்கு 16 வயது தான். ராஜேஷ் கன்னா-வோ அவரைவிட 16 வயது மூத்தவர். பின்னர், விவாகரத்து ஆகிவிட்டாலும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு (ஒருவர் நடிகை ட்விங்கிள் கபாடியா; அக்ஷய் குமாரின் மனைவி).

70-களின் முன் பகுதி வரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் முன்னணியில் இருந்தார். 75-களுக்குப் பிறகு அமிதாப் பச்சனின் வருகையும், காதல் கதைகளை அடிப்படையாக்க் கொண்ட கதைக் கலத்தில் இருந்து action படங்கள் வர ஆரம்பித்தப் பின்னரும், அந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து சற்று சரிய ஆரம்பித்தது.

1980-களின் முற்பகுதிகளிலும் தெற்கிலிருந்து இறக்குமதியான படங்களில் நடித்தார் என்றாலும் ஜிதேந்த்ரா அளவிற்கு அவை வெற்றி பெறவில்லை. இதில் ’முந்தானை முடிச்சு’ படத்தின் இந்தி பதிப்பில் (மாஸ்டர்ஜீ –  ஸ்ரீதேவி-உடன் நடித்ததும் அடங்கும்.

பின்னர் ’ஸ்வர்க்’, ‘அவதார்’ (தமிழில் சிவாஜி-அம்பிகாவுடன் நடித்து ‘வாழ்க்கை’ இதன் ரீமேக் தான்) போன்ற படங்களில் அவர் வயதுக்கான கேரக்டரில் நாயகனாக நடித்து(ம்) பார்த்தார்.  

90-களில் திரையிலிருந்து விலகி காங்கிரஸ் சார்பின் புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் ‘பால்கி’ அவரை மீண்டும் திரையில் தோன்ற வைக்க முயற்சி செய்து வந்தார்.
சில தின்ங்களுக்கு முன் அவர் ஒரு 'Fan' விளம்பரத்தில் தோன்றிய போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார்.

எது எப்படியிருந்தாலும் ராஜேஷ் கன்னா – கிஷோர் குமார் ஜோடி என்பது இந்தித் திரையுலகின் ஏன் இந்திய திரையுலகின் என்று கூட கூறலாம் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்த ஜோடி என்று கூறலாம்.

ராஜேஷ் கன்னா-வின் படங்களில் அனைவரின் நினைவை விட்டு நீக்க இயலாத் ஒரு படம் இருக்கும் என்றால் அது ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி-யின் ‘ஆனந்த்’ படம் தான். அதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நேர்த்தியான நடிப்பு அனைவரின் மனத்திலும் நீங்காதிருக்கும். குரலில் கூட நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்படத்தின் இறுதிக் காட்சியே சாட்சி.

துனியா எக் ரங்க்மன்ஷ் ஔர் ஹம் சப் கட்புத்லி ஹே. கப் கிஸேடோர் கட் ஜாயே கோயி நஹி ஜான்தா பாபுமோஷாய்’ என்ற அவரது ஆனந்த் படத்தின் இறுதி வசனம் (அவரது குரல் மட்டுமே ஒலிக்கும்) இந்தி படங்களின் மிகப் பிரபலமான வசனங்களில் ஒன்று. அது தான் இப்பொழுது ஞாபகம் வருகிறது. காரணம் இதன் பொருள் “உலகம் ஒரு மேடை; நாம் அனைவரும் அதில் பொம்மைகள்; எப்பொழுது யாருடைய நூல் அறுபடும் என்பது யாருக்கும் தெரியாது”. 

இந்தித் திரையுலகில் அவருடைய இடம் இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பது தான் உண்மை.

15 கருத்துகள்:

  1. தூர்தர்சன் டிவியில் எப்போதோ பார்த்த ஞாபகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 80-களில் சென்னைத் தொலைக்காட்சியில் சனிக்கிழமை மாலை ஹிந்தி படங்கள் ஒளிபரப்புவார்கள். பின்னர் 90-களில் தில்லி வந்த எங்களுக்கு இப்பொழுது போல் சேனல் வரிசைகள் கிடையாது. லோக்கல் கேபில் தான். அதனால், ஹிந்தி படங்களின் (குறிப்பாக பழைய படங்கள்) பரிச்சயம் உண்டு. அதனால் தான் உடனடியாக பதிவிடமுடிந்தது.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  2. மறைந்தாலும் மரியா புகழோடு சென்றுள்ளார். ஆழ்ந்த அனுதாபங்கள் த ம 1

    பதிலளிநீக்கு
  3. பாபி இவர் நடித்த படம் தானே? மிக பெரிய ஹிட் படம் அது. பார்த்திருக்கிறேன்

    இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்க தலைப்பு செய்தியே இவர் மறைவு தான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை மோஹன் ‘பாபி’ இவரது மனைவி டிம்பிள் கபாடியா, ரிஷிகபூர் (ராஜ்கபூரின் மகன்; கரினா கபூரின் தந்தை) இணைந்து நடித்த படம;இருவருக்குமே முதல் படம். ராஜேஷ் கன்னா நடித்து தமிழகத்திலும் வெற்றி பெற்ற படம் ‘ஆராதனா’. அதன் தமிழ் பதிப்பு தான் சிவாஜி நடித்த ‘சிவகாமியின் செல்வன்’.

      நீக்கு
    2. கரீனா கபூரின் தந்தை ரிஷி கபூர் இல்லை. ரிஷி கபூரின் அண்ணன் ரந்தீர் கபூர்.

      நீக்கு
    3. ஆம். கணேஷ். கரீனா-கரிஷ்மா ஆகியோரின் பெற்றோர் ரன்தீர்-பபிதா. ரன்பீர்-இன் பெற்றோர்தான் ரிஷி-நீது(சிங்)கபூர்.

      அவசரத்தில் அடித்துவிட்டேன்.
      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  4. ராஜேஷ் கன்னாவின் ஆன்மா சாந்திஅடைய இறைவனை பிரார்த்திப்போம்.

    தமிழ்நாட்டில் ஹிந்தி படங்களைப் பார்க்கும் ஆர்வம் மக்களிடம் அதிகரிக்க இவரின் ஆராதனாவும் ஒரு காரணம். ரூப் தேரா மஸ்தானாவையும், மேரே ஸப்னோ கா ராணியையும் மறக்க முடியுமா!

    (ஆமா, டிம்பிள் கபாடியாவோட அப்பா கபாடிவாலாவா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் பத்து.

      (டிம்பிள்-ஐ குப்பை என்றால் ரசிகர்’கல்’ அடிப்பார்கள்)

      நீக்கு
  5. அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும், அஞ்சலிகளும்….

    பதிலளிநீக்கு
  6. Hmm.. Extremely charming actor! Ivaru padathula maraka mudiyada songs vandu iruku.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ராம்குமார், இப்பவும் உன் ‘அமர் ப்ரேம்’ கேசட்டை ஓட்டி ஓட்டியே தேய்த்தது ஞாபகம் வருகிறது.

      நீக்கு
  7. பாபு மோஷாய்! மறக்க முடியுமா இவர் படப் பாடல்களை...

    நீ சொன்னது போல ராம்குமாரின் கேசட் தேய்ந்தே போனது - கேட்டுக் கேட்டு! :)

    பதிலளிநீக்கு