திங்கள், ஆகஸ்ட் 06, 2012

மதக்கலவரம் Vs. இனக்கலவரம்

அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

60 உயிர்களைக் காவு கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து போக்கிடம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.

அஸாமின் கொக்ரஜார் பகுதியில், அனைத்து அஸாம் சிறுபான்மையினர் மாணவர் யூனியன் தலைவரும் அனைத்து போடோ சிறுபான்மையினர் மாணவர் யூனியன் தலைவரும் போடோ தீவிரவாத அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட பதட்டம் துவங்கியது. அதைப் பற்றி உளவுத் துறை மத்திய அரசுக்கு ஜூலை 7 ஆம் தேதியே தகவல் அனுப்பியது. ஆனால், மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி இதில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கத் தேவையான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மெல்ல மெல்ல பதட்டம் அதிகரித்தது. மெல்ல மெல்ல அதிகரித்தப் பதட்டம் 15-20 நாட்களில் மேலும் மேலும் வளர்ந்து மாவட்டம் முழுவதும் பரவி கலவரமாக உருமாறியது. போடோக்கள் அதிகமான கோக்ரஜார் மாவட்டத்தில் முஸ்லீம்கள் தாக்கப்பட அடுத்த முஸ்லீம்கள் அதிகம் வாழும் மாவட்டமான சிரங்க்-இல் போடோக்கள் தாக்கப்பட கலவரம் துருபி, பக்ஸா, உதல்கிரி, பர்பேடா, கோலாபாரா ஆகிய இடங்களுக்குப் பரவியது.  போடோலாந்து பகுதியில் உள்ள 400-க்கும் அதிகமான கிராமங்கள் கலவரங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

போடோக்களைப் பொறுத்தவரை, பங்களாதேஷ்-இல் இருந்து வரும் அகதிகள் மாநிலம் முழுதும் பரவி அவர்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வளைப்பதாகவும் அதற்கு அஸாமின் முஸ்லீம்கள் உதவுவகிறார்கள் என்பதுதான். முஸ்லீம்களைப் பொறுத்தவரை போடோக்கள் இந்திய முஸ்லீம்களான தம் நிலம் மற்றும் உடமைகளை அபகரிக்கத்தான் போடோக்கள் இந்த கலவரங்களை நடத்துவதாகக் கருதுகின்றனர்.

அஸாம் மாநில காங்கிரஸும், மத்திய அரசும் தவறிழைக்கும்  போடோக்களையும் சரி, முஸ்லீம்களையும் சரி, தண்டிக்கத் தயங்குகின்றன. காரணம், யாரைத் தண்டித்தாலும் அவர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்களின்  உயிர், லட்சக்கணக்கானவர்கள் வீடு உடமைகள் இழந்து தவித்த பின்னர் முதல்வர் மத்திய படைகளை அழைத்தார். பிரதமர் மன்மோகன் சிங்-ஐப் பொறுத்தவரை அவர் அஸாமின் ராஜ்ய சபை உறுப்பினர். அவர் ஜூலை 27-ஆம் தேதி கலவரம் நடந்த பகுதிகளைச் சென்று பார்த்தார். 300 கோடியை நிவாரணமாக அறிவித்தார். ஆனால், நிலைமை இன்னமும் அடங்கிய்தாகத் தெரியவில்லை.

இத்தனை நடந்த பின்னும் காங்கிரஸும், பாஜக-வும் (அஸாம் கனபரிஷத் ‘தேசிய ஜனநாயக கூட்டணி’யில் அங்கம் வகிக்கிறது) இதை எப்படி தீர்ப்பது என்பதை கவனிக்காமல் இது ‘மதக் கலவரமா’ இல்லை ‘இனக் கலவரமா’ என்று ஆராய்ச்சி செய்து வருகின்றன.

பாஜக-வைப் பொறுத்தவரை இதை ’மதக்கலவரம்’ என்று கூறுவதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் மதக்கலவரங்கள் நிகழ்கின்றன; அதனால், காங்கிரஸ் குஜராத்-இல் மோடியைக் குற்றம் சாட்டினால் இவர்கள் இதைக் காட்டலாம். மேலும், காங்கிரஸ் எப்பொழுதும் மதக் கலவரத்தை அடக்குவதில் சுணக்கம் காட்டும் என்று எதிர் தாக்குதல் நட்த்தலாம் என்று கணக்குப் போடுகிறது. காங்கிரஸோ இதை இனக் கலவரம் என்று காட்டிவிட்டால் பாஜக-வின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கலாம். மேலும், போடோ தீவிரவாதிகளைக் குற்றம் சாட்டித் தங்கள் ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள்.

பிரதமர் வந்து என்ன? நிவாரணங்களை அறிவித்தும் என்ன? மக்கள் இன்னமும் முகாம்களில் தான் வசிக்கின்றனர். அங்கும் நிலைமை ஒன்றும் சரியில்லை. அகதிகள் முகாம் நிரம்பி வழிந்து கழிவுகள் வெளியேற்ற வழியில்லாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். போதாக் குறைக்கு மழை, வெள்ளம் வேறு.  வெளியிலும் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இன்னும் பல இடங்களில் கலவரங்கள் அடங்கியதாகத் தெரியவில்லை. அவர்கள் எப்படி போனால் என்ன?

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இது  ‘மதக் கலவரமா’ இல்லை ‘இனக் கலவரமா’ என்று கண்டுபிடிப்பது தான் முக்கியம். நம் பட்டிமன்றத் தலைவர்கள் யாரையாவது அனுப்பி தான் இதற்குத் தீர்வுகாண வேண்டும்.

21 கருத்துகள்:

  1. உண்மையில் இந்த பிரச்சனை பற்றி உங்கள் பதிவின் மூலம் தான் நான் நிறைய தெரிந்து கொண்டேன். பிரதமர் ராஜ்யசபாவிற்கு இங்கிருத்து தான் தேர்ந்தேடுக்கபட்டும் இந்த நிலை ஹும் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரதமர் என்ன செய்வார் பாவம். அவர் எங்கு நின்றாலும் (மக்களவைக்கு) வெல்ல முடியாது. ஏதோ ஒரு இடத்தில் மாநிலங்கள் அவையில் நிற்க வேண்டியது தான். அங்கு வசிப்பதாக காகிதங்களைத் தயார் செய்தால் போதுமே!

      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  2. //அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இது ‘மதக் கலவரமா’ இல்லை ‘இனக் கலவரமா’ என்று கண்டுபிடிப்பது தான் முக்கியம். //
    வெட்கக்கேடு.இந்த அவல நிலை என்று மாறும்?
    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. எல்லைக்காவல் சரியில்லை என்றால் தொல்லைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லைக் காவல் மட்டுமல்ல அரசு இதில் குற்றவாளிகளை சரியான நேரத்தில் தண்டிக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

      நீக்கு
  4. முதலில் உங்களைப் பாராட்டி கை குலுக்கிக்கொள்கிறேன். தமிழக ஊடகங்கள் இந்த அசாம் பிரச்சினையை விரிவாக அலசவில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது தமிழ் மக்களுக்கு சரியாக விளக்கப்படவில்லை. அவரவர்கள் தாங்கள் சார்ந்த மதத்தையோ இனத்தையோ கொண்ட ஒரு குறுகியப்பார்வையோடு தான் இந்த அசாம் பிரச்சினையை வளைகிறார்கள். அங்கு மடிவது மனித உயிர்கள் என்ற மனிதாபிமான எண்ணத்தோடு உங்களைப் போல எழுத வேண்டும். கத்தி மேல் நடக்கும் பிரச்சினையை நன்றாக நடுநிலை தவறாமல் எழுதி இருக்கிறீர்கள்.

    கடைசியாக வலி மிகுந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறேன்.

    //நாங்கள் முஸ்லிம் என்ற காரணத்தால் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?”

    அகதிகள் முகாமில் உண்ண உணவும், உடுக்கத் துணியும் இல்லை என்று புகார் கூற நாங்கள் வரவில்லை. இந்த நாட்டில் நாங்கள் வாழ முடியுமா?

    பிறந்து வளர்ந்த இந்நாட்டில் வாழ முடியாத சூழலில் இனி நாங்கள் எங்கு செல்வோம்”//

    பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல அலசல் சீனு. இவர்கள் திருந்தவே மாட்டார்கள் போல.

    பதிலளிநீக்கு
  6. முதலில் உங்களைப் பாராட்டி கை குலுக்கிக்கொள்கிறேன். தமிழக ஊடகங்கள் இந்த அசாம் பிரச்சினையை விரிவாக அலசவில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது தமிழ் மக்களுக்கு சரியாக விளக்கப்படவில்லை. அவரவர்கள் தாங்கள் சார்ந்த மதத்தையோ இனத்தையோ கொண்ட ஒரு குறுகியப்பார்வையோடு தான் இந்த அசாம் பிரச்சினையை வளைகிறார்கள். அங்கு மடிவது மனித உயிர்கள் என்ற மனிதாபிமான எண்ணத்தோடு உங்களைப் போல எழுத வேண்டும். கத்தி மேல் நடக்கும் பிரச்சினையை நன்றாக நடுநிலை தவறாமல் எழுதி இருக்கிறீர்கள்.

    கடைசியாக வலி மிகுந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறேன்.

    //“நாங்கள் முஸ்லிம் என்ற காரணத்தால் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?”

    “அகதிகள் முகாமில் உண்ண உணவும், உடுக்கத் துணியும் இல்லை என்று புகார் கூற நாங்கள் வரவில்லை. இந்த நாட்டில் நாங்கள் வாழ முடியுமா? என்பதை கேட்கத்தான் வந்திருக்கிறோம்”

    “பிறந்து வளர்ந்த இந்நாட்டில் வாழ முடியாத சூழலில் இனி நாங்கள் எங்கு செல்வோம்”//

    பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஸ்லாமியர்கள் என்று அல்ல போடோக்களும் இதில் பகடைக் காய்களாகவே பயன்படுத்தப் படுகிறார்கள். 80-களில் நடந்த கலவரத்தின் பொழுது அவர்களுக்கு காஷ்மீரைப் போல சில சலுகைகள் வழங்கப்பட்டன.

      மேலும், அங்கே வசிக்கும் முஸ்லீம்களில் வங்காளம் பேசும் இந்திய முஸ்லீகளும் உண்டு. பங்க்ளாதேஷி-இல் இருந்துவரும் முஸ்லீம்களும் உண்டு. சில நேரங்களில் கலகத்திற்கு இதுவும் ஒரு காரணம் ஆகிவிடுகிறது. கலகம் சரியாகக் கையாளப்படாவிட்டால் கலவரமாக மாறிவிடுகிறது.

      தங்கள் வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  7. புதிய தலை முறை இதழில் இதைப் பற்றி மேலோட்டமாகப் படித்தேன். இந்தப் பதிவின் மூலம் இன்னொரு பரிமாணத்தை அறிய முடிந்தது.மன்மோகன் சிங் எப்போதும்போல் மௌன மோகன் சிங் ஆக இருக்கிறார். நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் முரளி. இந்த போடோ பிரச்சனையே பல பரிமாணங்களைக் கொண்டது. எங்கு கைவைத்தாலும் அது வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதால் தான் அரசு இதை அவ்வப்பொழுது (நிலைமை மிகவும் தீவிரமாகும் பொழுது) தற்காலிகமாக தீர்க்கும் நடவடிக்கைகளை எடுக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது இந்த பிரச்சனையில் மூலத்தை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை! PART 1
    28 Jul 2012


    குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.

    காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள்.

    கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.

    ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர்.

    எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள்.

    விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.

    டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

    இங்கே சொடுக்கி >>>> முஸ்லிம் இனப்படுகொலை 1 <<<<< படம் காணுங்கள்

    நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.

    “நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.

    கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.

    பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.

    இங்கே சொடுக்கி >>>> முஸ்லிம் இனப்படுகொலை 2 <<<< படம் காணுங்கள்

    ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.

    இங்கே சொடுக்கி >>>> முஸ்லிம் இனப்படுகொலை 3 <<<< படம் காணுங்கள்

    குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

    மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.




    SOURCE: http://www.thoothuonline.com/assam-muslim-genocide-has-same-model-as-gujarat-genocide/

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!

    உறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். 5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கே சொடுக்கி >>>>> முஸ்லிம் இனப்படுகொலை 4 <<<< படம் காணுங்கள்

    10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர். ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

    தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள். வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.

    SOURCE: http://www.thoothuonline.com/assam-muslim-genocide-has-same-model-as-gujarat-genocide/

    பதிலளிநீக்கு
  10. யார் வந்தேறிகள்?

    4 Aug 2012

    அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.

    நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை.

    அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

    இதுவரை ஏறத்தாழ நூறு பேர் மரணித்துவிட்டனர். நான்கு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

    இங்கு உள்ள பிரச்சனைதான் என்ன?

    இந்த அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பற்றி எரியவில்லை, மூன்று மாவட்டங்களில்தான் பிரச்சனை வெடித்துள்ளது.

    அதிலும் இராணுவம் உடனடியாக களத்திற்கு வராததுதான், இந்த பிரச்சனை எல்லை மீறிய வன்முறையாக மாறுவதற்கு காரணம்.

    ஆனால் அம்மாநிலத்தின் முதல்வர் தருண் கோகாய், இங்கு நடைபெற்று கொண்டிருப்பது “இன பிரச்சனைதான்” என்று கூறியுள்ளார்.

    மற்றும் இந்திய தேசத்தில் இருந்தது முஸ்லிம்களை வேறோடு அழித்துவிட வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளவர்களில் ஒருவரான அத்வானி,

    “வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் இவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்” என்று தன் திருவாயில் இருந்து மொழிந்துள்ளார். இதனையே இவர்கள் பன்னெடுங்காலமாக கூறி வருகின்றனர்.

    கூட்டணி குழப்பங்கள், உள்கட்சி குழப்பங்கள் என்று திணறி வரும் பா.ஜ.க.விற்கு, இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

    பழங்குடி இன குழுக்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வரும் போடோ பிரிவினை வாத குழுக்கள் இவர்களின் சவாரிக்கு பயன்படுகின்றனர்.

    அஸ்ஸாம், மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து வருகின்றனர்.

    தங்களை இந்தியர்கள் என்று நிருபிக்க, இவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த பொய்யை காரணமாக வைத்தே இந்த அப்பாவி முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்தும், அவர்களின் உயிர்களை வன்முறை மூலம் பறித்தும் வருகின்றனர்.

    இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் எப்போது வந்தார்கள்
    இராணுவம், எல்லை பாதுகாப்பு படை, உளவுத்துறை என அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு இத்தனை பேர் எப்படி ஊடுறுவினார்கள்? என்ற கேள்விகள் எழுவது இயல்புதானே.

    ஆனால் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமாக உள்ளது.

    அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக வங்காளதேசத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து சென்றது, அப்போதைய ஆங்கில அரசு.

    அவற்றில் பெருன்பான்மையினர் முஸ்லிம்கள்.
    ஏறத்தாள ஒரு நூற்றாண்டிற்கு முன் சென்றவர்களைதான் இன்னும் ஊடுருவல்காரர்கள் என்று கூறுகின்றனர் இந்த குறுமதியினர்.

    இவர்கள் அந்நியர்கள் என்றால் பாகிஸ்தானில் இருந்து வந்த அத்வானி எந்த ரகம்?

    இதே அளவுகோலை வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களுக்கும் ஏன் பயன்படுத்தவில்லை?

    அப்பாவிகளை அடித்து அதில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கின்றன போடோ குழுக்கள்.

    ஆயுதங்கள் தங்கு தடையின்றி அவர்களிடம் புரள்கின்றன. இதற்கு மாநில அரசும் உடந்தை, இந்த போடோ குழுக்கள் அரசிலும் பங்கு வகிக்கிறது.

    முஸ்லிம்களை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு இந்த உண்மையான பிரிவினைவாதிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இத்தகைய பிரிவினைவாதிகள் முஸ்லிம்களை மட்டும் குறிவைக்கவில்லை, சில வருடங்களுக்கு முன்னர் இதே அஸ்ஸாமில், பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.

    இதே போன்ற குறுமதியினர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் உள்ளனர்.

    பரந்து விரிந்த நாட்டில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் வேலை பார்க்கக் கூடாது என்று கூறுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

    இவர்களின் முட்டாள்தனத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்திய தேசத்தை துண்டாக்கி விடுவார்கள்.

    அதன் பிறகு “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது பாட நூல்களில் மட்டும்தான் இருக்கும்.

    சிந்தனைக்கு
    -:ஏர்வை ரியாஸ்:-

    பதிலளிநீக்கு
  11. வங்கதேச கள்ளக் குடியேறிகள் தான் இக்கலவரங்களுக்கு முக்கிய காரணமாகும்.. ஏற்கனவே தனி மாநிலம் கோரும் போடுக்களின் பிரதேசங்களில் வங்கதேசிகளை அதிகம் குடியேற விடுவதால் போடோக்களை அமர்த்துவிடலாம் என்ற எண்ணம் அரசுக்கு இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் சிறுபான்மையினர் ஓட்டு எப்போதும் காங்கிரஸுக்கு கிடைக்கும் என்பதால் அதனையே அரசும் ஊக்குவிக்கின்றது. இதை இப்போதே தீர்க்காவிட்டால் எதிர்காலங்களில் பெரும் பிரச்சனைகள் எழும் என்பதில் ஐயமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் இக்பால் செல்வன்.

      நீக்கு