செவ்வாய், அக்டோபர் 09, 2012

புல்லுருவிப் புறாக்கள்ஏற்கனவே தில்லியில் புறாக்களின் அதிகரிப்பு சிட்டுக்குருவிகள் காணாமல் போனதற்குக் காரணம் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் தில்லியின் பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பிற்கும் இதனால் குந்தகம் விளையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தில்லியில் பாரம்பரிய இடங்களில் முக்கிய இடங்களாகக் கருதப்படுபவை லால்கிளா என்று கூறப்படும் செங்கோட்டை, குதுப்மினார், ஹுமாயூன் கல்லறை, லோதி கல்லறை, ஸப்தர்ஜங் கல்லறை ஆகியவற்றைத் தவிர ஹௌஸ்-காஸ், மஹரோலி, நிஜாமுதின் ஆகிய இடங்களில் உள்ள புராதனக் கட்டிடங்கள் ஆகியவற்றின் சுவர்கள், அலங்கார வளைவுகள், பலகணிகள், பிறைகள் கதவுகள் ஆகியவற்றில் செதுக்கப்பட்ட கலை வேலைப்படுகள், துளைகள், குழிகள் ஆகியவை இந்தப் புறாக் கூட்டங்களுக்கு வாழிடமாக இருக்கின்றான.

புறாக்கள் பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. அதே நேரம் இவை காக்கை, குருவிகள் போல கூடு கட்டுவதும் இல்லை. குயில்கள் போல மரப்பொந்துகளிலோ சுவர்கள், மாடங்கள் ஆகியவற்றில் உள்ள பொந்துகளில் தான் வாழ்கின்றன. இனப்பெருக்கம் அதிகமானதால் இவற்றின் தொல்லை அதிகமாகிவிட்டது.

மற்ற பறவைகளை விட புறாக்கள் அதிகமாக எச்சத்தை வெளியேற்றும். புறாக்களின் எச்சங்கள் சுவர்கள், கற்கள், கான்க்ரீட் கலவைகளின் மேல் இருந்தால் சிலகாலம் கழித்து அதில் விழும் புறாக்களின் எச்சத்தில் ரசாயனப் பொருள் உருவாகிறது. இது அமிலமாக மாறி சுவற்றைப் பாதிப்பதாகக் கூறுகிறார்கள். மேலும், இவைக் காற்றில் கலந்து அதனாலும் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகிறது.

தில்லி செங்கோட்டை அருகே முன்னர் திராட்சைத் தோட்டங்கள் இருந்தன. இந்த புறாக்களின் கழிவுகள் அதற்கு நன்கு உபயோகப் பட்டன. நகரமயமாக்கலில் நாளடைவில் தொட்டங்கள் அழிந்து போக இந்தப் புறாக்களும் போக்கிடம் கிடைக்காமல் செங்கோட்டையின் சுவற்றையே தங்கள் வாழ்விடமாகக் கொண்டு விட்டன.

சில காலம் முன்பு வரை காற்றடித்து இந்த புறாக்களை விரட்டி வந்தார்கள். ஆனால், நீதிமன்றத் தடையைத் தொடர்ந்து புறாக்களை விரட்டுவது நிறுத்தி வைக்கப் பட்டது. ஆனாலும் சுவர்களைப் பாதுகாக்க (Archeological Society of India) வலைகளைக் கட்டியது. ஆனாலும் அவற்றிலும் நுழைந்து தங்களின் புகலிடத்தை மீட்டுக் கொண்டன. தற்போது, கம்பி வலைகளும் இரும்பு முட்களையும் வைத்தும் பார்த்துவிட்டது. ஆனாலும் இதனால் பெருமளவு நன்மை கிட்டியதாகத் தெரியவில்லை.

சமாதானத்திற்குப் பெயர் போன புறாக்களைச் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பறக்கவிடுவர். அந்தச் சமாதானப் புறாக்களே இன்று செங்கோட்டைக்கு எதிரிகளாக ஆகிவிட்டன.

யாராவது புறாக்களுடன் சமாதானம் பேசினால் தான் உண்டு….

8 கருத்துகள்:

 1. புறாக்கள் இப்படி ஆகிவிட்டனவே.

  இங்கும் நகரத்தில் வாழ பழகிவிட்டன.

  தில்லியைப்போல பெரும் தொகையாக இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகரமயமாக்களில் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டால் அவை பாவம் எங்கு வாழமுடியும்?

   வருகைக்கு நன்றிகள்.

   நீக்கு
 2. புறாக்களின் எச்சம்... சுந்தரம் மாமா வீட்டு பால்கனியில் ஒரு முறை பார்த்தபோது அங்கே குடிகொண்டிருந்த புறாக்கள் சுவர்களை நாசம் செய்திருந்தது....

  தில்லியில் பல இடங்களில் இப்புறாக்கள் தானே.... அட்லீஸ்ட் புறாவாது மீதி இருக்கே என நினைக்கும்போது.... அவற்றின் எச்சம் தரும் வீச்சம் பரவாயில்லை எனத் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்... புறக்களாவது எஞ்சியதே என்று தேற்றிக் கொள்ளும் நிலைமையில் தான் இருக்கிறது....

   வருகைக்கு நன்றிகள்.

   நீக்கு
 3. யாராவது புறாக்களுடன் சமாதானம் பேசினால் தான் உண்டு

  சமாதானப் புறாக்களினால் சமர் தரும் தொல்லையா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புறாக்களின் இயல்பான வாழ்விடங்களை அழித்துவிட்டதால் வந்த வினை. என்ன செய்ய முடியும்?

   வருகைக்கு நன்றிகள் இராஜராஜேஸ்வரி

   நீக்கு