செவ்வாய், அக்டோபர் 16, 2012

நவராத்திரி

நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த நவராத்திரி என்பது ஒரு வருடத்தில் ஐந்து முறை வரும்.

இதில் இரண்டு பருவங்களை அடிப்படையாகவும் மற்ற மூன்று மாதங்களை அடிப்படையாகவும் கொண்டு கூறப்படுகின்றன.

அவற்றைப் பார்ப்போம்.

முதலில் வசந்த நவராத்திரி…

இது சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்ட சித்திரை மாதத்தில் வரும். தெலுங்கு-கன்னட-மராட்டியர்கள் கொண்டாடும் யுகாதியில் துவங்கி ராம நவமி-யன்று நிறைவு பெறும். வட இந்தியாவில் இது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். வசந்த காலத்தில் கொண்டாடப்படுவதால் இதற்கு வசந்த நவராத்திரி என்று பெயர்.

அடுத்து நாம் கொண்டாடும் நவராத்திரி. இது தெலுங்கர்-கன்னடர் ஆகியோரின் அஸ்சினி (ஐப்பசி) மாதத் துவக்கத்திலிருந்து, அதாவது மஹாலளய அமாவாசை அல்லது நம் தமிழ் மாதத்தின் புரட்டாசி அமாவாசைக்கு மறுதினம்   முதல் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இந்தியா முழுவது அனைத்து மாநிலங்களிலும் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சரத் பருவத்தில் (குளிர் காலம்) கொண்டாடப்படுவதால் இது சரத் நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

வட இந்தியாவில் இது ராம-ராவண யுத்தமாகவும் விஜயதசமி-யன்று ராமர் ராவணனை அழித்ததைக் கொண்டாடும் ராம்லீலா-வாகவும் கொண்டாடப்படுகிறது.

வங்கத்தில் இது 10 நாட்கள் பண்டிகையாக தசரா-வாகக் கொண்டாடப்படுகிறது. வங்க தேசத்தின் மிக முக்கியப் பண்டிகை என்றால் அது தசரா-தான். இதை துர்கோஸ்தவம், சரத்தோஸ்தவம், மஹாபூஜா, மாயேர்(தாய்)பூஜா  என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. துர்கா பூஜையைப் பற்றி பல புத்தகங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்தாலும் மிகவும் சாகித்யமாகக் கருதப்படுவது ‘வித்யாபதி’ (சரஸ்வதி சபதம் படத்தில் வரும் அதே வித்யாபதிதான்) எழுதிய ‘துர்கா பக்தி தரங்கிணி’ என்ற மிதிலி-மொழியில் (இது மிதிலையில் பேசப்படும் வங்காளமும்-ஹிந்தியும் கலந்த மொழி). இந்த மைதிலி சக்தி உபாசனைக்குப் பெயர் பெற்றது. ஆதிசங்கரரின்  சீடரான மண்டல மிஸ்ரர் மைதிலி-யைச் சேர்ந்தவர் என்று கூறுவர்.

குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இது ’கார்பா’ என்றும் ’தாண்டியா’ என்றும் கொண்டாடப் படுகிறது. ’கார்பா’ என்பது கர்பம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. குழந்தைத் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பொழுது கையையும் காலையும் அசைத்து ஆடுவது போல் கை-கால்களை மடக்கித் திருப்பி ஆடும் நடனம் ‘கார்பா’. தாண்டியா என்பது கோலாட்டம். சாதாரணமாக கார்பா அம்மனுக்கு ஆரத்தி எடுக்கும் முன்னரும் தாண்டியா ஆரத்திக்குப் பின்னரும் ஆடுவர்.

மற்ற நவராத்திரிகள்….

1.   ஆஷாட நவராத்திரி – ஆஷாடம் என்றால் ஆடி; இது ஆடிமாதத்தில் (சந்திர மாதம் என்பதால் நம் தமிழ் மாதம் ஆனியிலேயே வரும்) கொண்டாடப்படுவது.
2.   புஷ்ய நவராத்திரி – புஷ்யம் அதாவது பூசம் (தை) மாதத்தில் கொண்டாடப்படும். (சந்திரமாதம் என்பதால் தமிழ் மாதம் மார்கழியிலேயே வரும்)
3.   மக நவராத்திரி – இது சந்திரமாதமான மக (மாசி) மாதத்தில் கொண்டாடப்படும். (தமிழ்மாதம் – தை)

இவை மூன்றும் குப்த நவராத்ரி என்றும் கூறப்படும். குப்த என்றால் வெளியில் தெரியாத என்று பொருள்.

சாதாரணமாக, வசந்த- சாரத நவராத்திரிகள் சூரியன் பூமத்திய ரேகைக்கு அருகில் வரும் நாட்களில் வரும். இரவும் பகலும் ஏறக்குறைய சமமாக இருக்கும். ஆனால் மேற்கூறிய இந்த மூன்று நவராத்திரிகளில் அப்படி இல்லாமல் ஆஷாடத்தில் இரவு குறைவாகவும், புஷ்ய-மக நவராத்திரிகளில் பகல் குறைவாகவும் இருப்பதால் நாளடைவில் இவை வழக்கழிந்து போய் இருக்கலாம்.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

14 கருத்துகள்:

  1. உங்களுக்கும் என் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள் ஸ்ரீனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் கணேஷ்.

      நீக்கு
  2. நல்ல விஷயம்.... இரண்டு நவராத்திரி தான் எனக்கும் தெரியும்... :) மற்ற மூன்றும் தெரியவைத்ததற்கு நன்றிடா....

    பதிலளிநீக்கு
  3. வழமை போல் பின்னணி மற்றும் இதர பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மோகன்.

      நீக்கு
  4. நல்ல விளக்கங்கள்... நன்றி...

    இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்...

    t.m.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் த.ம. ஓட்டுக்கும் நன்றிகள் தனபால்.
      (நேற்று உங்கள் வலை திறக்கமுடியமல் இருந்ததே (இண்ட்லி பிரச்சனையோ?))

      நீக்கு
  5. நவராத்திரி விளக்கம் தெளிவு பெற வைத்தது.

    பதிலளிநீக்கு
  6. நவராத்திரி பற்றி மிகவும் அருமையாக கூறினிர்கள். உங்களுடைய விளக்கம் புரியும் படி இருந்தது

    உங்களுக்கு என் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  7. நவராத்திரி பற்றிய பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    நன்றி, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு