திங்கள், அக்டோபர் 22, 2012

இரட்டை வால் நட்சத்திரம்


அடுத்த வருடம் (2013) நவம்பர்-டிசம்பரில், நிலாவைவிட சுமார் 15 மடங்கு ஒளிரக் கூடிய ஒரு வால் நட்சத்திரம் பூவெளிக்கு வெகு அருகில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 2 மில்லியன் மைல்களுக்குள் வந்து செல்லும் என்று ரஷ்யாவின் வானியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது வியாழனுக்கு அருகில் சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரத்தை comet ISON என்று கூறுகிறார்கள். இது அடுத்த வருடம் பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்று கணித்திருக்கிறார்கள். பூமியின் வடபகுதிகளில் இருக்கும் நாடுகள் இதை முழுவதுமாகத் தெளிவாகக் காணமுடியும் என்றும் கணித்திருக்கிறார்கள்.

இதன் பாதையைப் parabolic – அதாவது நீள்வட்டப்பாதை என்று கணித்திருக்கிறார்கள்.


ஜன் ஹெண்ட்ரிக்ஸ் ஓர்ட் (1900-1992) என்ற டச்சு வானியல் நிபுணர், கேலக்ஸிகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்றும் அந்த சுழற்சியில் அவை மேகம் போன்ற ஒன்றை உருவாக்குவதாகசும் நிரூபித்துள்ளார். இதற்கு ஓர்ட் மேகம் என்ற பெயரும் உண்டு.

ந்த வால் நட்சத்திரம் ஓர்ட் மேகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இறுகி அதனுடன் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதியில் இருந்த வான் கற்களும் துகல்களும் கூடி ஈர்ப்பு விசைப் பெற்று நகரத் துவங்கியிருக்கக் கூடும் என்று நினைக்கிறார்கள்.

துகள்களும் பனிக்கட்டியும் சேர்ந்து இவை அழுக்குப் பனிக்கட்டிக் கோளமாகக் காட்சியளிக்கும். பனிக்கட்டிகளால் இவை சூரிய வெளிச்சத்தைக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கும்.

ஒரு குளிர்ந்த பனிக்கட்டி பந்து அதுவும் அழுக்காகச் சற்றுப் பெரிய பனிக்கட்டி - எவ்வளவு பெரியது என்றால் சற்றேறக்குறைய நிலா அளவுக்குப் பெரியது – அது தான் இந்த வால் நட்சத்திரத்தின் அமைப்பு என்று கூறுகிறார்கள். பனிக்கட்டி சாதாரணமாக உடைந்து விடும் என்று நினைக்காதீர்கள்; அது அதன் கடினத்தன்மையையும் அளவையும் பொறுத்தது.

இந்த வால் நட்சத்திர காட்சியைக் காண அனைவரும் தயாராக ஆவதற்கு முன்னர் இதற்கு முன்னோட்டமாக அடுத்த ஜூன்-ஜூலை மாதத்தில் ஒரு வால் நட்சத்திரத்தைக் காணலாம். இது சமீப காலங்களில் (கடந்த 2-3 நூற்றாண்டுகளில் வந்துச் சென்ற வால் நட்சத்திரங்களை விடப் பெரிதாக இருக்கும் என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், தற்போது ரஷ்ய வானியல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ள நவம்பரில் வரும் வால் நட்சத்திரம் அதை விடப் பெரிதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஒரே வருடத்தில் இரண்டு வால் நட்சத்திரங்களைக் காணமுடியும் என்பதே அபூர்வமான நிகழ்வுதான். அது அடுத்த 2013-ஆம் வருடம் நிகழ இருக்கிறது.

நாம் அனைவரும் இதைக் காணத் தயாராவோம்...
 

10 கருத்துகள்:

 1. ரெண்டு மூணு வால்நட்சத்திரங்களை ஒரே சமயத்துல எங்க வீட்ல பாத்திருக்கேனே... ஹி... ஹி.... ஆனாலும் நீங்க சொல்ற வால் நட்சத்திரங்களைப் பாக்க ரொம்ப ஆவலாத்தான் இருக்குது ஸ்ரீனி.

  பதிலளிநீக்கு
 2. எனது பெண்ணிடம் இது பற்றி பகிர்கிறேன் ரசிப்பாள் என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. அறிவியல் உங்களுக்கு சிறப்பாக கைகூடுகிறது. வாழ்த்தும் பாராட்டும்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல். காத்திருப்போம் வால் நட்சத்திரத்திற்கு... [வாலோடு தான்!]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு வாலோடு இல்லை! ரெட்டை வாலோடு ரெங்குடு சீ, வெங்குடு!

   நீக்கு