புதன், செப்டம்பர் 30, 2020

மிதிவண்டியும் தென்னையும்

 மிதிவண்டியும் தென்னையும்


ஆட்டும் திசையில் ஆடும்
காட்டும் திசையில் ஏகும்
நேர்ப்பாதையில் நிமிர்ந்து செல்லும்
மிதிவண்டியும் தென்னையைப் போலே…
முதலில் கீழே சறுக்கும்
மிதித்து ஏறக் கீழ் தள்ளும்
பழகப்பழகக் கைக்கொள்ளும்
சீராய் ஏற்றம் கொள்ளும்…
க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்
நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்
வீண் ஆட்டம் போடாது வாழ – வெற்றிக்
கனியும் கையில் கிட்டும்!


1 கருத்து:

  1. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    தலைப்பில் மாற்றம் தேவை - தென்னையும் என்று வந்திருக்க வேண்டுமல்லவா!

    பதிலளிநீக்கு