ஞாயிறு, ஜனவரி 01, 2012

புத்தாண்டு வாழ்த்துகள்


புத்தாண்டு வாழ்த்துகள்

இந்தப் புத்தாண்டில் ஆங்கில மாதங்கள் தோன்றிய வரலாற்றையும் அவற்றின் பெயர்க் காரணத்தையும்  பார்ப்போம்.

துவக்கத்தில் ஐரோப்பியர்கள், சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட முப்பது நாட்கள் உடைய 10 மாதங்களைக் கொண்ட வருடத்தையேக் கொண்டிருந்தனர். குளிர் காலத்தின் நாட்கள் விடுமுறை; பெயர் குறிப்பிடப்படாமலே இருந்தன. பின்னர் இவை சூரிய அடிப்படையில் நான்கு (1,3,5,8-ஆவது) மாதங்களுக்கு 31 நாட்கள் சேர்க்கப்பட்டன (வருடத்திற்கு 304 நாட்கள்; குளிர்காலம் 61 நாட்கள்) பின்னர், கி.மு. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து குளிர்காலமும் (ஜனவரி, பிப்ரவரி) மாதங்களாகச் சேர்க்கப் பட்டு 12 மாதங்கள் ஆயின.

ஜனவரி : ஜனூஸ் என்ற ரோமக் கடவுளின் பெயரிலிருந்து வந்தது ஜனவரி. ஜனூஸ் வாயில் காப்பாலன்; அவருக்கு இரண்டு தலைகள் ஒன்று முன்னோக்கியும், மற்றொன்று பின்னோக்கியும் இருக்கும். அதாவது, ஒன்று கடந்த காலத்தையும் மற்றது வருங்காலத்தையும் காண்பதற்காக இருப்பதாக ஐதீகம்.

ஃபெப்ரவரி : இந்த மாதத்தின் பெயர் ‘ஃபெபுரா’ என்ற ரோமன் பண்டிகையின் பெயரிலிருந்து உருவானது.  இந்த பண்டிகையின் பொழுது மக்கள் தாங்கள் செய்த பாவங்களைக் கூறி அவற்றினுக்கு பரிகாரம் செய்வர்.

மார்ச் :           இது ரோமானியர்களின் போர்க் கடவுள் ‘மார்ஸ்’இன் பெயரைக் கொண்டது. ஆரம்பத்தில் இதுதான் ரோமானியர்களின் முதல் மாதமாக இருந்தது.

ஏப்ரல் :         இது ரோம வினைச்சொல் ‘Aprire‘ (பொருள்: திறக்க, ஆரம்பிக்க) என்பதில் இருந்து உருவானது. ரோமானியர்கள் வயலில் உழவு செய்யத் துவங்குவது இந்த மாதத்தில் தான். இதன் தொடர்ச்சியாகத் தான் பொதுவாக நிதியாண்டு இந்த மாதத்தி்லிருந்துத் துவங்குகிறது. சிலர் இது க்ரேக்கக் கடவுள் ‘அப்ரொடைட் (Aphrodite)’-இல் இருந்து உருவானதாகவும் கூறுவர். ஆனால், அதற்கு பெரிய முகாந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. ரோமானியர்களின் கடவுளான வீனஸுக்கு உகந்த மாதம் ஏப்ரல். வீனஸ்-க்கு இணையான க்ரேக்க கடவுள் அப்ரொடைட்.

மே:                 இது கிரேக்கக் கடவுள் மையா (Maia)-வின் பெயரிலிருந்து வந்த்து. இவளின் தந்தை அட்லஸ்; தாய் – ப்லேனி (Pleione). சில இடங்களில் இது “council of mayores” (அதாவது, மூத்தவர்களின் சபை) என்பதிலிருந்து உருவானதாகவும் கூறப்படுகிறது.

ஜூன்:                        இது ரோமானியக் கடவுள் ஜூபிடரின் மனைவியும் சொர்கங்களின் அரசியுமான ஜுனோ-வின் (சுஜாதா ஞாபகம் வருகிறதா) பெயரால் வழங்கப் படுகிறது. சிலர் இது “council of juniores” (அதாவது இளையவர்களின் சபை) என்பதிலிருந்து உருவானதாகவும் கூறுவர்.

ஜூலை:        இது முதலில் க்விண்டிலிஸ் (quintilis), அதாவது ’ஐந்தாம்’ மாதம் (மார்ச்-முதல் மாதம் என்றால் ஜூலை தான் ஐந்தாம் மாதம்) என்று தான் வழங்கப்படட்து.  அகஸ்டஸ் சீசர் பின்னர் இதை, ஜூலியஸ் சீசரின் பெயரால் ஜூலை என்று மாற்றினார்.

ஆகஸ்ட்:       இது முதலில் செஸ்டிலிஸ் (Sextilis) – ஆறாம் மாதம் என்று வழங்கப் பட்டு வந்தது. பின் அகஸ்டஸ் சீசரின் பெயரில் வழங்கப்படுகிறது. ஜூலை மாதத்திற்கு 31 நாட்கள் இருப்பதால், தன் பெயரில் இருக்கும் மாதத்திற்கும்  31 தேதி வேண்டுமென ஃபெப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை இந்த மாதத்திற்கு மாற்றியதாக ஒரு கதையும் உண்டு.

செப்டம்பர்:    செப்டம் (Septum) என்றால் ஏழு. Septemplex என்றால் ஏழடுக்கு (அ) ஏழு மடங்கு.

அக்டோபர்:   Octo என்றால் எட்டு (உதா: octopus – எட்டு கால் கடல் உயிரி).

நவம்பர்:         Novem என்றால் (லத்தின் மொழியில்) ஒன்பது.

டிசெம்பர்:       Decem என்றால் பத்து (decimal). 


6 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சீனு....

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்களுடன் புத்தாண்டை தொடங்கி விட்டீர். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
    தகவலகள் அடங்கிய அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    த.ம 1

    பதிலளிநீக்கு
  4. ரமணி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு