புதன், ஆகஸ்ட் 08, 2012

செவ்வாய்த் தீண்டி…..


            ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக…

என்று எழுதிய கவியரசர் இப்பொழுது எழுதினால் ‘செவ்வாய் போகும் இடமாக’ என்று எழுதியிருப்பார்.

நாசாவின் ‘க்யூரியாசிட்டி’ செவ்வாய் கிரகத்தை அடைந்து அதன் புகைப்படங்களை நமக்கு அளித்துள்ளது. இன்னும் 10 வருடங்களில் மனிதன் செவ்வாய் கிரகத்தை அடையலாம் என்றும் அதன் பின் குறுகிய தினங்களில் செவ்வாய் பயணம் சாத்தியப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மனித குலத்தின் இந்த செவ்வாய் பயணத்தின் தொகுப்பைப் பார்ப்போம்…

முதலில் செவ்வாய் கிரகத்திற்கென்றுத் தனியாக ஒரு விண்கலத்தை அனுப்பிய பெருமை சோவியத் யூனியனையேச் சாரும். 10.10.1960 அன்று அது ‘மார்ஸ்னிக்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. தொடர்ந்து 19.5.1971-ஆம் தேதி ‘Mars 2 Orbiter & Lander’-ஐ  அனுப்பியது. செவ்வாய்-ஐச் சுற்றிய கலம் 27.11.1971 அன்று இதன் Lander’-ஐ செவ்வாய்-இல் களம் இறக்கிய பொழுது நொறுங்கி உடைந்தது. இயற்கைப் பொருட்கள் மட்டுமே இருந்த செவ்வாயில் மனிதனால் இடப்பட்ட முதல் செயற்கை பொருள் இதுதான்.

பனிப்போர் நிகழ்ந்த காலத்தில் சோவியத் செவ்வாய் கிரகத்திற்குக் கோள் அனுப்பினால் அமெரிக்கா மட்டும் சும்மா இருக்குமா? அது 30.05.1971 அன்று ‘Mariner’  என்ற விண்கலத்தை அனுப்பியது. அது 14.11.1971-இல் செவ்வாய்-இன் வான்வெளி பகுதியை அடைந்து அதனைச் சுற்றிவந்து படங்களை அனுப்பியது. இதன் செயல்பாடுகள் 27.10.1972-இல்  கைவிடப்பட்டது. ஆனாலும் இது செவ்வாயை 2022 வரைச் சுற்றி வந்து கொண்டுதான் இருக்கும்.

1975-இல் நாசா இரண்டு ’வைகிங்’ கலங்களை அனுப்பியது. முதல் வைகிங் 20.08.1975-இல் அனுப்பப்பட்டு அதன் தரையிறங்கி (Lander) 20.07.1976 செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அது 2019 வரை செயல்படும் என்று கூறுகிறார்கள். இதுவரை அது 50000-க்கும் அதிகமான படங்களை அனுப்பியுள்ளது. இதன் பெற்று கொண்டிருக்கும் வெற்றியை முன்கூட்டியே கணித்த நாசா, தொடர்ந்து  09.09.1975 அன்று வைகிங்-2 ஐ அனுப்பியது அது 03.09.1976 அன்று செவ்வாயில் களம் இறங்கியது. இதுவும் ஒரு வெற்றிதான்.

தொடர்ந்து நாசா ‘செவ்வாய் வழிகாட்டி விண்கலம்’ (Mars Pathfinder Spacecraft)-இல் ‘Sojourner Rover’-ஐ வைத்து 04.12.1996 ஆல் அனுப்பியது. அது 04.07.1997 அன்று செவ்வாயில் களம் இறங்கியது. 06.07.1997-இல் இதன் உலாவி (Rover) செவ்வாயில் உலாவர ஆரம்பித்தது. 27.09.1997 வரை உருண்ட இது செவ்வாயின் மணல் வெளியில் சிக்கிச் செயலிழந்தது.

மற்றவர்களின் செயல்களைக் கண்ட ஜப்பான் சற்று வித்யாசமாக 04.07.1998-இல் பூமியைச் சுற்றி மற்ற நாடுகள் செயற்கைக் கோள் செலுத்துவதைப் போல் செவ்வாயைச் சுற்றிவர அதன் ‘நாசோமி மார்ஸ் ப்ரோப்’ (நாசோமி என்றால் செயற்கையான கோள் – artificial planet). இதன் முக்கியக் குறிக்கோள் செவ்வாய் கிரகத்தில் சூரிய காற்றால் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பதே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது 20.12.1998 அன்று செயல் இழந்தது.

21-ஆம் நூற்றாண்டில் முதல் முதலாக ‘Mars Odyssey’ 07.04.2011 அன்று அனுப்பப்பட்டது. 24.10.2001-இல் செவ்வாயை அடைந்த இது இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் அதிக காலமாக செயல்பாட்டில் இருப்பது இதுவே.

2003-ஆம் ஆண்டு நாசா மீண்டும் ‘Spril & Opp. Rover’ஐ அனுப்பியது. ஜனவரி, 2004-இல் செவ்வாயை அடைந்த இது ஏப்ரல், 2009 வரை சுமார் 21½ மைல்கள் (34½ கிமீ) பயணம் சென்றுத் தொடர்பை இழந்தது. ஓராண்டுக்குப் பின், 23.10.2010 அன்று இது செயல் இழந்துவிட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  

ஐரோப்பா (European Satellite Agency), ‘Beagle 2 Lander’ஐ 03.06.2003 அன்று அனுப்பியது. 19.12.2003 அன்று இதன் உலாவி தரையிறங்கும் பொழுது உடைந்தது. ஆனாலும் இந்த செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்னமும் செயல் படுகிறது. இதன் High Resolution Stereo Camera இன்னமும் படங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

04.08.2007-இல் நாசா ‘பீனிக்ஸ் மார்ஸ் லேண்டர்’ஐ அனுப்பியது. 25.05.2008 களம் இறங்கிய இதன் லேண்டர் தான் செவ்வாய் கிரகத்தில் நீர்பனி (water-ice) இருப்பதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து தான் செவ்வாயில் மனிதக் குடியேற்றம் சாத்தியம் என்பதை உலகம் உணர்ந்தது. 24.05.2010 இந்த லேண்டர் செயலிழந்தது.

12.08.2005-இல் விண்ணில் செலுத்தப்பட்டு மார்ச், 2006 இல் செவ்வாயின் வான்வெளியை அடைந்த நாசா-வின் ‘Mars Reconnaissance Orbiter’ இன்னமும் செவ்வாயைச் சுற்றி வருகிறது.

இடையில்  ரஷ்யாவும் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பினாலும் அது வெற்றிகரமாக அமையவில்லை.

இந்தியாவும் அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பவுள்ளது.

தற்போது செவ்வாயை அடைந்துள்ள ‘க்யூரியாசிட்டி’ 26.11.2011 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் தற்போதைய வெற்றி மனிதனின் செவ்வாய் பயணக் கனவை மீண்டும் புதுப்பித்துள்ளது.

செவ்வாயில் மனித வாழ்வு எப்படி இருக்கும் என்ற நாசாவின் கனவுப் படத்தை பாருங்கள்….

6 கருத்துகள்:

  1. பல புதிய விசயங்களைக் கற்றுக் கொண்டேன் சார் ... செவ்வாய் எட்டிப் பிடிக்கும் தூரம் தான்

    பதிலளிநீக்கு
  2. மிக விரிவான பயனுள்ள தகவல்கள்

    பதிலளிநீக்கு
  3. செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய வரலாறு அருமை.செவ்வாய் பற்றி நேற்று எனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.நேரம் இருப்பின் வருகை தரவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் முரளி.
      [கடந்த இரண்டு நாட்களாக சில வலைதளங்கள், தமிழ்மணம் உட்பட, திறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அது என் கணிணியில் மட்டுமா அல்லது அனைவருக்குமா என்றுத் தெரியவில்லை. சரி செய்த பின் நிச்சயம் படிக்கிறேன்]

      நீக்கு