திங்கள், நவம்பர் 12, 2012

’பத்ர’ காளி (பாகம்-1)


’பத்ர’காளியைப் பற்றிப் பார்க்கும் முன் முதலில் தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளிப் பண்டிகை என்றால் பொதுவாக இந்தியா முழுவதும் கொண்டாடப் பட்டாலும் அதன் பாரம்பரியம் பொதுவாக வேறுபட்டே வந்துள்ளது.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, நவராத்திரி என்பது இராம-இராவண யுத்தமாகவும் அதைத் தொடர்ந்து விஜயதசமி தினம் இராமர் இராவணனை அழித்த தினமாகக் கொண்டாடப்படுவதை எனது இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்தேன்.

இடையில் 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இராமர் நாடு திரும்பாவிடில் தீயில் புகுவதாக பரதன் சூளுரைத்திருந்தான். இராவணனை அழித்து விபீஷணனுக்கு முடிசூட்டிய இராமருக்கு பரதனின் இந்த சூளுரை நினைவிற்கு வந்த நிலையில் உடனே இராவணன் குபேரனிடமிருந்து அபகரித்த புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பினார்.

அவ்வாறு இராமர் அயோத்தி திரும்பிய (சந்திரமாத முறை) கார்த்திகை மாத ’அமாவாசை’ தினமே தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாகக் கூறுவர்.

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை தீபாவளிக் கதையாகக் கூறப்படுவது நரகாசுர வதமே. நரகாசுரன் தேவர்களை வென்று பின்னர்16000 தேவ  கன்னியரைச் சிறைப்பிடிக்க, அவர்கள் க்ருஷ்ணரை வேண்டிய நிலையில் அவர்களைக் காக்க க்ருஷ்ணர் நரகாசுரனுடன் போரிட்டதாகவும் போரில் க்ருஷ்ணர் மூர்ச்சையடைய அவருடன் தேரோட்டிச் சென்ற சத்யபாமா, தான் பூதேவியாக இருந்த பொழுது ஈன்ற நரகாசுரனை அழித்ததையே தீபாவளியாகக் கொண்டாடுவதாக நம்பிக்கை.

அதனாலேயே நம் தமிழ்நாட்டில் விடியற்காலையில் (சதுர்தசி திதி இருக்கும் பொழுதே) கொண்டாடப்படும் தீபாவளி, வட இந்தியாவில் மாலை இருள் கவியத் துவங்கும் நேரத்தில் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படும். தீபாவளி என்பதற்கு உண்மைப் பொருளான தீபங்கள் வரிசையாக ஏற்றப்பட்டிருக்கும்.

தில்லி வந்த புதிதில் என் நண்பர், தில்லியில் இருக்கும் வட இந்தியர்கள் சோம்பேறிகள் [இவ்வாறு கூற காரணம், தில்லியில், சாதரணமாக தினசரி நகர பேருந்து சேவைகள் காலை 6-மணிக்குப் பிறகே துவங்கி இரவு 11 மணிவரை இருக்கும்; தமிழகத்தில் 4 மணிக்குத் துவங்கி இரவு 10 மணி வரை இருக்கும். அதே போல் கடைகள் 10-11 மணிக்கு மேல் தான் திறக்கும்; தமிழகத்தில் காலையிலேயே கடைகள் திறந்திருக்கும்] எனவே நம் தமிழகத்தில் காலையில் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட்டு அந்த வெடி சத்தம் தில்லி வந்து மாலையில் சேர இவர்கள் தீபாவளி கொண்டாடத் துவங்குவர் என்று வேடிக்கையாகக் கூறுவார்.

ஆனால் இதன் உண்மைக் காரணம், நரகாசுரன் அழிந்த தினம் ‘நரக சதுர்தசி’; அது நம் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இராமர் அயோத்தி திரும்பிய தினம் அமாவாசை; அது வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

இப்பொழுது பத்ரகாளி என்று எழுதி தீபாவளி பற்றி எழுதியிருக்கிறேனே என்று நினைப்பீர்கள். அந்த விஷயத்திற்கு வருவோம்.

வங்காளத்தில் நவராத்திரி துர்கா பூஜையாக விமரிசையாகக் கொண்டாடப் படுவது நாம் அனைவரும் அறிந்ததே. சக்தி வழிபாட்டில் சிறந்த அம்மாநிலத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப் படுகிறது.

இதைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்....

அதுவரை அனைவருக்கும் மீண்டும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

15 கருத்துகள்:

  1. தீபாவளி வாழ்த்துக்கள்.தீபாவளி தொடர்பான விளக்கம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் முரளி!

      நீக்கு
  2. தீப ஒளித் திருநாள் பற்றிய கட்டுரை பிரகாசிக்கிறது ஸ்ரீனி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் கணேஷ்!

      நீக்கு
  3. விளக்கத்திற்கு மிக்க நன்றி...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் தம வாக்கிற்கும் நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  4. வங்காளத்தில் நவராத்திரி துர்கா பூஜையாக விமரிசையாகக் கொண்டாடப் படுவது நாம் அனைவரும் அறிந்ததே. சக்தி வழிபாட்டில் சிறந்த அம்மாநிலத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப் படுகிறது ..

    சுவாரஸ்யமான தகவல் ...

    மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் வெங்கட்!

      நீக்கு
  6. பத்ர காளியைப் பற்றி தொடரை நன்நாளில் ஆரம்பித்து இருக்கிறீர்கள்.
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு