செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

கலவை (2)

நீதிபதி சௌமித்ரா சென்னின் “impeachment தீர்மாணம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது. முதல் நாள், சென் தன்னிலை விளக்கம் அளித்தார். தன் மேல் சாற்றப் பட்டிருக்கும் (நிதி முறைகேடு) குற்றச்சாட்டின் காலம் தான் பதிவியேற்பதற்கு முன்னதானது எனவும் அவை சரிவர நிரூபிக்கப் படவில்லை (வங்கி குறிப்புகள் கிட்டவில்லை) தான் நீதித்துறையைத் தூய்மை படுத்துதல் என்ற பெயரில் பலி ஆடு ஆக்கப்ப்டுவதாகவும் திறமையாக வாதாடினார். அதைக்   கேட்டவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு அளித்திருப்பார்கள். அடுத்த நாள், சமாஜ்வாதி உறுப்பினர் சதீஷ் சந்தர் யாதவ் அவருக்கு ஆதரவாக (தீர்மாணத்தை எதிர்த்து) நன்றாக வாதாடினார். ஆனால் அவர்களின் வாதத்தை கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, பாஜகவின் அருன் ஜெட்லி ஆகியோர் திறமையாக தகுந்த ஆதாரங்களோடு நன்றாகவே தகர்த்தனர். சென்னின் விளக்கத்தில் இருந்த திசை திருப்பல்களையும் பொய்களையும் தகுந்த ஆதாரத்துடன் உடைத்தனர். இறுதியில் சமாஜ்வாதி ஜனதாகட்சி தவிர அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அடுத்தவாரத்தில் இது மக்களவையிலும் வர உள்ளது. அங்கு விரிவான வாத விவாதங்கள் இருக்குமா என பார்ப்போம். இந்த (மாநிலங்கள் அவை) விவாதங்களைப் பார்த்தவர்கள் நிச்சயமாக நாடாளுமன்ற விவாதத்தின் தேவையை உணர்ந்திருப்பார்கள். என்ன இவர்கள் - மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் - பின் பக்க வாசல் வழியாக நாடாளு மன்றம் வந்தவர்கள் என விமர்சிக்கப்படுபவர்கள். அது ஒன்று தான் குறை.

அடுத்து, ஆந்திராவில் ஜகன்நாத ரெட்டியின் வீடு(கள்), அலுவலகங்கள் மற்றும் சாக்ஷி தொலைக்காட்சி அலுவலக சிபிஐ சோதனை விவகாரத்தில், அவரின் ஆதரவாளர்கள் பதவியைத் துறந்துள்ளனர் – YSR-ன் பெயர் குறிப்பிடப்பட்ட்தால். என்னைப் பொருத்தவரை அவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஏனெனில், ஜகன் சமீபத்தில் தான் தேர்தலில் மிக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு, காங்கிரஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வேறு கட்சிகள் வலை வீசும். அதில் தங்களுக்கு பங்கும் கிட்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். மேலும் அவரின் பெயரிலா (Benami) சொத்துக்களிலும் தொடர்பு இருக்கிறதோ என்னவோ? பார்ப்போம்.

அடுத்து, முதல்வர் ஜெ, தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றி உள்ளார். இதற்கு இப்பொழுது எந்த தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை. தவிரவும், சுதந்திர தின உரையில் மக்கள் கடந்த 5 ஆண்டு ஆட்சி கொடுமைகளிலிருந்து விடுதலை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுக்குப் பிறகு இது போல வேறு ஒரு சுதந்திர தினமும் மக்களுக்கு கொண்டாட வேண்டிவரும். இன்னமும் அப்படியேதான் இருக்கிறாரா அல்லது பழைய பழக்கம் அவ்வப்போது தலை தூக்குகிறதா என்று தெரியவில்லை.

நான்காவது போட்டியிலும் தோல்வி. 20 ஆண்டுகளுக்கு பிறகு முழு வெள்ளையடிக்கப் பட்டுள்ளனர். காரணம், 4 வேகப் பந்தாளர்கள் இல்லாமல் கலம் இறங்கியது; மட்டையாளர்களின் Out of form. (எட்டு innings-ல் ஒன்றில் தான் 300 ஓட்டம்); போதிய உடல் தகுதி இன்றி வீர்ர்களை கலம் இறக்கியது. முனைப்பில்லாமல் ஆடியது (குறிப்பாக இரண்டாவது போட்டியில் 2 நாள் முன்னணி வகித்தும் வாய்ப்பை நழுவ விட்டது). தோனி இப்பொழுது யாரும் தூங்கவில்லை அதனால் Wake-up Call தேவையில்லை என்று கூறியுள்ளார் அதுவும் சரிதான் Nightmare இருக்கும் பொழுது எப்படி தூக்கம் வரும். இப்பொழுது பயிற்சி ஆட்டங்களில் – சிறிய் அணிகளுடன் தான் என்றாலும் – வெற்றி பெற்றிருக்கிறார்கள். பார்ப்போம்.

3 கருத்துகள்:

 1. //தன் மேல் சாற்றப் பட்டிருக்கும் (நிதி முறைகேடு) குற்றச்சாட்டின் காலம் தான் பதவியேற்பதற்கு முன்னதானது//

  நீதிபதிகள் நியமனத்திலேயே எங்கேயோ குளறுபடிகள் இருக்கிறதோ?

  //அடுத்து, முதல்வர் ஜெ, தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றி உள்ளார். இதற்கு இப்பொழுது எந்த தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை.//

  தமிழ்ப் புத்தாண்டை தேவையில்லாமல் அத்’தை’க்கு மாற்றியதால் இப்போது ‘சித்தி’ரைக்கு மாற்ற வேண்டிய தேவை வந்ததோ?

  (மொத்தத்தில் சோமபானமும் சுராபானமும் சேர்ந்து அடிச்சா மாதிரி இருக்குதய்யா!)

  பதிலளிநீக்கு
 2. கிரிக்கெட் இப்போதெல்லாம் பார்ப்பதே இல்லை சீனு.... பிடிப்பதில்லை...

  சென் - பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என....

  நல்ல கலவை...

  பதிலளிநீக்கு
 3. நன்றி பத்து.

  வெங்கட், நீ சாதாரணமாகவே கிரிக்கெட் அவ்வளவாகப் பார்க்கமாட்டாய் என்பது தெரியுமே. [வேறு வழியில்லாமல் எங்களால் பார்க்கவேண்டி இருந்திருக்கும்]. இப்பொழுது அதுவும் இல்லை அல்லவா?

  பதிலளிநீக்கு