வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

கலைஞருக்கு கலைஞர் தொலைக்காட்சி நடத்திய பாடம்


கலைஞருக்கு கலைஞர் தொலைக்காட்சி நடத்திய பாடம்
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `வெற்றிச் சரித்திரம்'. இந்த நிகழ்ச்சி உலக வரலாற்றை, 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொட்டு மனித இனம், பல்வேறு அரசியல் மத கலாச்சாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு உருமாறி வருவதை, படக்காட்சிகளோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது.  வரலாறு பயிலும் மாணவர்களுக்கு நிச்சயமாகவே ஒரு நல்ல பயன் தரும் நிகழ்ச்சி.

நானும், முடிந்த வரை தவறாமல் பார்த்துவிடுவேன்.

நேற்று முன் தினம், இந்நிகழ்ச்சியில் ஜூலை, 1943-ல் இத்தாலி பிரதமர் முசொலினியை அந்நாட்டு அரசர் (மூன்றாம் விக்டர் இமானுவெல்) தன் அரண்மனைக்கு அழத்ததையும், அங்கு அவர் தன்னை போர் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளவே அழைக்கிறார் என்று நினைத்துச் சென்ற முசொலினியை அவர் உடனே பதவி நீக்கம் செய்து பெட்ரொ பதோக்லியோவை நியமித்ததை விவரித்தார்கள்.

மேலும், முசொலினியை இத்தாலிய ராணுவத்தை வைத்து கைது செய்த்தையும் விவரித்தனர். அப்போது இத்தாலிய மக்கள் தன்க்கு ஆதரவாக கிளர்ந்து எழுவார்கள் என முசொலினி எண்ணியதாகவும் ஆனால், அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக யாரும் சின்ன எதிர்ப்பைக் கூட காட்ட்வில்லை என விவரித்தனர்.

இத்துடன் விட்டிருந்தால் இந்த பதிவு எழுதவே அவசியம் இருந்திருக்காது. அப்போது, வர்ணனையாளர் மேலும் ஒரு வார்த்தை கூறினார் அதுதான் இந்த பதிவு எழுதவே தூண்டியது. அந்த வார்த்தை,

“மக்களுக்காக ஏதாவது தியாகம் செய்து சிறைச் சென்றால் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். ஆனால் இவரோ, தன் சொந்த வளர்ச்சிக்காக சர்வாதிகாரத்திற்காக அதிகாரத்தை தவறாக பயன் படுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டுளார். எனவே மக்கள் இவருகாக எப்படி கிளர்ந்து எழுவார்கள்என்பதே.

இதைக் கேட்டவுடன் எனக்கு இது அவர் முசொலினிக்காகக் கூறினாரா அல்லது தன் தலைவருக்காகக் கூறினாரா என்பது இன்னமும் புரியவில்லை.

ஒருவேளை இது கலைஞருக்கு கலைஞர் தொலைக்காட்சி நடத்தும் பாடமா?

இதை கலைஞர் பார்த்திருப்பார் அல்லவா, இல்லை மானாட மயிலாட மட்டும் தான் பார்ப்பாரா?

பி.கு.: இந்நிகழ்ச்சிக்கான வீடியோ இணைப்பை வலையில் நாள் முழுக்கத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவே இல்லை. எல்லா தொ(ல்)லைக்காட்சித் தொடர்களுக்கும் கிடைக்கிறது. அது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக