புதன், ஆகஸ்ட் 17, 2011

லோக்பால்


லோக்பால்

இந்த வாரம் செய்திகளைப் பொறுத்தவரை “அன்னா ஹசாரேவாரம். குறைந்த்து ஒரு வாரத்திற்கு ஹசார்(ரே) (இந்தியில் ஹசார் என்றால் ஆயிரம் என்று பொருள்) முறை  “Flash News” போடலாம். நல்ல தீனி.

இந்நிலையில் அன்னாவைப் பற்றியும் (அவருடைய அறக்கட்டளையில் நடந்துள்ள அல்லது நடந்ததாகக் கூறி) செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் என்னைப் பொருத்தவரை இப்பொழுது நாம் பார்க்க வேண்டியது அவர் எப்படிப் பட்டவர் என்பது அல்ல. அவருடைய போராட்டம் எதற்கு , அதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம், அதன் பின் உள்ள குறிக்கோள் ஆகியவையே.

முதலில் இது லோக்பால் சட்ட வரைவு 1968-ல் சாந்தி பூஷன் அவர்களால் கொண்டு வரப்பட்ட்து. ஆனால், 1969-ல் இது மாநிலங்கள் அவையால் நிராகரிக்கப் பட்டது. இதற்கு சற்று முன் பார்த்தோமானால், இது 1966-ல் மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் நிர்வாக சீரமைப்பு ஆணையம் (Administrative Reforms Commission) தன் இடைக்கால அறிக்கையில், பொது மக்களின் குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்வு காண, – (1) லோக்பால் (Ombudsman; தமிழில் தெரியவில்லை அறிந்தவர்கள் கூறவும்) (2) லோகாயுக்த் (மக்கள் ஆணையம்!!!)  - என்ற சுதந்திர அமைப்புகளைத் (தேர்தல் ஆணையம், உச்ச நீதி மன்றங்கள் போன்றவை) துவங்க பரிந்துரத்தது. அதன் தொடர்ச்சியாகவே மத்தியில் லோக்பாலும் மாநிலங்களில் லோகாயுக்தாவும் சட்ட வரைவுகளாக்க் கொண்டுவரப்பட்டன.

இந்த லோக்பால் வரைவு இதுவரை 10 முறை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இங்கிலாந்து சென்ற இந்திய அணிபோல் “ரொம்ப நல்லவனாகஇருந்துள்ளது.

ஆக, இந்த சட்ட்த்தின் தேவை இன்று திடீரென எழுப்பப் பட்ட்து அல்ல. இதன் பயனை (லோகாயுக்த்) சில தினம் முன்னர் தான் கர்நாடகத்தில் பார்த்தோம். மாநிலங்களுக்கு லோகாயுக்த் தேவை என்றால் மத்தியில் லோக்பாலும் தேவை. அதில் பிரதமரும் நீதித்துறையும் சேர்க்கப்படவில்லை என்றால் அது வெறும் கண் துடைப்பே. அதனால் தான் ஜன் லோக்பல் மசோதா (இது வழக்குரைஞர் சாந்தி பூஷன்; ப்ரகாஷ் பூஷன் (மகன்) , கர்நாடக லோகாயுக்த் தலைவர் ஹெக்டே, அர்விந்த் கெஜிர்வால் ஆகியோரையும் உறுப்பினர்களாகக் கொண்ட) தனியார் குழுவினால் வரையப்பட்ட வடிவத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்த வேண்டும்.

இதில் அன்னா ஹசாரே எங்கே வந்தார் என்று பார்ப்போம்.

அன்னா ஹசாரே 1991-லிருந்தே மராட்டிய மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக “ப்ரஷ்டாசார் (ஊழல்)  விரோதி ஜன் அந்தோலன்என்ற இயக்கதின் மூலம் பல்வேறு பிரச்ச்சனைகளுக்காக போராடியவர்.

அதன் தொடர்ச்சியாக 2000 ஆண்டு துவக்கத்தில் மராட்டிய மாநிலத்தில்தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கப் போராடினார். இன்று நம்மிடம் உள்ளதகவல் உரிமை சட்டத்தின்முன் மாதிரியே அதுதான். மராட்டிய மாநில சட்ட்த்தின் மாதிரியை வைத்து தான் இந்திய அரசே 2005-ல் அச்சட்ட்த்தை இயற்றியது. மேலும், முதலில் அச்சட்ட்த்தில் அரசாங்க கோப்புகளில் அதிகாரிகளின் குறிப்புகளை (Notes என்று அரசு அலுவலகங்களில் கூறுவர்) சேர்க்க மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து 2006 ஆகஸ்த் 9-ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். அது 19-ம் தேதி அரசு பணியும் வரைத் தொடர்ந்தது.

அன்னாவைக் குறை கூறுபவர்களின் முக்கிய குற்றச்சாட்டு அவருடைய அறக்கட்டளைகளில் நடந்துள்ள ஊழல்களைப் பற்றிய சாவந்த் கமிட்டியின் அறிக்கையும் அவர் பிறந்த தினக் கொண்டாடங்களுக்கு அறக்கட்டளை நிதி பயன்படுத்தப் ப்ட்டுள்ளது என்பதே ஆகும். இந்த சாவந்த் கமிட்டியே தேசியவாத காங்கிரஸின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக அன்னா மேற்கொண்ட போராட்டங்களை அடுத்து அப்பொழுதைய முதல்வர் ஷிண்டே-வால் அமைக்கப்பட்டது என்பது தான் இதிலுல்ல முகைநரண். (இதனால் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு பொய் என்பது என் கருத்தல்ல. குற்றச்சாட்டு உண்மையென நிறுவப்பட்டால் – அதைப் பற்றி விசாரிக்க வேண்டியது அரசின் கடமையும் கூட - அவரும் தண்டிக்கப் பட வேண்டியவரே.).

ஆக அவரின் முந்தைய நோக்கமான தகவலறியும் உரிமை சட்டத்தின் பலன்களை பெற்றுள்ள நாம் இப்போது அவரின் நோக்கத்தை வேறாக நினைக்கவில்லை.

மூன்றாவதாக அவரின் போராட்ட முறை, இது அவரால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழியை சமீபத்தில் சில தலைவர்கள் (வேறு யார்? – ராம்தேவ், குமாரசாமி மற்றும் நம் கலைஞர்) கொச்சைப் படுத்தியிருந்தாலும், இதைத் தவிர வேறு சிறந்த வழி இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே இதற்கு எனது ஆதரவு உண்டு.

4 கருத்துகள்:

 1. நல்ல அலசல் சீனு....

  அவசரம் அவசரமாக எழுதி பதிவிட்டாயோ? அரசாங்கமே கோப்பை ஏந்துகிறதே? :) [ //அரசாங்க கோப்பைகளில் அதிகாரிகளின் குறிப்புகளை (Notes என்று அரசு அலுவலகங்களில் கூறுவர்) //]

  இரண்டு நாட்களாக ராஜ்காட் அருகில் தான் நாங்களும் இருக்கிறோம்... காந்தி தர்ஷன் அலுவலகத்தில்... பயிற்சி நிமித்தமாய்...

  பதிலளிநீக்கு
 2. நன்றி வெங்கட்.

  எழுதிவிட்டு திரும்ப படிப்பதற்குள் ஒர் அவசர வேளை. அப்படியே வெளியிட்டுவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இப்பொழுது சரி செய்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 3. அருமையாக சொல்லியுள்ளீர்கள் .
  நல்ல பதிவு .
  பகிர்வுக்கு நன்றி .

  பதிலளிநீக்கு