வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கலவை – 4


கலவை – 4

கூடங்குளத்தில் அணு ஆலையின் பணிகளை நிறுத்திவைக்குமாறு சட்டசபை தீர்மாணம் இயற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் (தற்காலிகமாக) கைவிடப் பட்டுள்ளது. இதில் மாநில அரசு முதலில் தடுமாறினாலும் பின் சுதாரித்துக் கொண்டது. இருந்தாலும் இதை முழு வெற்றி என்று கூறமுடியாது. இதில் மத்திய அரசு என்ன நிலை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்த இடைவெளியை மத்திய அரசுடன் போராட தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

அன்னா ஹசாரே-வை என்ன தான் குறை கூறினாலும், அவர் மக்களை ஒன்று படுத்தி அகிம்சை முறையில் போராட ஒரு ஊக்கம் கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த ஆயுதத்தை நம் தலைவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். அதில் தான் பிரச்சனை.

சென்ற வாரம், மத்திய திட்டக் குழு வறுமைக் கோட்டை வரையறுக்க ஒரு நாளைக்கு 32 ரூபாய் வருமானம் இருந்தால் அவர் ஏழை என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்று கூறியுள்ளது. அது சரி திட்ட குழு தலைவரின் (வேறு யார் நம் பிரதமர் தான்) ஒரு நாள் சம்பளம் அதைவிட வெறும் 105 மடங்கு (3333 ரூபாய்) தான்!!! அது சரி அவர் என்ன வேளையா செய்கிறார். ஒரு stop-gap  ஏற்பாடுதானே.

மத்திய நிதி அமைச்சர் 2ஜி ஊழலில் சிதம்பரத்தையும் குறை கூறியுள்ளார். சு.சாமி நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தேர்தலில் அவர் வெற்றி(!!!!) பெற திமுக பெரிய(!!!) பணியாற்றி உள்ளது. அவர் செய்நன்றி மறக்காதவரோ?

புதிதாக ஆரம்பித்துள்ள “புதிய தலைமுறைசெய்தி சேனல் நன்றாக உள்ளது. ஒரு பக்க சார்பு செய்திகளையே கேட்டுக் கேட்டு காது செவிடான நிலையில் தற்போது சற்று பரவாயில்லை. இப்படியே நீடிக்குமா என பார்ப்போம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இன்று இறுதிப் போட்டி. பொதுவாக சாய் சரண் முதலிடம் பெறுவார் என்று தான் நினைக்கிறேன். சத்யா-வும் நன்றாக பாடுகிறார்; குறிப்பாக க்லாசிகலில்; மற்றவற்றில் சற்று பரவாயில்லை. சாய் அனைத்திலும் நன்றாகப் பாடுகிறார்.

கிரிகெட்டில் இலங்கையும் (அவர்கள் மண்ணிலேயே) தொடரை இழந்துள்ளது. சரியான ஸ்பின் (ஹெரத்தை தவிர) இல்லாததுதான் முக்கிய காரணம். மெண்டிஸ்-க்கு என்ன ஆயிற்று. கடைசி போட்டியை இலங்கை வெல்லும் என நினைத்தேன். நான்காம் நாளில் (குறிப்பாகத் துவக்கத்தில் மெதுவாக ஆடி) சொதப்பினார்கள்.

நேற்று இந்திய முன்னாள் அணித்தலைவர் மன்சூர் அலிகான் பட்டோடி காலமானார். அதிரடி தலைவர். சாதாரணமாக இருந்த இலங்கை அணி ரனதுங்க தலைமையில் எப்படி உலக தர அணியாக மாறியதோ அதுபோல (டெஸ்டில்) இந்திய அணி மாற்றத்திற்கு அவர் தான் முதல் காரணம். நான்கு சுழல் பந்து வீர்ர் அணியை அறிமுகப் படுத்தியவர். அவர் குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

7 கருத்துகள்:

  1. //மத்திய திட்டக் குழு வறுமைக் கோட்டை வரையறுக்க ஒரு நாளைக்கு 32 ரூபாய் வருமானம் இருந்தால் அவர் ஏழை என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்று கூறியுள்ளது.//

    என்ன செய்வது! ரொட்டி இல்லாவிட்டால் என்ன, கேக் சாப்பிடுங்கள் என்று சொல்லும் ராஜாக்களும், ராணிகளும்தான் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடுகிறார்கள்.

    //ஒரு பக்க சார்பு செய்திகளையே கேட்டுக் கேட்டு காது செவிடான நிலையில்....//

    மாலை 7.00 மணிக்கு ‘கலைஞர்’ செய்திகளை கேட்டு விட்டு உடனே 7.30 க்கு ‘ஜெயா’ செய்திகளை கேளுங்கள். வேறென்ன பொழுது போக்கு வேண்டும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கலவை சீனு.... வறுமைக்கோட்டிற்கான 32 ரூபாய் லிமிட் :(

    பதிலளிநீக்கு
  3. //மாலை 7.00 மணிக்கு ‘கலைஞர்’ செய்திகளை கேட்டு விட்டு உடனே 7.30 க்கு ‘ஜெயா’ செய்திகளை கேளுங்கள். வேறென்ன பொழுது போக்கு வேண்டும் உங்களுக்கு. //

    அட பத்து நீங்க வேற,
    இப்பொழுது ”கலைஞர்” செய்தி இயக்குநரும் “ஜெயா” செய்தி இயக்குநரும் தங்கள் “script" களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டுள்ளனர். [புதிதாக வேறு “தயாரிக்க” வேண்டாமே அதனால்.]

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் வெங்கட் அப்படிதான் சொல்கிறார்கள். ஆனால், சட்டசபை/நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மட்டும் அடிக்கடி உயர்கிறது. அது எப்படி?

    பதிலளிநீக்கு
  5. கலவை நன்றாக உள்ளது.
    புதியதலைமுறை செய்தி சேனல் உங்க வீட்டில் வருகிறதா?

    சத்யா தான் இரண்டாவது இடம் பெறுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் மூன்றாவது இடம். :(

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஆதி,

    சன் DTH-ல் புதிய தலைமுறை கொடுத்துள்ளார்கள். தில்லியில் லோகல் கேபிளை பொறுத்த வரை அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

    இறுதிப் போட்டியில் பாடிய பாடல்களை மட்டும் வைத்து கணக்கிட்டிருந்தால் சத்யா முதலிடமும் பூஜா இரண்டாமிடமும் பிடித்திருக்க வேண்டும். ஆனால், ஓட்டுகளின் அடிப்படை என்பதால் சத்யாவிற்கு நாலாம் இடம் தாம் கிடைத்திருக்கும். ஆனால், அவரின் அன்றைய பாடல் அவருக்கு ஒரு இடம் முன்னேற உதவியிருகிறது.

    மற்றபடி, விஜய் டிவியின் பரிசுகள் எப்பொழுதும் கடுமையான விமர்சனங்களையே பெறுகின்றன. ஆனாலும் அவர்கள் அதன் குறைகளை சரி செய்ய முயற்சிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  7. எங்க வீட்டில் TATA SKY. அதில் இந்த சேனல் வரவில்லை. அதான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு