Date 
 | 
  
MJD 
 | 
 
2008-12-31 
 | 
  
54831 
 | 
 
2005-12-31 
 | 
  
53735 
 | 
 
1998-12-31 
 | 
  
51178 
 | 
 
1997-06-30 
 | 
  
50629 
 | 
 
1995-12-31 
 | 
  
50082 
 | 
 
1994-06-30 
 | 
  
49533 
 | 
 
1993-06-30 
 | 
  
49168 
 | 
 
1992-06-30 
 | 
  
48803 
 | 
 
1990-12-31 
 | 
  
48256 
 | 
 
1989-12-31 
 | 
  
47891 
 | 
 
1987-12-31 
 | 
  
47160 
 | 
 
1985-06-30 
 | 
  
46246 
 | 
 
1983-06-30 
 | 
  
45515 
 | 
 
1982-06-30 
 | 
  
45150 
 | 
 
1981-06-30 
 | 
  
44785 
 | 
 
1979-12-31 
 | 
  
44238 
 | 
 
1978-12-31 
 | 
  
43873 
 | 
 
1977-12-31 
 | 
  
43508 
 | 
 
1976-12-31 
 | 
  
43143 
 | 
 
1975-12-31 
 | 
  
42777 
 | 
 
1974-12-31 
 | 
  
42412 
 | 
 
1973-12-31 
 | 
  
42047 
 | 
 
1972-12-31 
 | 
  
41682 
 | 
 
1972-06-30 
 | 
  
414 
 | 
 
இன்று (ஜூன் 30, 2012) இரவு ஒருங்கிணைந்த
சர்வதேச நேரத்தில் (Coordinated Universal Time), சுருக்கமாக UTC என்று கூறுவர், அது
இரவு 11.59.59 நொடியைத் தொட்டவுடன் ஒரு நொடி நிறுத்தி வைக்கப்படும் (அல்லது அது 11.59.60 என்று ஒரு தனி நொடியாகக் காட்டப்படும்). மீண்டும் ஒரு நொடி
கழித்து ஜூலை 1-ஆம் தேதி 00.00.00 (நள்ளிரவு 12.00.00 மணி) ஆகத் துவங்கும்.
அது ஏன்?
சாதாரணமாக உலக அளவில் பொது நேரமாக ஏற்றுக்
கொள்ளப் பட்ட நேரம் GMT என்று அழைக்கப்படும் க்ரீன்விச் சராசரி நேரம். அது இந்திய நேரத்தை
விட 5.30 மணி நேரம் பிந்தையது. 
1961-ஆம் ஆண்டு முதல் அணுக் கடிகாரத்தைத்
பயன்படுத்தத் துவங்கிய போது ஒரு நாளில் 86400-ல் ஒரு பங்கு (1/86400) ஒரு நொடி என்றக்
கணக்கின்படி கடிகாரம் உருவாக்கப்பட்டது. அது முதல் GMT-க்கு பதில்   UTC-யே பொது
நேரமாகக் கொள்ளப்படுகிறது.  
ஆனால், பூமியின் சுழர்ச்சி ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
  அது பூமியின் பனி உறைவு அதனால் ஏற்படும் அலை வேக மாற்றம் மற்றும் பூமி மையத்தின்
  (Core) வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வேகம் குறைவதாகக் கணக்கிட்டுள்ளனர். எனினும்,
  இந்த வேகக் குறைவை கணிப்பது கடினம். ஏனென்றால் மேற்கூறிய காரணிகள் வெவ்வேறு சமயங்களில்
  வெவ்வேறாக இருப்பதால்.
எனவே, இதைச் சமச்சீர் செய்ய பூமியின்
சுழற்ச்சியில் ஏற்பட்ட நேரக் குறைவைக் கணக்கிட்டு அது மொத்தமாக ஒரு நொடிக்கு அதிகமாக
ஆகும்  பொழுது அந்த ஆண்டு ஜூன்-30 அல்லது டிசம்பர்-31
ஒரு நொடி அதிகமாகக் கணக்கிடப்படுகிறது. இதை ’லீப் நொடி’ என்று கூறுகிறார்கள்.
1971-ஆம் ஆண்டு முதல் அமுல் படுத்தப்பட்ட லீப் நொடிகளின்
பட்டியல் இது. [இதில் MJD என்று கொடுக்கப்பட்டது மாற்றியமைக்கப்பட்ட ஜூலியன் தினம்
(Modified Julian Day)]

நல்ல தகவல்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குநின்ற ஒரு நொடியினைப் பற்றி முழுவதும் படித்து தெரிந்து கொள்ள எனக்கு பல நொடிகளாயிற்று. நல்ல தகவல்கள். வாழ்க!
பதிலளிநீக்குநன்றிகள் பத்து.
பதிலளிநீக்குஇன்று (ஜூன் 30, 2012) ..இது இன்னிக்கு போட்ட பதிவா...இல்லே ரொம்ப அட்வான்ஸ்டு டா இருக்கீங்களா
பதிலளிநீக்குஇது 30.06.2012 அன்று இரவு 11.59 (IST) வெளியிடப்பட்டது.
நீக்கு