புதன், அக்டோபர் 03, 2012

காந்தி தேசப் பாரம்பரியம்


பீனிக்ஸ் குடியிருப்பு….
பீனிக்ஸ் குடியிருப்பில் காந்தியடிகள் வாழ்ந்த வீடு

1904-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிகாவின் டர்பன் நகரில் இந்த இடத்தில் தான் தன் அகிம்சைப் போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தார் மஹாத்மா காந்தி.

நடால்-குவாஜுலூ வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த இடத்தைத் தற்பொழுது பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் காந்தியடிகளின் நண்பரும் முதல் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் தலைவருமான ஜான் ட்யூப்(Dube) வாழ்ந்த இடமும் உள்ளது. 1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் முதல் மக்களாட்சித் தலைவரான நெல்சன் மண்டேலா முதல் முறையாகக் தன் வாக்கைப் பதிவு செய்த இடமும் இந்த வழித் தடத்தில் தான் உள்ளது. இந்த இடத்தில் தற்போது அவரது வெண்கலச் சிலையும் நிறுவப் பட்டுள்ளது.

காந்தியடிகள் இந்த இடத்தில் தான் தன் 21 வருட வாழ்க்கையைக் கழித்தார். இங்கிருந்த பொழுது இவ்விடத்தின் பூர்வ குடிகளான ஜுலூ இனத்தவர்க்காகவும் பிரிடிஷாருடன் போரிட்டுள்ளார்.

1906-ஆம் ஆண்டு ஜுலூ இனத்தவர்கள் ஆங்கில அரசின் வரிவிதிப்பை எதிர்த்து ’பம்பாத்தா’ (Bambatha) போராட்டம் நடத்தினர். இதைப் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாற்றி அகிம்சைப் போராட்டமாக மாற்றியவர் காந்தியடிகள் தான். இது தான் பிற்காலத்தில் அவரது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கும் அடிப்படை என்றால் அது மிகையாகாது.

இந்த பீனிக்ஸ் குடியிருப்பிலிருந்து தான் காந்தியடிகள் 05.03.1913 அன்று ‘நீங்கள் பலவீனமானவர் என்ற எண்ணத்தைத் தவிர்தால் சக்தி வாய்ந்தவர் ஆவீர்கள்’ என்று கூறினார். இங்கிருந்து ‘இந்தியக் கருத்து’ (Indian Opinion) என்றப் பத்திரிக்கையையும் நடத்தினார். காந்தியடிகளின் நண்பர் திரு.ட்யூப் ஆஹ்லஞ்ச் பயிலகம் (Ohlange Institute) என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த வழித்தடம் முழுவதும் இது போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளதால் இந்த வழித்தடம் முழுவதையும் சுற்றுலாச் செயல்களை மேம்படுத்த பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

காந்தியடிகளால் இந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகிம்சை முறைப் போராட்ட பாரம்பரியம் நம் இந்திய விடுதலையை மட்டுமன்றி இந்தத் தென் ஆப்பிரிகா-வின் கருப்பின மக்களின் விடுதலைக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. எனவே இந்தியர்கள் மட்டும் தங்களின் பாரம்பரியம் காந்தி வழி என்று சொந்தம் கூற முடியாது. இந்த தென் ஆப்பிரிகர்களும் காந்தி தேசப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களே.

2 கருத்துகள்:

  1. உண்மைதான் காந்தி சகாப்தம் தொடங்கியது தென்னாப்ரிக்காவில்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தியடிகளின் பொதுவாழ்வு இங்கு தான் ஆரம்பித்தது. ஆனாலும் அவரது அகவாழ்க்கை அவரது அன்னையிடம் இருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும். அதனால் தான் லண்டனில் தன் அன்னைக்குச் செய்த சபதத்தை மீறாமல் இருக்கும் உறுதியைப் பெற்றார்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு