Never think
that war,
No matter how necessary, nor
justified,
Is not a Crime
- Ernest Hemigway
[என்னதான் தேவை என்று நிறுவினாலும் எவ்வளவுதான் ஞாயப்படுத்தினாலும்,
போர் குற்றமற்றது என்று எண்ணிவிடக் கூடாது]
1914-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் நாள்...
ஐரோப்பாவின் ஆஸ்திரிய-ஹங்கேரி
அரசு செர்பியாமீது போர் அறிவித்தது. ஆஸ்திரிய-ஹங்கேரிக்கும் செர்பியாவிற்கும்
இடையே போர் ஆரம்பித்தாலும் சில நாட்களிலேயே அது ஐரோப்பா முழுவதும் பரவி மெல்ல மற்ற
நாடுகளும் பங்கெடுக்க நேர்ந்தது. இரண்டாம் உலகப் போர் அளவிற்கு இல்லாவிடினும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் (ஸ்கேண்டிநேவியா,ஸ்விட்சர்லாண்ட், நெதர்லாண்ட்(ஹாலந்து) தவிர்த்த
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்க, ஆசியாவின் முக்கிய
நாடுகளும், ஆஸ்த்ரேலிய-ந்யூசிலாந்து நாடுகளும் பங்கு பெற்றன.
இந்த போர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து 1918-ஆம்
ஆண்டு நவம்பர் 11மணிக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட வரை
நீடித்தது.
போருக்குக் காரணமான முக்கிய
நிகழ்வாக ஜூன் 28,1914அன்று ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் பட்டத்து
இளவரசான – Archduke - (51-வயது!)
ஃப்ரன்ஸ் ஃபெர்டினண்ட்-உம் அவர் மனைவி ஸோஃபி சோடெக்வான்-உம் செர்பியாவின் கருங்கை
(The Black Hand) இயக்கத்தைச் சேர்ந்த கார்விலோ
ப்ரின்சிப்-என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டதே.
இதற்குக் காரணம் என்ன? இது எப்படி உலகப் போருக்கு வழி வகுத்திருக்க முடியும்? என்ற கேள்விகள் எல்லாம் மனதில் எழும். இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம்.
பொதுவாக இந்த சம்பவத்தினால்
ஆஸ்த்ரிய-ஹங்கேரி செர்பியா (ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் தெற்கில் க்ரேக்கத்திற்கு
வடக்கில் அமைந்த ஐரோப்பிய நாடு)மீது தாக்குதல் தொடுக்க செர்பியாவை ஆதரிக்கும்
ரஷ்யா செர்பியாவிற்கு உதவக் கூடாதென ஆஸ்திரிய-ஹங்கேரியின் நட்பு நாடான ஜெர்மனி
ரஷ்யாவை தாக்கியது. இதுதான் இந்த உலகப் போருக்கான துவக்கம் என்று வரலாற்று
ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.
ஆனால்,இந்த உலகப் போருக்கான தீப்பொறி இதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னறே
விழுந்துவிட்டது.
இந்தப் போருக்கான காரணங்களாக
நான்கு விஷய்ங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவை…
தேசபக்தி; இல்லை இல்லை தேசவெறி;
ஆதிக்க வெறி
நட்புறவு
படை
குவிப்பு - ஆகியவையே
தேசபக்தி
ஓரினம் மற்றும் ஒரே மொழி
பேசுபவர்கள் என்பதால் ஜெர்மனிக்கு ஆஸ்த்ரிய-ஹங்கேரியை எப்பொழுதும் சகோதரநாடாகவே
கருதும். ஆஸ்த்ரிய-ஹங்கேரியினரும் தங்களை ஜெர்மனியின் ஓர் அங்கமாகவே கருதி
வந்தனர். மற்றொருபுரம் செர்பியா சிறுநாடாக இருந்தும் போஸ்னியா, க்ரொஷியா, செர்பியா போன்ற பல இனக்குழுக்களை கொண்டது.
அதில் பால்கன்பகுதியின் (ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் தென்பகுதியை எல்லையாகக் கொண்ட
செர்பியாவின் வடமேற்கு பகுதி) பொஸ்னியா இனக்குழு தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என்று
ஆஸ்திரிய-ஹங்கேரி கருதியது. இதற்கு அடிப்படைக் காரணம் ஜெர்மனி. அதிலும் முக்கியமானது
ஜெர்மனியின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட சான்சிலர் ஓட்டோ வான் பிஸ்மார்க்-இன்
ராஜதந்திரம். நெப்போலிய போரினால்
துண்டுதுண்டாக இருந்த ஜெர்மனியை இணைத்து ஒரு பெரிய அரசை நிறுவ நினைத்தார். அதற்கு அவர் எடுத்து வைத்த
கோஷம் ஒன்றுபட்ட ஜெர்மானிய
தேசம் என்பது தான். ஜெர்மனி ஒன்று சேர இத்தேசிய கோஷம் தேவையாக இருந்தது.அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப, மெல்ல
இதன் மூலம் அருகிலிருக்கும் மற்ற நாடுகளையும் தன்னுடன் இணைக்க முற்பட்டது. அத்தேசிய உணர்வை ஆஸ்த்ரிய-ஹங்கேரியிலும் பரப்பி அவர்களையும் ஜெர்மனியின் ஓர் அங்கமாக
உணரவைத்தது. அதே அடிப்படையில் அது போஸ்னியாவையும் தன்னுடன் இணைக்க நினைத்தது. அதேநேரம் தான் நேரடியாக ஈடுபடாமல் ஆஸ்த்ரிய-ஹங்கேரியை இறக்கியது.
ஆஸ்த்ரியா-ஹங்கேரியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போஸ்னியாவை முழுவதுமாக தன்னுடன் இணைக்க
ஒரு அரசு முறை பயணம் உதவும் என்று எண்ணியதால் தான் ஃபெர்டினண்ட் போஸ்னியாவின் தலைநகரான ஹெர்ஸெகோவினா-விற்கு சென்றார். முதலில்
க்ரனெய்ட் குண்டு தாக்குதலில் தப்பித்த அவர், மதியம்
காயமடைந்த வீரர்களைக் காண மருத்துவமனை சென்ற போது தான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆக இந்த தேசியவெறி உலகப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
ஆதிக்க வெறி
நட்புறவு
காலணி ஆதிக்க வெறியும் தேசிய
வெறியும்,
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளை ஒருவருக்கொருவர் நம்ப முடியாத
நிலையையும் அதே நேரம் தன் ஒரு எதிரியைத் தாக்க மற்றவரின் உதவியை கைக்கொள்ள வேண்டிய
நிலையையும் தந்தது. தன் முதன்மை எதிரியான பிரான்ஸின் வளர்ச்சியைத் தடுக்க அதன்
கிழக்கு எல்லையில் இருக்கும் ஜெர்மனுக்கு மறைமுக உதவி செய்துவந்த பிரிட்டன்,
அதே ஜெர்மனி வளர்ந்து அதன் கடல் வாணிபத்திற்காக தன் கப்பல்களைத்
தாக்கும் சாத்தியத்தை உணர்ந்த பிரிட்டன் ஜெர்மனியைக் கட்டுப்படுத்த வேண்டிய
அவசியத்தையும் உணர்ந்தது. மேலும், பல காலணி நாடுகளில்
பிரான்ஸுடன் நடந்து வந்த போரின் இழப்பையும் கணித்த பிரிட்டன் பிரான்ஸுடன் சமாதானம்
செய்து கொண்டது. ஜெர்மனியின் மெற்கு எல்லையில் இருக்கும் பிரான்ஸுடன் சமாதானம்
செய்து கொண்டது போல் ஜெர்மனியின் கிழக்கு எல்லையின் மிகப்பெரிய நாடான ரஷ்யா
அரசுடனும் சமாதானம் செய்து கொண்டது. 1907-ஆம் ஆண்டு ரஷ்யா,
ப்ரான்ஸ், பிரிட்டன் ஆகிய மூன்றும்
ஜெர்மனியின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக முக்கூட்டு ஒப்பந்த செய்து கொண்டன;
இவை நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன. மற்ற மூன்று நாடுகளாக முதலில்
ஜெர்மன், ஆஸ்த்ரிய-ஹங்கேரி, இத்தாலி
ஆகிய நாடுகள் இருந்தன. இவை மத்திய கூட்டணி என்று அழைக்கப்பட்டன. பின்னர், இத்தாலி இந்த கூட்டணியிலிருந்து விலகி நேச நாடுகளுடன் சேர துருக்கியின்
ஒட்டமான் அரசு மத்திய கூட்டணியில் இணைந்தது. [இடையில் 1881-ஆம்
ஆண்டு முக்கூட்டு ஒப்பந்தத்திலிருந்து இத்தாலி விலகிய போது ஜெர்மன், ஆஸ்த்ரிய-ஹங்கேரியுடன் ரஷ்யா இணைந்தது; பின்னர்
ரஷ்யா விலகிக் கொண்டாலும். பிஸ்மார்கின் சாணக்கியத் தந்திரத்தால் ரஷ்யா நடுநிலை
வகிக்க ஒப்புக் கொண்டிருந்தது வேறுகதை] பிஸ்மார்க் இருந்த வரை அவர் தன்
ராஜதந்திரத்தால் பல்வேறு அழுத்தங்களுக்கிடையே இருந்த ஐரோப்பாவின் அமைதியைக் காத்து
தான் வந்தார். 1890-இல் அவர் நீக்கப்பட்டபோது சரியான
திட்டங்கள் ஏதுமில்லாமல் கூட்டணிகள் வெவ்வேறு விதமாக மாறிவந்தன. இது போன்ற விநோதக்
கூட்டறவு ஒப்பந்தங்களால் ஒரு நாடு ஆரம்பித்து வைத்த போரில் மற்ற நாடுகளும் மாறி
மாறி இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மகாபாரதத்தில் பாண்டவ கௌரவர்களுக்காக மற்ற
அரசர்களும் போர்களத்தில் இறங்கியது போல் உலக நாடுகள் அனைத்தும் களமிறங்க
நேர்ந்தது.
படை குவிப்பு
மெல்ல மெல்ல ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டைத் தாக்க ஏதாவது ஒரு காரணம் தேடிக் கொண்டே இருந்தன. எப்படியும் ஒரு போர் உருவாகும் என்று காத்திருந்து அதற்காக ஆயுதங்களை சேகரித்தும் படைக்குவிப்பு செய்தும் காத்துக் கொண்டிருந்தன.
இந்தப் போரின் நிகழ்வுகளை
அடுத்த பதிவில் பார்ப்போம்…
முதல் உலகப் போருக்குப் பின்னணியில் எத்தனை நிகழ்வுகள் உள்ளன. ஜெர்மனியின் நாடு பிடிக்கும் ஆசையை நாடு பிடிக்கும் ஆசை கொண்ட பிரிட்டன் எதிர்த்தது சுயநலம் தவிர வேறில்லை. விரிவான தகவல்களுக்கு நன்றி
பதிலளிநீக்குநாடு பிடிக்கும் ஆசையையே தேசபக்தி என்று விளம்பரம் செய்ததில், மக்களும் இந்த அழிவுப் போராட்டத்தில் தங்களை ஆவலுடன் ஈடுபடுத்திக் கொண்டது வேதனை தரும் விஷயம்.
நீக்குவருகைக்கு நன்றிகள் முரளி!