சுதந்திரக்
கிள்ளை
[வல்லமை இதழின் 246-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
அன்னையுடன் ஆடிப்பழகும்
அற்புத வாய்ப்புமின்றி
சுற்றி வட்டமிட்டு
கற்றிடுமோர்
சூழலற்று
கூண்டில் அடைபட்டு
வேற்றுமொழி
ஓதி தினம்
வாடி வதங்கிடும்
பள்ளிச் சிறார்
போலன்றி,
புனம் தோறும்
சுற்றி நாளும்
புதுக் காற்றைச்
சுவாசித்து
தினைவளத்தைத்
தான் புசித்து
திளைத்திட வா!
என் கிள்ளாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக