செவ்வாய், செப்டம்பர் 20, 2011

அணு அளவு நன்மை; அண்ட அளவு தீமை


சென்ற வார முக்கிய் நிகழ்வு கூடன்குளம் அணுமின் உலையை எதிரித்து 127 பேர் கடந்த 10 நாட்களாக நடத்திவரும் உண்ணாவிரதம் தான். நம் நாட்டைப் போன்ற அலட்சிய மனநிலை கொண்ட நாட்டிற்கு அணுமின் உலை போன்றவை பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது போன்றது தான்.

அணு உலைகளைப் பொறுத்தவரை பெரிய விபத்து நடந்தால் தான் ஆபத்து என்பதில்லை. ஏற்கனவே, கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் இருமுறை (1987, 2002) சிறிய விபத்துகள் நடந்துள்ளன. அதிலும் 1987-ல் நடந்த விபத்தின் காரணமாக இரண்டு வருடம் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப் பட்டது. அதில் நடந்த பாதிப்பும் அதன் தாக்கமும் எவ்வளவு என்று இன்று வரை சரியான தகவல்கள் இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 125 சிறிய அணு விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இவற்றில் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் அவர்களின் நிலை என்ன என்பது கூட தகவலில்லை.  

தில்லி குண்டு வெடிப்பில் உளவுத்துறை தகவலை மாநில அரசுக்கு கொடுத்தும் அவர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என உள்துறை அமைச்சர் கூறியுள்ளது; இதுவே அரசின் பொறுப்பற்றத் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அணு உலைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இது போன்ற ஒரு பொறுப்புத் துறப்பே நடக்கும். போபால் விஷ வாயு விபத்தில் நடந்த்து போல் அதன் தலைமை பொறுப்பில் உள்ளவர் தப்பித்து வெளியேறி விடுவார். பாதிக்கப் படுபவர்கள் அதற்கு ஏற்றார் போல் ஒரு அணு ஒப்பந்தமும் சம்மந்தப் பட்ட நாட்டுடன் அரசு ஏற்படுத்திக்கொள்ளும். தலைமுறை தலைமுறையாக துயரப்பட வேண்டியதுதான்.

இந்த போராட்டத்தைப் பொறுத்தவரை நேற்று பிரதமருக்கு ஜெ, அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டு, ஒரு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் இந்த வாரம் ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க செல்வதால் அடுத்த வாரம் குழுவை சந்திப்பதாகவும் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை அனுப்புவதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இது பற்றி நேற்று ”புதிய தலைமுறை”  நிருபர் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர ஐயரை காங்கிரஸ் கட்சியின் நிலை பற்றி அறிய அவரை பேட்டி கண்டனர். ஆனால், அவரோ இது பற்றி கட்சியின் நிலையைத் தான் கூற இயலாது என்றும் தான் தன்னுடைய கருத்தை மட்டுமே கூறுவதாகவும் கூறினார். அதில், மக்கள் கூடன்குள அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றி அதிகாரிகளின் விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை, மக்களின் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவித்த்தாக்க் கூறினார். அவரின் கருத்தைக் கூறுமாறு வினவிய போது தன் கருத்தை அரசுக்குத் தெரிவித்த்தாக்க் கூறினார். அரசு அவரின் கருத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என கேட்ட பொழுது அது அரசுக்குத் தான் தெரியும் என்றும் தன் கடமை அரசுக்கு கருத்து தெரிவித்ததுடன் முடிந்து விட்டதாகவும் கூறினார். அதை என்னால் ஏற்க முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட (என்ன தான் மாநிலங்கள் அவை உறுப்பினர்ரக இருந்தாலும்) மக்களுக்குத் தன் நிலையை விளக்க்க் கூட தயாராக இல்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்பொழுதுமே தலைமைக்கு அடிமை தானா. இத்தனைக்கும் அவருக்கு அரசின் நிலைபாடும் என்ன என்று தெரியாது என்றால் அவர் என்ன அரசியல் செய்கிறார் என்று புரியவில்லை.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு இதில் அன்னா ஹசாரே விடம் நடந்தது போல் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். முதலில் போராட்டததை எதிர்ப்பது/ஒடுக்க முடிந்தால் ஒடுக்குவது. போராட்டம் வலுத்தால் பேச்சு வார்த்தை நடத்துவது. அதிலும் தீர்வில்லாவிட்டால் பணிவது என்பது தான். இதில் மணிசங்கர் இப்பொழுது கபில் சிபல், திக் விஜய் சிங் போல நடக்கிறார். அது சரியில்லாவிட்டால், நாராயணசாமி பிரணாப் முகர்ஜி போல பேசுவார். பிறகு, போராட்டம் வலுத்தால் அதிக பாதுகாப்பு அமைப்புகள் நிறுவவதாகக் காட்டுவார்கள். எதுவுமே சரிபடாவிட்டால் தான் பணிவார்கள்.

ஆக வலுவான போராட்டமே இதற்குத் தீர்வு.

பின் குறிப்பு: மின்சாரத்திற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்த தீவிரமான ஆராய்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியத் தேவை. ஆனால், அரசு இந்த முயற்சியில் முனைப்பாக உள்ளதா என்பது கேள்விக்குறி. மரபு சாரா ஆற்றலை தயாரிப்பதில்/பயன் படுத்துவதில் தமிழகம் இன்று மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை ஓரளவு முன்னனியில் தான் (குறிப்பாக காற்றாலை மின் உற்பத்தியில்) இருக்கிறது. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

காலை எழுந்தவுடன் கடும்போர்


“காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
 கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு”

பாட்டுக்கொரு புலவன் பாரதி குழந்தைகளுக்குக் கூறியது என்னவோ இதுதான்.

ஆனால் இன்று குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடன் படிப்பதற்கே நேரமில்லை. இதில் பாடுவது எங்கே?

ஆனால் அவர்களுக்கு தினமும் தாய் தந்தையிடமிருந்து “பாட்டு” (திட்டுகள் தான்!!) கிடைத்துவிடுகிறது.

காலை எழுந்தவுடன் தான் எவ்வளவு வேலை. 

காலைக் கடன் முடித்து, பால் குடித்து, குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்குச் செல்ல புத்தகங்களை (தேடி) எடுத்துவைத்து, சீருடை அணிந்து பள்ளி கிளம்புவதற்குள் பள்ளி வண்டி வந்து விடுகிறது.

தமிழகத்திலாவது பரவாயில்லை. 9 மணிக்கு தான் பள்ளி ஆரம்பிக்கும். தில்லி போன்ற நகரங்களில் இன்னும் மோசம். 7 மணிக்கே பள்ளி ஆரம்பித்து விடுகிறது. “மாலை முழுதும் விளையாட்டு” என்பதற்கு வசதியாகத் தான் உள்ளது. இருந்தாலும் காலையில் தினமும் கச்சேரிதான்.

எங்கள் வீட்டிலாவது பரவாயில்லை. கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில் நிலமை போர்களம் தான்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு அவர்கள் காலையில் மிகவும் மெதுவாக, நேர விரயத்தைப் பற்றி கவலையின்றி அல்லது மற்ற விஷயங்களில் ஈடுபட்டு பள்ளி செல்ல விருப்பமின்றி வேண்டுமென்றே தங்கள் வேலையைச் செய்கிறார்கள் என்பது தான்.

இது எந்த அளவு உண்மை. அவர்கள் உண்மையாகவே பள்ளி செல்ல விருப்பமின்றி வேண்டுமென்றே தான் தாமதிக்கிறார்களா?

காரணம் இது அல்ல.

குழந்தைகளின் மூளை பள்ளிப் பருவத்தில் குறிப்பாக ஆரம்ப நிலையில் வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். அவர்களால் பெரியவர்கள் அளவுக்கு வேகமாக செயலாற்ற இயலாது. மேலும், அவர்களால் சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும். வளர வளர 2-3 வேலைகளை ஒருசேர செய்யும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள். தவிர, குழந்தைகள் எப்பொழுதும் புதிது புதிதாக ஏதாவது கற்கவிரும்புவர். அதனால் ஒரேமாதிரி திட்டமிட்ட (routine) வேலைகள் – தினமும் காலை பள்ளி கிளம்பும்போது ஒரே மாதிரி வேலை தானே – அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. பள்ளியிலும் ஒரே மாதிரி நடத்தப்படும் பாடங்கள் அவர்களுக்கு வேப்பங்காய் தான். மற்றபடி, பெரும்பாலும் அவர்கள் பள்ளி செல்வதை வெறுப்பதில்லை.

தவிர மற்றொரு காரணமும் உள்ளது. நாம் நம் இளம் வயதில் இப்பொழுது உள்ளது போல் இரவு வெகு நேரம் விழித்திருந்ததில்லை. பெரும்பாலும், 9-10 மணிக்கு உறங்கிவிடுவோம். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு உறங்க 11 மணி ஆகிவிடுகிறது. [குழந்தைகளை 9-10க்கு உறங்க வைத்தாலும் நாம் 11 மணி வரை விழித்திருப்பதால் அவர்களின் உறக்கமும் பாதிக்கப்படத்தான் செய்கிறது]. கூட்டுக் குடும்பங்கள்  இர்ந்தவரை ஒரளவு வீட்டுவேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதனால், காலையில் குழந்தைகளை தயார் செய்வது எளிதாக இருந்த்து;  மேலும், ஒரு குழந்தையைப் பார்த்து மற்ற குழந்தையும் தயாராகிவிடும். ஆனால், Nuclear குடும்பத்தினால் அது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.

இதெல்லாம் அறிவுக்கு தெரிந்தாலும் காலையில் பள்ளி வாகனம் ஒலியெழுப்பும் பொழுது சண்டை ஆரம்பம் ஆவதை தடுக்க முடிவதில்லை.

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கலவை (3)


கலவை (3)

சென்ற வாரம் உறவினர் ஒருவர் காலமானதைத் தொடர்ந்து அவசரமாக சென்னை/திருச்சி செல்ல நேர்ந்தது.

திருச்சியில் காவிரியில் வெள்ளம் நிரம்பியுள்ளது. ஆனால், நீண்ட நாட்கள் வற்றியிருந்ததாலும், வேறு மாசு கலப்பினாலும் நீர் முன் போல சுத்தமாக இல்லை. ஒருவேளை நீர் வரத்து தற்போது தான் ஆரம்பித்து இருப்பதால் கூட இருக்கலாம்.

பிள்ளையார் சதுர்த்தி விழாவை “இந்து எழுச்சி(?) விழா”வாக இந்து அமைப்புகள் கொண்டாடுவதால் தேவையில்லாத ஒரு பதற்றம். குறிப்பாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில். சாதாரண பிள்ளையார் “விஸர்ஜன” விழாவாக இருந்தால் இது இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அமைதியான ஒரு விழா நிறுவனப் படுத்தப் படுவதால் வரும் பிரச்சனை.

நீதிபதி சௌமித்ரா சென் நான் நினைத்தது போலவே தானாவே பதவியை துறந்துள்ளார். இதனால் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்திற்க்கும் மூளக்கூடிய ஒரு பனிப்போர் தவிர்க்கப் பட்டுள்ளது.

இதற்குள் தில்லியில் உயர்நீதிமன்றம் அருகில் குண்டு வெடிப்பு. இரண்டு மாதம் முன்பு அதே இடத்தில் ஒரு முன்னோட்டமும் பார்த்துள்ளனர். ஆனால், தில்லியில் எச்சரிக்கையாக இருப்பது என்பது மிகவும் கடினம். காரணம், “சல்தா ஹை (நடப்பது நடக்கட்டும்)” என்ற பொது குணம். இது பொதுமக்களிடம் இருந்து காவலர்களுக்கும் மாறியுள்ளது. [அவர்களும் பொதுமக்களில் இருந்து வந்தவர்கள் தானே!!!]. இது மாறும் வரை இதை தடுப்பது கடினம்.

சென்னை முன் போல இல்லை. எல்லா இடங்களிலும் நெரிசல். ஒரே ஒரு நாள் தான் இருக்க நேர்ந்த்து (நேரமில்லாததால்). பொதுவாக முன்பு சுவரொட்டிகளில் கலைஞரின் படங்கள் அதிகமாக இருந்தது போல் இப்போது ஜெ. யின் படங்கள் இல்லை. சற்று அடக்கி வாசிக்கிறாரோ?

சென்ற வாரம் நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மீண்டும் தாக்கப் பட்டுள்ளது. இம்முறை பெட்ரோல் குண்டு. இது எந்த மாதிரி எதிர்ப்பு என்றே புரியவில்லை. இதை பொதுவாகவே இதை திராவிட கட்சிகள் தான் அறிமுகப் படுத்தின. என் நினைவுகள் 1989-ம் ஆண்டுக்கு செல்கிறது. அப்பொழுது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு நேரம். இரவு என் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நண்பனின் வீட்டில் படிப்போம். அந்த நண்பனின் தந்தை தென் சென்னை வட்ட செயலாளர் (வீடு எம்.ஜி.ஆர் நகரில்).   அப்பொழுது, அதிமுக படு தோல்வி அடைந்த்து. முடிவுகள் வந்த அன்று இரவு அவனுடைய தாய் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கினார். எங்களையும் வேறு நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் படி கூறினார். ஆனால், அடுத்த தினம் தேர்வுக்கு ஒரு பாடத்தில் அந்த நண்பனின் சந்தேகங்களை தீர்க்கவேண்டி இருந்ததால் அந்த நண்பனும் நானும் மட்டும் அவனுடைய வீட்டில் படித்துக் கொண்டிருந்தோம். மற்ற நண்பர்கள் வேறு பாடம் படிக்க அடுத்த தெருவில் கூடியிருந்தனர். நள்ளிரவில் திடீரென்று ஒரே கல் மழை. அவசர அவசரமாக அவன் வீட்டிலிருந்த விளக்குகளை அணைத்து விட்டு பின் வழியாக வெளியே வந்தோம். எனக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி. ஆனால் அவனோ இது சாதாரணமாக நடப்பதுதான் என்றும் இதே அதிமுக வென்றிருந்தால் திமுகவினர் வீட்டிலும் இப்படிதான் நடக்கும் என்று சாதாரணமாகக் கூறினான். காரணம், பொதுவாக சென்னையில் அதிமுகவினர் சற்று அடங்கிதான் இருக்க வேண்டும் (ஏனென்றால் சென்னை அப்பொழுது திமுக கோட்டை) ஆனால் ஆட்சியோ அதிமுக வசம் எனவே காழ்ப்புணர்வு சற்று அதிகம் இருந்திருக்கும். ஆனால் தற்போது சேகரைப் பொறுத்தவரை அவர் எதிர்கட்சி சார்புடையவர். ஆனால வம்புக்காரர். தேவையிருக்கிறதோ இல்லையோ அனைத்திலும் மூக்கை நுழைப்பவர் அதுதான் காரணமாக இருக்கும். எப்படியிருந்தாலும் அவரை இந்த முறையில் எதிர்ப்பது தவறு தான்.  

கிரிகெட்டில் ஒரு போட்டியைக் கூட பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. (நல்ல நேரம்!!) ஒரு போட்டியிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. ஆனால், எண்ணிக்கைகளைப் பார்த்தால் ஓரளவு நன்றாக விளையாடியுள்ளது போல் தான் தெரிகிறது. குறிப்பாக இளைஞர்கள் (ஜடேஜா, ரஹானே, ரெய்னா). தோனியும் ஃபார்மில் வந்த்து போல் தான் தெரிகிறது. ஜடேஜா தன் இடத்தை எங்கே விட்டாரோ (இங்கிலாந்தில் நட்ந்த 20-20 உலகக் கோப்பை சொதப்ப ஆரம்பித்து) அங்கேயே திரும்ப பிடித்துள்ளார்

இன்னும் ஒரு போட்டி மீதியிருக்கிறது அதுவாவது கிட்டுமா என்று பார்ப்போம். அங்கே இலங்கையும் சரியாக விளையாடவில்லை. இதில் ஆசிய ஆடுகளங்களை குறைகூறுவதில் அர்த்தமில்லை. ஆஸ்த்ரேலியா இங்கிலாந்து இந்தியா/இலங்கையில் சொதப்புவார்கள். ஓரளவு அவை மட்டையாட்ட்த்திற்க்கு உதவுவதால் அவர்கள் இது போல வெள்ளையடிக்கப்படுவதில்லை. இல்லையென்றால் அவர்களின் நிலையும் இதுதான். அதுவும் ஆஸ்த்ரேலியாவின் தற்பொழுதைய அணி இலங்கையில் அவர்களின் spin-ஐ ஆடுவது கடினம்தான். ஆஸ்த்ரேலியாவில் நடப்பதால் அவர்கள் கை ஓங்கியுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி சற்று வலுவாக முதலிடத்தில் (வரிசையில் மட்டுமில்லாமல் உண்மையாகவே) உள்ளது.

வியாழன், செப்டம்பர் 01, 2011

கணேச பஞ்சரத்னம்


 
இன்று  விநாயக சதுர்த்தி

அதற்காக கணேச பஞ்சரத்னம் – ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது.

முதா கராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலாதரா வதம்சகம் விலாசிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம்
நதா சுபாஸு நாசகம் நமாமி தம் விநாயகம்.             1.

நதே தராதி பீகரம் நவோதி தார்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜனம் நதாதி காப துத்தரம்
ஸுரேஷ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேச்வரம்
மஹேஸ்வரம் சமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.            2.

ஸமஸ்த லோக ஸம்கரம் நிரஸ்த தைத்ய குஞரம்
தரேதரோதரம் வரம் வரே பவக்த்ர மஷ்கரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்.      3.

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் சுராரி கர்வ சர்வனம்
ப்ரபஞ்ச நாச பீஷனம் தனஞ்சயாதி பூஷனம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்.            4.

நிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ரிந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வசந்தமேவ யோகிநாம்
தமேக தந்த மேவதம் விசிந்தயாமி சந்த்தம்.              5.

[பலச்ருதி]
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேந யோன்வகம்
ப்ரஜல்பாதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்வரம்
அரோகதாம் அதோஷதாம் ஸுசகிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுர்ஷ்ட பூதி மபுபைதிர் ஸோசிராத்.          

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

கலவை (2)

நீதிபதி சௌமித்ரா சென்னின் “impeachment” தீர்மாணம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது. முதல் நாள், சென் தன்னிலை விளக்கம் அளித்தார். தன் மேல் சாற்றப் பட்டிருக்கும் (நிதி முறைகேடு) குற்றச்சாட்டின் காலம் தான் பதிவியேற்பதற்கு முன்னதானது எனவும் அவை சரிவர நிரூபிக்கப் படவில்லை (வங்கி குறிப்புகள் கிட்டவில்லை) தான் நீதித்துறையைத் தூய்மை படுத்துதல் என்ற பெயரில் பலி ஆடு ஆக்கப்ப்டுவதாகவும் திறமையாக வாதாடினார். அதைக்   கேட்டவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு அளித்திருப்பார்கள். அடுத்த நாள், சமாஜ்வாதி உறுப்பினர் சதீஷ் சந்தர் யாதவ் அவருக்கு ஆதரவாக (தீர்மாணத்தை எதிர்த்து) நன்றாக வாதாடினார். ஆனால் அவர்களின் வாதத்தை கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, பாஜகவின் அருன் ஜெட்லி ஆகியோர் திறமையாக தகுந்த ஆதாரங்களோடு நன்றாகவே தகர்த்தனர். சென்னின் விளக்கத்தில் இருந்த திசை திருப்பல்களையும் பொய்களையும் தகுந்த ஆதாரத்துடன் உடைத்தனர். இறுதியில் சமாஜ்வாதி ஜனதாகட்சி தவிர அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அடுத்தவாரத்தில் இது மக்களவையிலும் வர உள்ளது. அங்கு விரிவான வாத விவாதங்கள் இருக்குமா என பார்ப்போம். இந்த (மாநிலங்கள் அவை) விவாதங்களைப் பார்த்தவர்கள் நிச்சயமாக நாடாளுமன்ற விவாதத்தின் தேவையை உணர்ந்திருப்பார்கள். என்ன இவர்கள் - மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் - பின் பக்க வாசல் வழியாக நாடாளு மன்றம் வந்தவர்கள் என விமர்சிக்கப்படுபவர்கள். அது ஒன்று தான் குறை.

அடுத்து, ஆந்திராவில் ஜகன்நாத ரெட்டியின் வீடு(கள்), அலுவலகங்கள் மற்றும் சாக்ஷி தொலைக்காட்சி அலுவலக சிபிஐ சோதனை விவகாரத்தில், அவரின் ஆதரவாளர்கள் பதவியைத் துறந்துள்ளனர் – YSR-ன் பெயர் குறிப்பிடப்பட்ட்தால். என்னைப் பொருத்தவரை அவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஏனெனில், ஜகன் சமீபத்தில் தான் தேர்தலில் மிக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு, காங்கிரஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வேறு கட்சிகள் வலை வீசும். அதில் தங்களுக்கு பங்கும் கிட்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். மேலும் அவரின் பெயரிலா (Benami) சொத்துக்களிலும் தொடர்பு இருக்கிறதோ என்னவோ? பார்ப்போம்.

அடுத்து, முதல்வர் ஜெ, தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றி உள்ளார். இதற்கு இப்பொழுது எந்த தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை. தவிரவும், சுதந்திர தின உரையில் மக்கள் கடந்த 5 ஆண்டு ஆட்சி கொடுமைகளிலிருந்து விடுதலை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுக்குப் பிறகு இது போல வேறு ஒரு சுதந்திர தினமும் மக்களுக்கு கொண்டாட வேண்டிவரும். இன்னமும் அப்படியேதான் இருக்கிறாரா அல்லது பழைய பழக்கம் அவ்வப்போது தலை தூக்குகிறதா என்று தெரியவில்லை.

நான்காவது போட்டியிலும் தோல்வி. 20 ஆண்டுகளுக்கு பிறகு முழு வெள்ளையடிக்கப் பட்டுள்ளனர். காரணம், 4 வேகப் பந்தாளர்கள் இல்லாமல் கலம் இறங்கியது; மட்டையாளர்களின் Out of form. (எட்டு innings-ல் ஒன்றில் தான் 300 ஓட்டம்); போதிய உடல் தகுதி இன்றி வீர்ர்களை கலம் இறக்கியது. முனைப்பில்லாமல் ஆடியது (குறிப்பாக இரண்டாவது போட்டியில் 2 நாள் முன்னணி வகித்தும் வாய்ப்பை நழுவ விட்டது). தோனி இப்பொழுது யாரும் தூங்கவில்லை அதனால் Wake-up Call தேவையில்லை என்று கூறியுள்ளார் – அதுவும் சரிதான் – Nightmare இருக்கும் பொழுது எப்படி தூக்கம் வரும். இப்பொழுது பயிற்சி ஆட்டங்களில் – சிறிய் அணிகளுடன் தான் என்றாலும் – வெற்றி பெற்றிருக்கிறார்கள். பார்ப்போம்.

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

லோக்பால் (தொடர்ச்சி)

பொதுவாக லோக்பால் குறித்து என் ஆதரவைத் தெரிவித்திருந்தேன். இதில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை

இருந்தும் இதில் மேலும் சில கருத்துகள் இருக்கின்றன. அவை என்ன?

(1)  அரசு கொணர்ந்த சட்ட வரைவு எதற்கும் உதவாத ஒன்று என்பதில் மாற்றம் இல்லை. ஆனால், அன்னா ஆதரவாளர்கள் அவர்களின் “ஜன் லோக்பால்”  மட்டுமே ஏற்போம் மற்றவற்றைப் பார்க்கக் கூட மாட்டோம் என்று கூறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

(2)  30-ம் தேதிக்குள் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும் சற்று இயலாத செயல் தான். அதனால், அவர்களின் முக்கியக் கோரிக்கையான பிரதமர் மற்றும் உயர் அதிகார வர்க்கத்தை (நீதித் துறை உட்பட) இதன் கீழ் கொண்டுவந்து அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே நடைமுறை சாத்தியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கொல்கத்தா உயர் நீதி மன்ற நீதிபதி சௌமித்ரா சென்னின் “impeachment” தீர்மாணம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதில் சமாஜ்வாதி ஜனதாகட்சி தவிர அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல் நாள் சென்னின் தன்னிலை விளக்கம் கேட்டவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு அளித்திருப்பார்கள். அடுத்த நாள், சமாஜ்வாதி உறுப்பினர் சதீஷ் சந்தர் யாதவ் அவருக்கு ஆதரவாக (தீர்மாணத்தை எதிர்த்து) நன்றாக வாதாடினார். ஆனால், அவர்களின் வாதத்தை கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, பாஜகவின் அருன் ஜெட்லி ஆகியோர் திறமையாக தகுந்த ஆதாரங்களோடு நன்றாகவே தகர்த்தனர். சென்னின் விளக்கத்தில் இருந்த திசை திருப்பல்களையும் பொய்களையும் தகுந்த ஆதாரத்துடன் உடைத்தனர். இது போன்ற ஒரு விவாதம் லோக்பால் மசோதாவிற்கும் நடந்து அது நிறைவேற்றப்பட வேண்டும். அதுதான் நல்லது. அதற்காகவாவது அன்னாவின் காலவரையை அரசு ஏற்கக் கூடாது.

(3)  லோக்பால் விவகாரத்தைப் பொருத்தவரை பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தன் மித்ராவோ அன்னா ஏழு வருட ஆட்சியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டம் இது என்கிறார். ஆனால், அன்னா ஆதரவாளர்கள், சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு 45 வருடங்கள் அவகாசம் தந்துவிட்டதாகவும் அதனால் 30-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். 45 வருடங்களில் பாஜக வின் ஆட்சியும் அடங்கும். அவர்கள் ஆட்சியில் இது ஏன் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை”

(4)  அன்னா ஆதரவாளர்களிடையே உணர்ச்சி அதிகமாகத் தெரிகிறதே தவிர தர்க்க ரீதியாக விவாதிக்க குறைவான நபர்களே உள்ளனர். [அதிலும், கிரன் பேடி கூறிய “அன்னா தான் இந்தியா; இந்தியா தான் அன்னா” அபத்தத்தின் உச்சம். 1970-80-களில் இந்திரா ஆதரவாளராக இருந்திருப்பாரோ? (அதே கோஷம். “Why blood? Same blood”)]. அதனால் இந்தப் போராட்டம் வன்முறைக்கு மாறிவிடுமோ என்ற அச்சம் அவ்வப்போது வருகிறது - குறிப்பாக கேஜ்ரிவால் பேசும் போதெல்லாம். [பேச்சு வார்த்தைகளில் பாஜகவின் சுஷ்மா காங்கிரஸின் சிபல் போல அன்னாவுக்கு கேஜ்ரிவால் – அவரிருக்கும் வரை பேச்சுவார்த்தை வெற்றி பெறுவது கடினம்].  

இருந்தும் வலுவான லோக்பாலுக்கு எனது ஆதரவு நிலையில் மாற்றம் இல்லை. அன்னாவின் இந்த போராட்டத்தில் – வன்முறையாக மாறாத பட்சத்தில் -  தவறு இருப்பதாகவும் கருதவில்லை. ஆனால் எதற்கும் ஒரு வரை இருக்கிறது. அது மீறப்படாமல் இருக்கும் வரை நல்லது

ஓர் அளவுக்கு மேல் வளைத்தால் எதுவும் ஒடிந்து தான் போகும். ஆனால், அந்த அளவு எது என்ற கேள்விக்கு தான் பொதுவாக விடைத் தெரிவதில்லை.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

க்ருஷ்ணாஷ்டகம்



இன்று  க்ருஷ்ண  ஜெயந்தி.

அதற்காக க்ருஷ்ணாஷ்டகம்.

அஷ்டகம் என்றால் எட்டு பாகங்களை (அல்லது) பத்திகளைக் கொண்ட்து.

சாதாரணமாக க்ருஷ்ணாஷ்டகம் என்றதும்  எல்லோருக்கும் நினைவுக்கு வருவது “வஸுதேவ சுதம் தேவம் கம்ச சானூர மர்தனம்”  எனத் துவங்கும் அஷ்டகம் தான். இது யாரால் இயற்றப் பட்டது எனத் தெரியவில்லை.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட க்ருஷ்ணாஷ்டகம்.

ஸ்ரீ யஸ்லிஷ்டோ விஷ்ணு ச்திர சர குருர் வேத விஷயோ
தியாம் சாக்ஷி ஷுதோ ஹரிர சுர ஹந்தாப்ஜ நயன
கதி ஷங்கீ சக்ர விமல வனமாலீ ச்திர ருசி
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               1.

யத சர்வம் ஜாதம் வியத நில முக்யம் ஜகதிதம்
ஸ்திதௌ நிசேஷம் யோவதி நிஜ சுகம் ஸேன மதுஹா
லயே  சர்வம் ஸ்வாஸ்மின் ஹரதி கலயா யஸ்து ச விபு
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               2.

அசூநயம் யதௌ யநி நியம முக்யை சூக்ரானை
நிர்ருத யேதம் சிதம் ஹ்ருதி விலய மனீய சகலம்
யமீதம் பசயந்தி ப்ரவர மதயோ மயீ நமஸௌ
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               3.

ப்ரிதிவ்யம் திஷ்டன் யோ யமயதி மஹீம் வேதனதரம்
யமித்யதௌ வேதோ வததி ஜகத மீச மமலம்
நியந்தரம் த்யேயம் முநி சுர ந்ருநாம் மோக்ஷ தமஸௌ
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               4.

மஹீந்த்ராதி தேவோ ஜயதி திதி ஜன்யஸ்ய பலதோ
ந கஸ்ய ஸ்வதந்த்ரயம் க்வசி தபி க்ருதவ் யத் க்ருதி ம்ருதே
கவித்வ தேர்கவம் பரிஹரதி யோஸௌ விஜயிந
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               5.

விநா யஸ்ய த்யாநம் வ்ரஜதி பசுதாம் சூக்ர முகாம்
விநா யஸ்ய ஜனனம் ஜநி ம்ருதி பயம் யதி ஜனதா
விநா யஸ்ய ஸ்ம்ருத்ய க்ருமி சத ஜனிம் யதி ச விபு
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               6.

நரா தங்கோ தங்க சரணி சரணோ ப்ரந்தி ஹரனோ
கன ஸ்யாமோ வாமோ வ்ருஜ சிசு வயஸ்யோ அர்ஜுன சக
ஸ்வயம்புர் பூதானம் ஜனக உசிதசர சுகத
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               7.

யதா தர்ம க்ளாநிர் பவதி ஜகதம் க்ஷோப கரண
ததா லோக ஸ்வாமி ப்ரகதித வபு சேது த்ருகஜ
சதம் ததா ஸ்வசோ நிசம்ஸ குண கீதோ வ்ருஜபதி
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               8.

இதி ஹரிர் அகிலாத்ம ஆராதித ஸங்கரேன
ஸ்ருதி விசத குணோஸௌ மாத்ரு மோக்ஷார்த மதயு
யதி வர நிகதே ஸ்ரீயுக்த ஆவிர் பபூவ
ஸ்வகுண வ்ருத உதார ஷங்க சக்ராப்ஜ ஹஸ்தா.

இதி சங்கராசார்ய விரசிதம் க்ருஷ்ணாஷ்டகம் ஸமாப்தம்.

இந்த கடைசி பலச்ருதியை வைத்து இது ஆதி சங்கரரால் அவர் தாய்க்கு இறுதி சடங்கு செய்த போது தன் தாய்க்கு மோக்ஷம் கிட்ட வேண்டி இயற்றியதாகக் கூறுவார்கள். வேறு ஒரு இடத்தில் சங்கரரின் தாய், தன்னை அழைத்துச் செல்ல வந்த சிவ கணங்களைக் கண்டு பயந்ததாகவும், அதனால் சங்கரர் விஷ்ணுவை பாதாதி கேசம் வர்ணித்து பாடல் இயற்றியதாகவும் படித்துள்ளேன். அது இந்த க்ருஷ்ணாஷ்டகம் தானா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் அது பற்றி குறிப்பிடவும்.