வெள்ளி, ஜூலை 22, 2011

யாருக்கும் வெட்கமில்லை

சமிபத்தில் ஹர்பஜன் சிங் மெக் டொவல்ஸ் விளம்பரத்திற்காக விஜய் மல்லையாவின் UB குழுமத்திற்கும் தோனிக்கும் - இவ்விளம்பரத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் (குறிப்பாக தன் காலம் சென்ற தந்தையை) தன் சீக்கிய இனத்தையும் கேலி செய்துள்ளதாக குற்றம் சாட்டி - Legal Notice அனுப்பியுள்ளார்.

அந்த விளம்பரம் இதோ

முதலில் இந்த விளம்பரத்தில், சீக்கிய இனத்தை - நேரடியாகவோ மறை முகமாகவோ - எங்கும் தாக்கியதாகவே தெரியவில்லை.

இரண்டாவதாக சைமண்ட்ஸ் விவகாரத்தில், வர்ண வேறுபாட்டை கூறவில்லை (அதாவது அவரை "Monkey" என்று விளிக்கவில்லை; ஹிந்தியில் “மாக்கீ...” என்று தான் கூறினேன்) என ஒப்புதல் அளித்தார். அபொழுது வேறு நபரின் குடும்ப அங்கத்தினரை திட்டி புண்படுத்தியவர், தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் என்றவுடன் நேர் எதிர் நிலையை எடுத்திருக்கிறார்.
மேலும், இவரே வேறு ஒரு மதுபான தயாரிப்பு நிறுவன விளம்பரத்திலும் தோன்றுகிறார். அதில் நடிப்பதால் இவர் சார்ந்த ஒரு சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பது இவருக்கோ இவர் தாயாருக்கோ ஏன் தெரியவில்லை.

தோனி, தனக்கு அதில் பஜ்ஜி சம்மந்தப்பட்டுள்ளார் என தெரியாது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. Script தெரியாமல் நடித்திருந்தாலும் தவறுதான். நாளை வேறு ஒரு விளம்பரத்தில் இதை விட விவகாரமாக வேறு ஏதாவது - தீவிர வாத ஆதரவு போல் - இருந்தால் என்ன செய்வார். அதனால் இது தோனிக்கு தெரிந்து தான் இருக்கும்.

தோனி செய்ததும் கூட இருந்தே காலை வாரிவிடுவது போல் தான்  (குறிப்பாக பஜ்ஜியின் sensitive at same time senselessness-ஐ அறிந்து).

மேலும் இந்த விஷயத்தில் நீ அடிப்பது போல் அடி, அதாவது legal notice அனுப்பு அதன் மூலம் இந்த விளம்பரத்திற்கும் மேலும் விளம்பரம் கிடைக்கும் என்று மல்லையாவே பஜ்ஜியுடன் deal வைத்திருந்தாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை.

இந்த பின்புற வழி (backdoor) விளம்பரங்களை - வேறு பெயரால் மது, புகை விளம்பரங்களை தடை செய்ய அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், அவர்களே மது விற்பனை செய்வதுதான் நடக்கிறது.

இதில் யாரைக் குறை கூற முடியும்.


மொத்ததில் யாருக்கும் வெட்கமில்லை













4 கருத்துகள்:

  1. மது குடிப்பதற்கு முன்பு வேணுமானாலும் வெட்கம் இருக்கும்.
    ஆனால் மது குடித்த பின் வெட்கம் மட்டும் போகாது. மனம் மரியாதை, வாழ்வு எல்லாமே போய்விடும் என்பதுதான் நிதரிசனம்.

    பதிலளிநீக்கு
  2. //மது குடித்த பின் வெட்கம் மட்டும் போகாது//
    மது குடித்தால் மட்டும் அல்ல, மது விளம்பரத்தில் நடிதாலும் எல்லாம் போய் விடும் போல் இருக்கிறது!

    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. எது போனால் என்ன?
    காசு வருகிறதே
    அது எல்லாவற்றையும் மறைத்துவிடும்
    மறக்கசெய்துவிடும்
    மரத்து போகவும் செய்து விடும்.

    பதிலளிநீக்கு
  4. எது போனால் என்ன?
    காசு வருகிறதே
    அது எல்லாவற்றையும் மறைத்துவிடும்
    மறக்கசெய்துவிடும்
    மரத்து போகவும் செய்து விடும்.

    பதிலளிநீக்கு