சென்ற வாரம்
உச்ச நீதி மன்ற வழக்குரைஞர் ப்ரஷாந்த் பூஷன் (சாந்தி பூஷனின் மகனும் அன்னா ஹாசாரே-வின் “சிவில் சொசைடி”
உறுப்பினர்) உச்ச நீதி மன்ற வளாகத்தில், காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு “பொதுவாக்கெடுப்பு” நடத்த வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து
அதற்கெதிராக, அவருடைய அறையில் தாக்கப்பட்டுள்ளார் இது வன்மையாகக் கண்டிக்கப் பட
வேண்டியது அவசியம். நம்மிடையே மாற்றுக் கருத்தை வன்முறையின்றி எதிர்கொள்ளும் திறன் குறைந்து
கொண்டே வருகிறது என்பத்ற்கு இதுவும் ஓர் உதாரணம்.
தில்லி மற்றும் தலைநகர் (NCR) பகுதிகளில் தற்பொழுதைய நிலவரப் படி ஒரு கோடியே இருபது லட்சம் வாகனங்கள் பதிவு
செய்யப் பட்டுள்ளன என்று போக்குவரத்து துறை தன் குறிப்பேட்டில் கூறியுள்ளது.
இவற்றைத் தவிர ஹரியானா (குறிப்பாக மெற்கே குட்காவ்ன், தெற்கே ஃபரீதா பாத்), உத்திர
பிரதேசம் (காசியாபாத், மீரட்) பகுதிகளில் இருந்து தினமும் லட்சத்திற்கு மேற்பட்ட
வாகனங்கள் தில்லியின் சாலைகளில் சென்று வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி
நிலைமையைச் சீர் செய்ய தில்லி காவல் துறை பகீரதப் ப்ரயத்தனம் தான் செய்து
வருகிறது. இதில் அவர்களுக்கு தலைவலியைத் தருவதில் முக்கிய பங்கு VVIP வாகன்ங்கள் தான். அதிலும், அனுமதியில்லாத சிவப்பு / நீல விளக்குகள்
பொருத்தப்பட்ட வாகன்ங்கள் தான். இதைத் தொடர்ந்து மத்திய அரசு தில்லி மாநில
அரசுக்கு (மற்ற மாநில அரசுகளுக்கும்) இந்த விளக்குகள் பொருத்துவதில்
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல் துறையும் முடுக்கி
விடப்பட்டு அனுமதியின்றி விளக்குகள் பொருத்தியிருக்கும் வாகன்ங்களுக்கு அபராதம்
விதித்து வருகிறார்கள். [சென்ற வாரம் தில்லி புராரி பகுதி சட்டமன்ற உறுப்பினை
ஸ்ரீக்ரிஷன் கூட இரண்டு முறை அபராதம் கட்டியுள்ளார்; அனுமதியின்றி பொருத்தியதற்கு
அவர் கூறும் காரணம், அவர் பகுதியில் வன்முறை அதிகம்; ஆனால் அரசு போதிய காவல்
தரவில்லை என்பதே. விளக்கினால் என்ன பாதுகாப்பு என்பது விளங்கவில்லை]. தவிர, தில்லி
காவல் துறை வாகனங்களுக்கு விதி மீறலுக்கானத் தொகையை மேலும் அதிகரிக்க மத்திய
அரசிடம் அனுமதி கோரியுள்ளது. காமன்வெல்த் போட்டிகளின் போது அதற்காகப் போடப்பட்ட
தடங்களில் விதி மீறலுக்கு அதிகத் தொகை அபராதமாக விதிக்கப் பட்டது. அந்த சமயத்தில்
இதன் காரணமாக விதி மீறல் குறைவாகத்தான் இருந்த்து என்று கோடிட்டுக்
காட்டியுள்ளனர். ஆனால், இது சரியான காரணம் தானா என்பது சந்தேகமே. ஏனென்றால்,
போட்டி நடைபெற்ற வழித் தடங்களோ குறைவு. அதிலும் காவல் துறையின் பெருங்கவனம் (ஏன்
முழு கவன்முமே என்று கூடக் கூறலாம்) அங்கேயே இருந்து கண்காணிக்கப் பட்டது. இப்போதோ
கண்காணிப்பு நகர் முழுவதற்க்கும் தேவை. இது முக்கிய் தடங்களில் காவல் துறையின் posting
contract rate-ஐ தான்
உயர்த்துமே அன்றி போக்குவரத்து விதிமீறலை ஒரளவுக்குத் தான் கட்டுப் படுத்தும். ஏனெனில், அதிக அபராதம் என்றால் மக்கள் அங்கிருக்கும் காவலருக்கு கையூட்டு கொடுத்து
போய் கொண்டே இருப்பர். இதை நாம் எத்தனை வருடங்களாகப் பார்த்து வருகிறோம்.
சென்ற வாரம், தில்லி ஆர்கே புரம் மற்றும் இந்தியா கேட்
பகுதிகளில நடந்த இரண்டு வெவ்வேறு கார் விபத்துகள் சற்று கவனிக்கப் பட வேண்டியவை. இரண்டு விபத்துகளிலும் ஓட்டுனர்களின் வயது
இருபத்தியிரண்டுக்கும் குறைவு. மது அருந்தி உள்ளனர். அவர்களின் வாகனமோ ஒன்றரைக்கோடி மதிப்புள்ள மிகவேகக் கார். பொதுவாக, வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த மிகவேகக் கார்கள் அந்நாட்டு சாலைகளில்
நீண்ட (inter-continental) பயணங்களுக்காக தனிப்பயனாக (ப்ரத்யேகமாக) வடிவமைக்கப் பட்டவை. ஆனால், தில்லி சாலைகளில் அந்த வேகம் கட்டுக்குள் அடங்குமா என்பது தெரியவில்லை. பணமும் குழந்தைகளின் பிடிவாதமும் சில
நேரங்களில் போட்டி மனப்பான்மையும் பெற்றோர்களை இது போன்ற வாகனங்களை பிள்ளைகளுக்குக் கொடுக்க வைக்கின்றன. அவர்கள் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப பின்
விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல் நடப்பது தான் காரணம். இதில், அவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டால் அவர்களேத் தேடிக் கொண்ட்து என்று விட்டு
விடலாம். ஆனால், இது மற்றவரையும் பாதிக்கிறதே அதுதான் வேதனை. இவர்களை யார் திருத்துவது.
இந்திய
இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டிகள் துவங்கியுள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. சொந்த மண்ணிலாவது இன்னமும் சரியாக
விளையாடுகிறார்களே. இங்கிலாந்து ஆனாலும் மிக மோசமானத் தோல்வியையே தழுவியுள்ளது. அவர்களும் ”வீட்டிலே புலி வெளியிலே எலி” தான் போலிருக்கிறது (atleast ஒருநாள் போட்டிகளில்). ஆனாலும் ஐயன் பில் தேர்வு செய்யப் பட்டிருந்தால் மத்தியில் ஓரளவு தாக்கு
பிடித்திருக்கலாம். ஸ்ட்ராஸ் இல்லாததும் பின்னடைவே. இருந்த போதும், ஐந்து நாள் போட்டிகளை வைத்துதான் இங்கிலாந்து அணியின்
தரத்தை விமர்சிக்க முடியும்.
கடைசியாக ஒரு கதை….
அது ஒரு வாடகைக்கு
கார் தரும் டூரிஸ்ட் அலுவலகம். அதில், அப்பொழுது தான் சேர்ந்த ஒரு புது அப்ரசெண்ட் பெண். அவளிடம் சீனியர் கைப்புள்ள வாடிக்கையளரை
சமாளிப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு போன்கால். எதிர் முனை
ஆசாமி அவர் 6 மணிக்கு ஏர்போர்ட் செல்ல வேண்டும் என்று வாடகை கார் கேட்டுள்ளதாகவும்,
மணி 7ஆகியும் இன்னமும் வண்டி வரவில்லை என்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
பெண் எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியவில்லை. கைப்புள்ளையின் கையில் கைபேசி வந்தது.
அவர், “ஐயா, நான் ஏர்போட் போன் செய்து கேட்டுவிட்டேன். விமானம் இன்னமும்
கிளம்பவில்லை. இன்று தாமதமாம்” என்று சமாளித்தார்.
எதிர் முனை ஆசாமி கூறினார்,
“நீங்க சொல்றது சரிதான். இன்று ஃப்ளைட் தாமதம் தான். ஏனென்றால், நான் தானே அந்த
விமானத்தின் பைலட். அப்புறம் எப்படி அது கிளம்பும்”
வணக்கம் நண்பரே உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றன இனி தொடர்ந்து வருவேன்
பதிலளிநீக்குநல்ல கலவை சீனு. காரில் வைத்துக்கொள்ளும் சிவப்பு/நீல விளக்குகள் - இது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்வார்கள்... :)))
பதிலளிநீக்குகடைசியில் சொன்ன கதை... :))))
ராஜ், தங்கள் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஆம் வெங்கட் அது Status Symbol தான். ஆனால், வெளிப்படையாகச் சொல்ல முடியாதே.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
நன்றாக அலசியுள்ளீர்கள். எழுத்துகள் தொடர என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குலிங்கேஷ், தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
பதிலளிநீக்கு