விடுமுறை நாள் என்றால்
எப்போதும் பையன் அப்பா, வா கேரம் விளையாடலாம்; கிரிக்கெட் விளையாடலாம்;
Scrabble விளையாடலாம் என்று ஒரே நச்சரிப்புதான்.
இதே விளையாட்டு நண்பர்களுடன் விளையாடிய பொழுது போனதே தெரியவில்லை. ஆனால், இவனுடன்
விளையாடும் பொழுது மட்டும் ரசிக்கவே முடிவது இல்லை. காரணம், விளையாட்டின் முடிவு.
முன்னதில் நமக்கு அது தெரியாது; பின்னதில் பெரும்பாலும், நாம் குழந்தையின்
மகிழ்ச்சிக்காகத் தோற்ப்போம், என்பதுதான்.
இப்படி விளையாடும் பொழுது
பொதுவாக சந்தேகம் தோன்றும். நாம் எப்பொழுதுமே அவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தோற்க
வேண்டுமா? இது சரியா அல்லது தவறா? அப்படி விட்டுக் கொடுத்து ஜெயிப்பதால்,
(1) அவர்களின் திறமை வளர்ச்சி அடையாமல் போய் விடுமா? (2) அவர்கள் எதிர்காலத்தில்
சந்திக்கும் சிறு சிறு தோல்விகளிலே மனம்
உடைந்துவிடுவார்களா? என்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது. இதற்கு விடைதான் என்ன?
விடை என்னவோ சுலபமானது தான்.
குழந்தைகள் வெற்றியைத்தான் விரும்புகின்றன.
ஆனால், தொடந்து வெற்றியே பெற்று
வந்தால் அவர்களுக்கு அந்தப் போட்டியில் அவர்களை வெற்றி பெற வைப்பதற்காகவே பெற்றோர்
தம் திறமையை முழுவதும் உபயோகிக்கவில்லையோ என்ற சந்தேகதை ஊட்டும். இது, அவர்கள் திறமை
மேல் அவர்களுக்கு சந்தேகத்தை வளர்க்கும்; அல்லது, அவர்கள் வெற்றி பெற யாராவது தியாகம்
செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வீண் எதிர்பார்பை வளர்க்கும்.
எனவே, அவர்களுக்கு அவ்வப் பொழுது
தோல்வியைச் சந்திக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், அதை சற்று நாசூக்காக அவர்கள்
மனம் கோணாத படியும் செய்ய வேண்டும். அந்தத் தோல்வியில் அவர்கள் ஏதாவது கற்றுக் கொள்ளும்
படி அமைந்த்தாகக் காட்ட வேண்டும்.
சாதாரணமாக, இது போன்ற போட்டி விளையாட்டுகள்
குடும்பத்தில் குழந்தைகளுக்கும் பெற்றொருக்கும் அன்பு, நெருக்கம் ஆகியவற்றை வளர்க்கும்
ஒரு பாலமாகவே இருக்கின்றன. மிகச் சிறு வயதில் (2-5 வயது) தாயம், பரமபதம் போன்ற அதிர்ஷ்ட
விளையாட்டுகளை விளையாடுவதுதான் சிறந்தது. ஏனெனில், இதில் குழந்தை, பெரியவர் இருவருக்குமே
வெற்றி தோல்வியில் சமவாய்ப்பு இருக்கிறது.
பிறகு, அவர்களுக்கு, சொல் விளையாட்டு
(Word Building, Scrabble போன்றவை), அறிவு / உடல் திறன்
வளர்க்கும் (Chess போன்றவை) விளையாட்டுகளைச் சொல்லித் தரலாம். முதலில், மொதுவாகவும், எளிதான விளையாட்டுகளை
அறிமுகம் செய்ய வேண்டும். போகப் போக அவற்றைச் சற்றுக் கடினமாக்க வேண்டும். அப்பொழுதுதான்
திறமை வளரும். மேலும், வெற்றியையும் அவர்கள் அதிக உற்சாகத்துடம் விளையாடுவர். அப்படியேத்
தோற்றாலும் போராடிதான் தோற்ற உணர்வை அவர்களுக்குத் தர வேண்டும். அது அவர்களின் திறமை,
போராட்ட குணங்களை வளர்க்க உதவும்.
நல்ல பகிர்வு சீனு... நீ தனியாக உட்கார்ந்து Patience விளையாடுவாயே அது நினைவுக்கு வந்தது :) அதுவும் பல்வலியோடு இரவு முழுவதும் விளையாடினாயே அது இப்பவும் நினைவில் இருக்கிறது எனக்கு....
பதிலளிநீக்குஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
பதிலளிநீக்குஅழகாக சொலியிருக்கீங்க பாஸ்
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்குவெங்கட், வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅம்பாளடியாள், ரெவரி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குராஜா, தங்கள் வருகைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு