சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 10, 2013

திருவிளையாடல்


சிவபெருமான் மதுரையம்பதியில் நடத்திய அறுபத்தி நான்குத் திருவிளையாடல்களை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணமாகப் பாடியருளியுள்ளார். இந்தத் திருவிளையாடல்கள் முருகப்பெருமானால் அகத்திய முனிவர் மூலம் பரஞ்சோதி முனிவருக்கு உரைக்கப்பட்டதாகக் கூறுவர். அவ்வாறு சிவபெருமான் நடத்தியருளிய திருவிளையாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படலமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த 64 திருவிளையாடல்களின் தொகுப்பை இந்த சிவராத்திரி நாளில் பார்ப்போம்…

மதுரைக் காண்டம்
1.        இந்திரன் மூல லிங்கமான கடம்பவன நாதரான சோம சுந்தரரின் திருவடிவை சிவலிங்கமாக ஸ்தாபனம் செய்து வழிபட்டு சாபம் தீர்த்த படலம்
2.        இந்திரனின் வெள்ளை யானை ஐராவதத்தின் சாபம் தீர்த்த படலம்
3.        திருநகரம் உருபெற்ற படலம்
4.        மலையத்வஜனுக்குக் குழந்தை வரம் அருளிய படலம்.
5.        மலையத்வஜன் மகளை மணந்து மதுரையம்பதியை ஆண்ட படலம்
6.        வெள்ளியம்பலத் திருக்கூத்து – சந்த்யா தாண்டவம் – ஆடி அருளிய படலம்
7.        குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
8.        அன்னக்குழியும் வைகை நதியும் உருவான படலம்
9.        அலைகடலை அழைத்த படலம்
10.     மலையத்வஜன் கைலாயம் எய்திய படலம்
11.     உக்கிரபாண்டியன் திரு அவதார படலம்
12.     உக்கிரபாண்டியன் – காந்திமதி திருமண படலம்
13.     கடல் சுவற (வற்ற) வேல் எறிந்த படலம்
14.     இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
15.     மேருவைச் செண்டால் அடித்த படலம்
16.     வேத மெய்ப்பொருள் அருளிச் செய்த படலம்
17.     மாணிக்கம் விற்ற படலம்
18.     மதுரையைச் சூழ்ந்த கடலை வற்றச் செய்த படலம்

கூடல் காண்டம்
19.     நான்மாடக் கூடல் ஆகிய படலம்
20.     எல்லாம் வல்ல சித்தர் உரு கொண்டு எழுந்தருளிய படலம்
21.     கல்யானை கரும்புக் கழி தின்ற படலம்
22.     யானையை வேலெய்து கொன்ற படலம்
23.     வ்ருத்த(முதிய), குமார, பாலக உரு எடுத்த படலம்
24.     கால் மாற்றி  ஆடிய படலம்
25.     பழி அஞ்சின படலம் (மறைந்த உண்மையை எடுத்தருளிய படலம்)
26.     பாதகம் செய்த அந்தணனின் பழி தீர்த்த படலம்
27.     தீவினையாளனை மாய்த்து அங்கம் நீக்கிய படலம்
28.     அவுண நாகம் எய்த படலம்
29.     மாயப்பசுவை வதைபுரிந்த படலம்
30.     படை திரட்டி நின்ற படலம்
31.     குண பூஷண பாண்டியனுக்குப் உலவாக்கிழி (பொற்கிழி) அளித்த படலம்
32.     வளைவிற்று ரிஷிபத்னிகள் சாபம் தீர்த்த படலம்
33.     கார்த்திகைப் பெண்டிருக்கு அட்டமா சித்தி உபதேசித்த படலம்
34.     விடையிலச்சினை இட்ட படலம்
35.     தண்ணீர் பந்தல் வைத்துத் தாகம் தீர்த்த படலம்
36.     ரசவாதம் புரிந்த படலம்
37.     சோழனை மடுவில் வீழ்த்திய படலம்
38.     நல்லானுக்கு உலவாக் (நெற்குதிர்) கோட்டை அளித்தருளிய படலம்
39.     மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
40.     வரகுண பாண்டியனின் சாபம் (திருவிடை மருதூரில்) தீர்த்து சிவலோகம் காட்டிய படலம்
41.     விறகு விற்றருளிய படலம்
42.     திருமுகம் கொடுத்த படலம்
43.     பாணபத்ரருக்குப் பொற்பலகையிட்ட படலம்
44.     (பாணபத்திரர் மனைவி) பத்திரைக்கு வெற்றியளித்த படலம்
45.     பன்றிக்குட்டிக்குப் பாலூட்டிய படலம்
46.     பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்
47.     கரிக்குருவிக்கு உபதேசித்த படலம்
48.     நாரைக்கு முக்தியளித்த படலம்
திருஆலவாய் காண்டம்
49.     திரு ஆலவாய் ஆகிய படலம்
50.     (படைவீரராகப்) பேரம்பு எய்தி போர் புரிந்த படலம்
51.     தமிழ்ச் சங்கம் அமைத்த படலம்
52.     வரகுண பாண்டியன் ஐயம் தீர்த்த படலம்
53.     தருமிக்குப் பொற்கிழி வழங்கியருளிய படலம்
54.     நக்கீரரைக் கரையேற்றிய படலம்
55.     தமிழ்ச் சங்கக் கலகம் தீர்த்த படலம்
56.     இடைக்காடருக்கு அருளிய படலம்
57.     நந்தியெம்பெருமான் சாபம் நீத்த படலம்
58.     திருவாதவூராரை (மாணிக்க வாசகர்) ஆட்கொண்ட படலம்
59.     நரிகளை பரிகளாக மாற்றிய படலம்
60.     பரிகளை நரிகளாக மாற்றிய படலம்
61.     பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பெற்ற படலம்
62.     சுந்தர பாண்டியன் கூன் நீக்கிய படலம்
63.     திருஞான சம்பந்தருக்கு அருளிய படலம்
64.     வன்னியும் கிணறும் சிவலிங்கம் அழைத்து சாட்சி சொன்ன படலம்

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திங்கள், பிப்ரவரி 20, 2012

சிவராத்திரி



சிவராத்திரி என்பது மாசி மாதத் தேய்பிறை 14-ஆவது நாள் (க்ருஷ்ண பட்ச சதுர்தசி திதி) அன்று வருவது. எல்லா மாதங்களிலும் சிவராத்திரி வரும். மக (மாசி மாதம்) மாதத்தில் வருவதால் ’மக சிவராத்திரி’ என்று கூறப்பட்டு பின் ’மஹா சிவராத்திரி’ என்று திரிந்திருக்கலாம்.

த்ரயோதசி உமையின் வடிவம்; சதுர்தசி சிவனின் வடிவம் – இரண்டு திதிகளும் சேர்வது தான் சிவராத்திரி. [நாம் பங்குனி உத்திரத்தை தான் சிவ-பார்வதி திருமண நாளாகக் கூறுகிறோம்; ஆனால், வட இந்தியாவில் சிவராத்திரியை சிவ-பார்வதி திருமண தினமாகக் கூறுகிறார்கள். காரணம் இதுவாகக் கூட இருக்கலாம்] இவை இரண்டும் சேர்வதை வைத்து இதை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். அவை

1.   உத்தம சிவராத்திரி:    பகலில் த்ரயோதசி இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது சதுர்தசி வந்து அது இரவு முழுவதும் நீடித்து மறுநாள் பகல் வரை இருக்க வேண்டும். அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின் 10 நாழிகைக்குள் சதுர்தசி வந்து விட வேண்டும். அது தான் உத்தமம் (சிறந்தது)
2.   மத்திம சிவராத்திரி:    சதுர்தசி காலை முதல் மறுநாள் வரை60 நாழிகை இருப்பது;  அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு முன்னர் வருவது அல்லது இரவின் 10 நாழிகைக்குப் பின்னர் சதுர்தசி வந்தாலும் அது மத்திமமே (ஏற்றுக் கொள்ளத் தக்கது).
3.   அதம சிவராத்திரி:      இரவு 20 நாழிகை நேரம் சதுர்தசி இருந்து அதன் பின் அமாவாசை வந்தால் அது அதம சிவராத்திரி (ஏற்கத் தக்கதல்ல). அன்று விரதம் அனுஷ்டிக்க மாட்டார்கள். முதல் நாளே சிவராத்திரி விரதம் இருப்பார்கள்.

இதில் வேறு இரண்டு விஷயமும் கவனிப்பார்கள் அவை மகாநிசி காலமும் லிங்கோத்பவ காலமும்.

மகாநிசி காலம் என்பது இரண்டாம் ஜாமத்தின் கடைசி நாழிகையும் மூன்றாம் ஜாமத்தின் முதல் நாழிகையும் கொண்ட 48 நிமிடங்கள் மகாநிசி என்று கூறுவர். மகாநிசி காலத்தில் அமாவாசை சேரக்கூடாது.

சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பின்னரும் மறுநாள் உஷாக்காலத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன் உள்ள நேரத்திற்கு இடைப்பட்ட நேரம் – அதாவது மாலை 7 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை (இது சூரிய அஸ்தமன உதய நேரத்தைப் பொறுத்து மாறும்) – சிவராத்திரி நேரம். இதை நான்காகப் பிரித்து நான்கு கால பூஜை செய்வார்கள். இதில் மூன்றாவது காலம் லிங்கோத்பவ காலம். லிங்கோத்பவ காலத்தில் சதுர்தசி இருப்பது நல்லது.

இந்த வருடம் திங்கட்கிழமை காலை 4.06 முதல் அடுத்த நாள் காலை 3.53 வரை சதுர்தசி (திருக்கணித முறை) இருக்கிறது. அதாவது, மகாநிசி காலத்தில்  அமாவாசை வரவில்லை, லிங்கோத்பவ காலத்தில் சதுர்தசி இருக்கிறது.   ஆனால், பகலில் த்ரயோதசி இல்லை. எனவே இது மத்திம சிவராத்திரி தான்.

ஆனால், நட்சத்திரத்திற்கும் கிழமைக்கும் கூட முக்கியத்துவம் உண்டு. பொதுவாக மகாசிவராத்திரியன்று திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களே வரும். அதில் திருவோணம் சிறந்தது. கிழமைகளில் சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்); அன்று அதம சிவராத்திரியாக இருந்தாலும் கூட கொண்டாடலாம் என்றும் சிலர் கூறுவர். இந்த வருடம் சிவராத்திரி திருவோண நட்சத்திரத்துடன் கூடிய திங்கட்கிழமை. எனவே இது மிகச் சிறந்தது என்றும் கூறுவர்.

கோவில்களில், சிவராத்திரியன்று நான்கு காலத்திலும் செய்யும் பூஜைகளைப் பார்ப்போம்.

முதல் காலம்:       சோமஸ்கந்த ரூபம்
                             பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்வர்
                             பின் சந்தனப் பூச்சு பூசுவர்
                             சிவப்பு பட்டு சாற்றுவர்
                             காய்கறியுடன் அன்னம் நைவேத்யம் செய்வர்
வில்வ பழம் படைப்பர்
                             ரிக் வேதம் ஓதுவர்
                             விளக்கெண்ணெயால் ரதரத்தி என்ற தீபம் ஏற்றுவர்
                             திருநீற்றுபச்சிலை, தாமரை, அரளி பூ சமர்பிப்பர்
                             மாணிக்க வாசகரின் சிவபுராணம் படிப்பர்

2-ஆம் காலம்:      தக்ஷிணாமூர்த்தி ரூபம்
                             பஞ்சாமிர்த அபிஷேகம்
                             பச்சைக் கர்பூர பூச்சு
                             மஞ்சள் பருத்தி ஆடை
                             பாயசம், லட்டு நைவேத்யம்
                             பலா பழம் படைப்பர்
                             யஜுர் வேதம் ஓதுவர்
                             இலுப்பை எண்ணெயால் ஏக தீபம் ஏற்றுவர்
                             தாமரை, வில்வம் சமர்பிப்பர்
                             ருத்திர தாண்டகம் (எ)நின்ற திருத்தாண்டகம் படிப்பர்

3-ஆம் காலம்       லிங்கோத்பவ ரூபம்
                             தேன் அபிஷேகம்
                             அகில் பூச்சு
                             வெள்ளைக் கம்பளி
                             சத்துமாவு, பாயசம் நைவேத்யம்
                             மாதுளம் பழம் படைப்பர்
                             சாம வேதம் ஓதுவர்
                             நெய் விட்டு கும்ப தீபம் ஏற்றுவர்
                             அருகம் புல், தாழம்பூ சமர்பிப்பர்
                             லிங்கபுராண திருக்குறுந்தொகை படிப்பர்

 [இதே நேரத்தில் கருவரைக்குப் பின் உள்ள லிங்கோத்பவ மூர்த்திகு, நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர். ஸ்ரீ ருத்ரம், சமகம் பாராயணம் செய்வர். சிவசஹஸ்ரநாம அர்ச்சனை செய்து எள் சாதம், பொரி உருண்டைகள் நிவேதனம் செய்வர்.]

4-ம் காலம்           சிவ ஸ்வரூபம்
                             கருப்பஞ்சாறு அபிஷேகம்
                             கஸ்தூரி பூச்சு
                             பச்சை மலர் ஆடை
                             கோதுமை நெய் சீனி சேர்த்த உணவு நைவேத்யம்
                             அதர்வண வேதம்
                             நல்லெண்ணெய் விட்டு மகாமேரு தீபம்
                             எல்லா விதமான பூக்களும் கலந்து சமர்பிப்பர்
                             அப்பர் எழுதிய திருத்தாண்டகம் படிப்பர்