இங்கிலாந்து தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இங்கிலாந்து தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது போட்டி முடிவு

முதல் போட்டியை விட மோசமானத் தோல்வி

காரணங்கள்:

1. முதல் முறையில் 100 ஓட்டங்கள் அதிகமாகக் கொடுத்ததுடன், 100 ஓட்டங்கள் குறைவாக எடுத்தது.
 
2. இரண்டு முறையும் 300-ஐ கூட எட்டமுடியாத மட்டை ஆட்டம்; த்ராவிடைத் தவிர அனைவருமே சொதப்பினர். (50 ஓட்டம் எடுத்ததெல்லாம் நன்றாக விளையாடியதாகக் கூற முடியாது). வால் மிகவும் மோசம். இத்தனைக்கும் ஸ்ரீசாந்த் தவிர மற்ற அனைவரும் ஓரளவு ஆடக்கூடியவர்களே. அதிலும் ப்ரவீன் குமார் சாதாரணமாக முதல் ஆட்டக்காரராகக் கூட களம் இறங்கியவர் (local போட்டிகளில்). ஆனால், அவர் முதலிலிருந்தே ஒரு போட்டியில் கூட பொறுப்புடன் ஆட முயர்ச்சிக்கக் கூட இல்லை. ஃபார்மில் இல்லை என்றால் அது வேறு விஷயம். அது சாதாரணமாக நடப்பது தான். ஆனால், பொறுப்பில்லாமல் ஆடுவது அது தான் தவறு.

3. தோனி, நீங்க நல்லவனா இல்ல கெட்டவனா என்ற நிலைக்கு வந்துவிட்டார். Field Placing சுத்த மோசம். அதிலும், இரண்டாவது முறையில் விக்கெட் எடுக்கவும் முயல்வில்லை ஓட்டத்தை தடுக்கவும் முயலவில்லை. பின் எதற்குதான் 11 ஆட்டக்காரர்கள். ஒரே நாளில் 400-க்கு மேல் ஓட்டம்!!!!

4. முதல் முறை சரியாக வீசிய பந்து வீச்சாளர்கள் இரண்டாம் முறையில் சொத்ப்பினார்கள். முன்னரே கூறியது போல் ஹர்பஜனை ஏன் இன்னமும் தோனி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. (நல்ல வேளை அடுத்தப் போட்டியில் ஆட மாட்டார்) அவருக்கு பதிலாக மிஷ்ராவை சேர்க்கலாம். சாதாரணமாக, இங்கிலாந்து வீரர்கள் லெக் ஸ்பின் சரியாக ஆடமாட்டார்கள். இருப்பினும், எனக்கு 4 வேகப் பந்தாளர்கள் தான் சரி எனத் தோன்றுகிறது. தோனியும், வீச்சாளர்கள் tired ஆனதுதான் காரணம் எனக் கூறியுள்ளார். 4 வேகப் பந்தாளர்கள் இருந்திருந்தால் அது நேர்ந்திருக்காது.

பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. புதிதாக மேலும் தவறுகள்.

மொத்தத்தில் மோசமானத் தோல்வி.

வெள்ளி, ஜூலை 29, 2011

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது போட்டி

முதல் டெஸ்ட் தோற்ற பின்பு இன்று Nottingam-இல் இரண்டாவது போட்டி நடை பெற உள்ளது.

முதல் போட்டியில் இந்தியா பொதுவாக எல்லாத் துறைகளிலும், குறிப்பாக மட்டையாட்டத்தில், கோட்டை விட்டது. இரண்டு முறையும் 300 ஓட்டங்கள் கூட எட்டாதது மட்டையாட்டத்தில் சொதப்பியதை தான் காட்டுகிறது. அதிலும், ஒரு துவக்க ஆட்ட வீரரைத் தவிர மற்ற அனைவரும் அனுபவம் உள்ளவர்கள்;  ஆடுகளமும் மோசமாக வில்லை; பந்து வீச்சும் - லக்‌ஷ்மண் கூறியது போல் - devastating இல்லை. 

பந்து வீச்சை பொறுத்தவரை முதல் இன்னிங்க்ஸில் இஷாந்த் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்பினார். விளையாட்டை ஓரளவு அனுமானிக்கும் ரசிகர்களுக்குக் கூட, இங்கிலாந்தில் பந்தை கூடுமான வரை நல்ல அல்லது முழு நீளத்தில் (good or full length) வீச வேண்டுமெனத் தெரியும். ஆனால் அவரோ, அளவு குறைவாகவே வீசினார். தொழில் முறை விளையாட்டு வீரரான அவருக்கோ, அணித்தலைவருக்கோ, பயிற்சியாளருக்கோ இது தெரியாதது ஆச்சரியம் தான். [மே.இ. அளவு குறைவான பந்துகள் தான் அவருக்கு wickets தந்தன என்பதால் அதையே இங்கு செய்வேன் என்றால் என்ன செய்ய முடியும்?)  இரண்டாம் இன்னிங்க்ஸில் அதை ஈடுகட்டினார், ஆனால், வெறும் இரண்டு பந்து வீச்சாளர்களைக் (ப்ரவீன், இஷாந்த்) கொண்டு எவ்வளவு தான் முடியும். 

 ஹர்பஜனை பொருத்தவரை அவரை 1-2 போட்டிகள் நீக்கினால் தான் சரியாகும். வேறு சுழல் பந்தாளர் சோபித்தால் அவருக்கும் ஒரு போட்டி இருக்கும். [கும்லேவுக்கும் இது நடந்தது. அப்போது ஹர்பஜன் இருந்ததால் அவருக்கு ஒரு போட்டி இருந்தது; அவர் தன் முழு திறமையைக் காட்ட வேண்டியிருந்தது].

இப்பொழுது, இரண்டாம் போட்டியைப் பொருத்தவரை என் அணி இதுதான்;

1. அபினவ் முகுந்த்
2. யுவராஜ் சிங் [கம்பீர் காயத்தால் ஆட மாட்டார் எனத் தகவல்]
3. த்ராவிட்
4. சச்சின்
5. லக்‌ஷ்மண்
6. ரெய்னா
7. தோனி
8. ப்ரவீன்
9. இஷாந்த்
10.ஸ்ரீசாந்த்
11. முனாஃப்

நான்கு வேகப் பந்தாளர்களும் யுவராஜ் & ரெய்னா மூலம் சுழல் பந்தும் செய்யலாம்.

திங்கள், ஜூலை 11, 2011

மேற்கு இந்தியா & இங்கிலாந்து தொடர்

நேற்று  மேற்கிந்திய அணியுடன் நடந்த தொடர் முடிந்தது. 

தொடரை வென்ற போதிலும், வெற்றி கணக்கு 1 - 0  என்ற அளவிலேயே இருந்தது பொதுவாகவே அணைவரையும் ஏமாற்றம் அடையவேச் செய்தது என்று கூறலாம். சற்று, லாவகத்துடன் பந்து வீசியிருந்தால், 2 - 0  என்ற கணக்கில் வென்றிருக்கலாம்.

சாதாரணமாக, மே.இ. அணியுடன் தொடரை வென்றாலே மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனால், இப்பொழுது, தகுதி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாலும், சமீபத்திய உலகக் கோப்பையும், பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியும் சற்று அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால், பந்து வீச்சில் ஜாகிர் இல்லாததும் பஜ்ஜீ சரியான ஃபார்மில் இல்லாததும், மட்டையில் புதிய வீரர்கள் சரிவர பரிமளிக்காததும் வெற்றிக் கணக்கை மட்டுப் படுத்தியுள்ளது என்றே நினைக்கிறேன்.

தொடரில் என்னைப் பொருத்தவரை ஜொலித்தவர்கள்:      
                   இஷாந்த், முனாஃப், ப்ரவீன், லக்‌ஷ்மண், த்ராவிட்
நிலைமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள்:
                  ரெய்னா, தோனி
சொதப்பியவர்கள் : 
                  விஜய், கோஹ்லி, பஜ்ஜி (பந்து வீச்சு;  பின்னே அது தானே அவர் வேலை)


இங்கிலாந்து தொடரைப் பொருத்தவரை பெரும்பாலான பெரிய தலைகள் அணிக்குள் திரும்புவதால் அணி சற்று வலுவடைந்திருப்பதாகவே தெரிகிறது. 5 நாள் போட்டியை பொருத்தவரை 4 வேக பந்தாளர்களூடன் களம் இறங்குவதே நல்லது என நினைக்கிறேன் (பஜ்ஜி வந்தால் lower order சற்று வலுப்படும் என்றாலும் கூட). தற்போதைய 3 வேகப் பந்தாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஜாகிரும் சேர்ந்தால் நல்ல attack கிடைக்கும். மட்டையை பொருத்தவரை, கம்பீர், ஷேவாக்/முகுந்த், மும்மூர்திகள், தோனியுடன், யுவராஜ்-க்கும் வாய்ப்பு கொடுக்கலாம். யுவராஜ் பொதுவாக இங்கிலாந்துடன் நன்றாக விளையாடுபவர் - பாகிஸ்தானில் அகீப் ஜாவெத் போன்றவர்கள் இந்தியாவிடம் நன்றாக விளையாடுவது போல் - , தற்போது நல்ல ஃபார்மிலும் இருந்தார்என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு போட்டியில் சொதப்பினால் ரெய்னா மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


இங்கிலாந்தும் - அவர்கள் வீட்டிலாவது அதிலும் 5 நாள் போட்டிகளில் - சற்று வலுவான அணிதான். 


பார்ப்போம்.