தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 06, 2013

குட்டிச் சுட்டீஸ் – ஒரு கோரிக்கை


சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ‘குட்டிச் சுட்டீஸ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


90களின் இறுதியில் (1999-2000) தூர்தர்ஷனில் DD-II என்ற சேனல் வந்து கொண்டிருந்தது. அதை DD-மெட்ரோ என்ற பெயரில் அழைத்து வந்தனர். நான்கு மெட்ரோ நகரங்களிலும் இதில் நிகழ்ச்சிகள் 9 கோல்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கூட்டுடன் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தன. பின்னர் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த 9 கோல்ட் ஸ்டார் டிவியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் இது நிறுத்தப்பட்டுவிட்ட்து.

இதில் தில்லி மெட்ரோவில் ‘போல் பேபி போல்’ என்ற நிகழ்ச்சி நட்த்தப்பட்டு வந்தது. இந்தக் ’குட்டிச் சுட்டிஸ்’ நிகழ்ச்சி அந்நிகழ்ச்சியிலிருந்து வடிவமைக்கப்பட்ட்தே.

இந்த நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சியில் ‘சொல்லுங்கண்ணே’ புகழ் இமான் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு உள்ள அவர் தொகுத்து வழங்குவதால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அனைவருக் கண்டு களிக்கும் வகையில் நட்ததப்பட்டு வருகிறது. சன் குழுமத்தின் தெலுங்கு சேனல்களில் இந்நிகழ்ச்சி பின்னணிப் பாடகர் மனோ அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் இமான் கேட்கும் கேள்விகளுக்குக் குழந்தைகள் அளிக்கும் பதில்கள் மிகவும் கலகலப்பாக இருக்கும். அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க ஒரு நல்ல நிகழ்ச்சி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், நிகழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது. இமான் நிகழ்ச்சியில் அடிக்கடி தன் உருவத்தையும் தன் நிறத்தையும் கிண்டலடித்துக் கொண்டோ அல்லது குழந்தைகளை அதைப் பற்றி கிண்டல் அடிக்கும் விதத்திலோ கேள்விகளைக் கேட்கிறார். அனைவரும் அதைக் கேட்டு சிரிக்கிறார்கள்/சிரிக்கிறோம்.
 
ஆனால், இது குழந்தைகளிடம் அடுத்தவரின் உருவத்தையும் நிறத்தையும் (குறிப்பாக கரு நிறத்தில் இருப்பவர்களை) கிண்டல் செய்ய மேலும் தூண்டிவிடும். நாளடைவில், உடல் குறைப்பாடு உள்ளவர்களையும் கிண்டல் செய்வதிலும் இது வளர்ந்து விடும்.

இது சிறு குறை தான் என்றாலும் சிறு குழந்தைகளின் மனதில் இது போன்ற மாசுகளை மேலும் ஏறவிடாமல் செய்வது ஊடகங்களின் கடமை. அதிலும் குடும்பத்துடன் இணைந்து கண்டுகளிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் இந்த குறைபாட்டை நிறுத்துவது மிகவும் அவசியம்.

இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு மிகுந்த இமான் போன்றவர்களால் இது போன்ற குறைகள் இல்லாமலும் நடத்த முடியும்.

சன் தொலைக்காட்சியும் இமான் அவர்களும் இந்தக் குறையை நீக்கி மேலும் சிறப்புடன் நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதே நம் கோரிக்கை.

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

தமிழ் தொலைக்காட்சிகள் - வாழ்க்கை ஒரு வட்டம்


தமிழ்த் தொலைக்காட்சிகளில் இன்றைய தினம், ஏன் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, முதல் இடம் வகிப்பது சன் தொலைக்காட்சிதான் என்பதில் எவருக்கும் ஐயமிருக்காது.

அவர்கள், அப்பொழுது முன்னணியிலிருந்த ”தூர்தர்ஷன்”-ஐ வெகு விரைவிலேயே அவ்விடத்திலிருந்து நீக்கி விட்டு முன்னிலைப் பெற்றார்கள். இதற்குக் காரணங்கள்,

”தூர்தர்ஷனின் (அல்லது அப்பொழுது மத்திய அரசின்) இந்தி திணிக்கும் அணுகு முறை. ஒரு Monopoly-ஆக இருந்த DD, தேசிய ஒளி பரப்பு என்ற தோல் போர்த்தி, தமிழில் வந்து கொண்டிருந்த  நிகழ்ச்சிகளை நீக்கி விட்டு, இந்தியில் வந்த தொடர்களையும், வட மாநில கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்நதனர். சென்னையிலாவது பரவாயில்லை, சென்னை நிலையம் சில/பல நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்தது. ஆனால், மற்ற இடங்களில், குறிப்பாக மத்திய , மேற்கு, தென் மாவட்டங்களில் (கொடைகானல் Transmitter வழியாக)  தில்லி நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் ஒளி பரப்பினார்கள். மக்கள் வேறு தொலைகாட்சி இல்லாததால் வேறு எதையுமே பார்க்க முடியாத நிலைமை. (1980-களின் துவக்கத்தில் சென்னைத்தொலைக்காட்சி தான் நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்தது. பிறகு, ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்தது போல் 1 மணி நேரமாக இருந்த தேசிய ஒளி பரப்பு முழுவதுமாக ஆக்கிரமித்த்து. 1986-87 க்கு பிறகு தான் நிலைமை படு மோசம்.)  இந்த நிலையில், 1992-இல் தகவல் தொழில் நுட்ப துறையில் தனியாரும் அனுமதிக்கப் பட்டப் பின், முதலில் துவங்கிய ”சன் தொலைக்காட்சி” க்கு மக்களின் அமோக ஆதரவு இருந்ததில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. தமிழகத்தை விட்டு, எங்களைப் போல, வெளி மாநிலத்தில் இருப்பவர்களுக்கு தமிழில் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், தமிழக நிகழ்வுகளை அறியவும் ”சன் தொலைக்காட்சி”தான் ஒரே சாதனம்.

பின்னர், வேறு பல “சானல்”கள் வந்தாலும் சன், தன் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக தன் தொலைக்காட்சி தொடர்கள் மூலம், பெண்களிடம் இன்னமும் சன் தொலைக்காட்சி தான் முதல் விருப்பமாக இருக்கிறது.

ஆனால், விஜய், ராஜ் போன்றவர்கள் இந்தியில் எடுக்கும் தொடர்களை தமிழ் படுத்தி (தமிழையும் படுத்தி!!!) தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

தமிழ் தொடர்களையே பார்க்க முடியவில்லை (எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டோம்; ஆனாலும் நண்பர்கள் வீட்டிலோ சென்னை வரும் போதோ சென்னையிலிருந்து உறவினர்கள் வந்தாலோ பார்க்க வேண்டியிருக்கிறதே). இதில் இந்தி dubbing தொடர்களை எப்படிப் பார்க்கிறார்களோ?

இந்நிலையில், நேற்று, “கலைஞர்” தொலைக்காட்சியிலும் ஒரு இந்தி தொடரை (சீதா) ஒளிபரப்பப் போகின்றார்களாம்.

இன்னமும் சன் தான் மிஞ்சியிருக்கிறது. அவர்களும் ஏதாவது ஒளி பரப்பினால் இந்த வட்டம் நிறைவு பெறும்.

எவ்வளவோ பார்த்து விட்டோம். இதையும் பார்ப்போம்.