செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

கலவை (2)

நீதிபதி சௌமித்ரா சென்னின் “impeachment தீர்மாணம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது. முதல் நாள், சென் தன்னிலை விளக்கம் அளித்தார். தன் மேல் சாற்றப் பட்டிருக்கும் (நிதி முறைகேடு) குற்றச்சாட்டின் காலம் தான் பதிவியேற்பதற்கு முன்னதானது எனவும் அவை சரிவர நிரூபிக்கப் படவில்லை (வங்கி குறிப்புகள் கிட்டவில்லை) தான் நீதித்துறையைத் தூய்மை படுத்துதல் என்ற பெயரில் பலி ஆடு ஆக்கப்ப்டுவதாகவும் திறமையாக வாதாடினார். அதைக்   கேட்டவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு அளித்திருப்பார்கள். அடுத்த நாள், சமாஜ்வாதி உறுப்பினர் சதீஷ் சந்தர் யாதவ் அவருக்கு ஆதரவாக (தீர்மாணத்தை எதிர்த்து) நன்றாக வாதாடினார். ஆனால் அவர்களின் வாதத்தை கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, பாஜகவின் அருன் ஜெட்லி ஆகியோர் திறமையாக தகுந்த ஆதாரங்களோடு நன்றாகவே தகர்த்தனர். சென்னின் விளக்கத்தில் இருந்த திசை திருப்பல்களையும் பொய்களையும் தகுந்த ஆதாரத்துடன் உடைத்தனர். இறுதியில் சமாஜ்வாதி ஜனதாகட்சி தவிர அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அடுத்தவாரத்தில் இது மக்களவையிலும் வர உள்ளது. அங்கு விரிவான வாத விவாதங்கள் இருக்குமா என பார்ப்போம். இந்த (மாநிலங்கள் அவை) விவாதங்களைப் பார்த்தவர்கள் நிச்சயமாக நாடாளுமன்ற விவாதத்தின் தேவையை உணர்ந்திருப்பார்கள். என்ன இவர்கள் - மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் - பின் பக்க வாசல் வழியாக நாடாளு மன்றம் வந்தவர்கள் என விமர்சிக்கப்படுபவர்கள். அது ஒன்று தான் குறை.

அடுத்து, ஆந்திராவில் ஜகன்நாத ரெட்டியின் வீடு(கள்), அலுவலகங்கள் மற்றும் சாக்ஷி தொலைக்காட்சி அலுவலக சிபிஐ சோதனை விவகாரத்தில், அவரின் ஆதரவாளர்கள் பதவியைத் துறந்துள்ளனர் – YSR-ன் பெயர் குறிப்பிடப்பட்ட்தால். என்னைப் பொருத்தவரை அவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஏனெனில், ஜகன் சமீபத்தில் தான் தேர்தலில் மிக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு, காங்கிரஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வேறு கட்சிகள் வலை வீசும். அதில் தங்களுக்கு பங்கும் கிட்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். மேலும் அவரின் பெயரிலா (Benami) சொத்துக்களிலும் தொடர்பு இருக்கிறதோ என்னவோ? பார்ப்போம்.

அடுத்து, முதல்வர் ஜெ, தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றி உள்ளார். இதற்கு இப்பொழுது எந்த தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை. தவிரவும், சுதந்திர தின உரையில் மக்கள் கடந்த 5 ஆண்டு ஆட்சி கொடுமைகளிலிருந்து விடுதலை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுக்குப் பிறகு இது போல வேறு ஒரு சுதந்திர தினமும் மக்களுக்கு கொண்டாட வேண்டிவரும். இன்னமும் அப்படியேதான் இருக்கிறாரா அல்லது பழைய பழக்கம் அவ்வப்போது தலை தூக்குகிறதா என்று தெரியவில்லை.

நான்காவது போட்டியிலும் தோல்வி. 20 ஆண்டுகளுக்கு பிறகு முழு வெள்ளையடிக்கப் பட்டுள்ளனர். காரணம், 4 வேகப் பந்தாளர்கள் இல்லாமல் கலம் இறங்கியது; மட்டையாளர்களின் Out of form. (எட்டு innings-ல் ஒன்றில் தான் 300 ஓட்டம்); போதிய உடல் தகுதி இன்றி வீர்ர்களை கலம் இறக்கியது. முனைப்பில்லாமல் ஆடியது (குறிப்பாக இரண்டாவது போட்டியில் 2 நாள் முன்னணி வகித்தும் வாய்ப்பை நழுவ விட்டது). தோனி இப்பொழுது யாரும் தூங்கவில்லை அதனால் Wake-up Call தேவையில்லை என்று கூறியுள்ளார் அதுவும் சரிதான் Nightmare இருக்கும் பொழுது எப்படி தூக்கம் வரும். இப்பொழுது பயிற்சி ஆட்டங்களில் – சிறிய் அணிகளுடன் தான் என்றாலும் – வெற்றி பெற்றிருக்கிறார்கள். பார்ப்போம்.

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

லோக்பால் (தொடர்ச்சி)

பொதுவாக லோக்பால் குறித்து என் ஆதரவைத் தெரிவித்திருந்தேன். இதில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை

இருந்தும் இதில் மேலும் சில கருத்துகள் இருக்கின்றன. அவை என்ன?

(1)  அரசு கொணர்ந்த சட்ட வரைவு எதற்கும் உதவாத ஒன்று என்பதில் மாற்றம் இல்லை. ஆனால், அன்னா ஆதரவாளர்கள் அவர்களின் “ஜன் லோக்பால்”  மட்டுமே ஏற்போம் மற்றவற்றைப் பார்க்கக் கூட மாட்டோம் என்று கூறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

(2)  30-ம் தேதிக்குள் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும் சற்று இயலாத செயல் தான். அதனால், அவர்களின் முக்கியக் கோரிக்கையான பிரதமர் மற்றும் உயர் அதிகார வர்க்கத்தை (நீதித் துறை உட்பட) இதன் கீழ் கொண்டுவந்து அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே நடைமுறை சாத்தியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கொல்கத்தா உயர் நீதி மன்ற நீதிபதி சௌமித்ரா சென்னின் “impeachment தீர்மாணம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதில் சமாஜ்வாதி ஜனதாகட்சி தவிர அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல் நாள் சென்னின் தன்னிலை விளக்கம் கேட்டவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு அளித்திருப்பார்கள். அடுத்த நாள், சமாஜ்வாதி உறுப்பினர் சதீஷ் சந்தர் யாதவ் அவருக்கு ஆதரவாக (தீர்மாணத்தை எதிர்த்து) நன்றாக வாதாடினார். ஆனால், அவர்களின் வாதத்தை கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, பாஜகவின் அருன் ஜெட்லி ஆகியோர் திறமையாக தகுந்த ஆதாரங்களோடு நன்றாகவே தகர்த்தனர். சென்னின் விளக்கத்தில் இருந்த திசை திருப்பல்களையும் பொய்களையும் தகுந்த ஆதாரத்துடன் உடைத்தனர். இது போன்ற ஒரு விவாதம் லோக்பால் மசோதாவிற்கும் நடந்து அது நிறைவேற்றப்பட வேண்டும். அதுதான் நல்லது. அதற்காகவாவது அன்னாவின் காலவரையை அரசு ஏற்கக் கூடாது.

(3)  லோக்பால் விவகாரத்தைப் பொருத்தவரை பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தன் மித்ராவோ அன்னா ஏழு வருட ஆட்சியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டம் இது என்கிறார். ஆனால், அன்னா ஆதரவாளர்கள், சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு 45 வருடங்கள் அவகாசம் தந்துவிட்டதாகவும் அதனால் 30-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். 45 வருடங்களில் பாஜக வின் ஆட்சியும் அடங்கும். அவர்கள் ஆட்சியில் இது ஏன் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

(4)  அன்னா ஆதரவாளர்களிடையே உணர்ச்சி அதிகமாகத் தெரிகிறதே தவிர தர்க்க ரீதியாக விவாதிக்க குறைவான நபர்களே உள்ளனர். [அதிலும், கிரன் பேடி கூறிய “அன்னா தான் இந்தியா; இந்தியா தான் அன்னாஅபத்தத்தின் உச்சம். 1970-80-களில் இந்திரா ஆதரவாளராக இருந்திருப்பாரோ? (அதே கோஷம். “Why blood? Same blood”)]. அதனால் இந்தப் போராட்டம் வன்முறைக்கு மாறிவிடுமோ என்ற அச்சம் அவ்வப்போது வருகிறது - குறிப்பாக கேஜ்ரிவால் பேசும் போதெல்லாம். [பேச்சு வார்த்தைகளில் பாஜகவின் சுஷ்மா காங்கிரஸின் சிபல் போல அன்னாவுக்கு கேஜ்ரிவால் – அவரிருக்கும் வரை பேச்சுவார்த்தை வெற்றி பெறுவது கடினம்].  

இருந்தும் வலுவான லோக்பாலுக்கு எனது ஆதரவு நிலையில் மாற்றம் இல்லை. அன்னாவின் இந்த போராட்டத்தில் – வன்முறையாக மாறாத பட்சத்தில் -  தவறு இருப்பதாகவும் கருதவில்லை. ஆனால் எதற்கும் ஒரு வரை இருக்கிறது. அது மீறப்படாமல் இருக்கும் வரை நல்லது

ஓர் அளவுக்கு மேல் வளைத்தால் எதுவும் ஒடிந்து தான் போகும். ஆனால், அந்த அளவு எது என்ற கேள்விக்கு தான் பொதுவாக விடைத் தெரிவதில்லை.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

க்ருஷ்ணாஷ்டகம்



இன்று  க்ருஷ்ண  ஜெயந்தி.

அதற்காக க்ருஷ்ணாஷ்டகம்.

அஷ்டகம் என்றால் எட்டு பாகங்களை (அல்லது) பத்திகளைக் கொண்ட்து.

சாதாரணமாக க்ருஷ்ணாஷ்டகம் என்றதும்  எல்லோருக்கும் நினைவுக்கு வருவது வஸுதேவ சுதம் தேவம் கம்ச சானூர மர்தனம் எனத் துவங்கும் அஷ்டகம் தான். இது யாரால் இயற்றப் பட்டது எனத் தெரியவில்லை.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட க்ருஷ்ணாஷ்டகம்.

ஸ்ரீ யஸ்லிஷ்டோ விஷ்ணு ச்திர சர குருர் வேத விஷயோ
தியாம் சாக்ஷி ஷுதோ ஹரிர சுர ஹந்தாப்ஜ நயன
கதி ஷங்கீ சக்ர விமல வனமாலீ ச்திர ருசி
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               1.

யத சர்வம் ஜாதம் வியத நில முக்யம் ஜகதிதம்
ஸ்திதௌ நிசேஷம் யோவதி நிஜ சுகம் ஸேன மதுஹா
லயே  சர்வம் ஸ்வாஸ்மின் ஹரதி கலயா யஸ்து ச விபு
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               2.

அசூநயம் யதௌ யநி நியம முக்யை சூக்ரானை
நிர்ருத யேதம் சிதம் ஹ்ருதி விலய மனீய சகலம்
யமீதம் பசயந்தி ப்ரவர மதயோ மயீ நமஸௌ
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               3.

ப்ரிதிவ்யம் திஷ்டன் யோ யமயதி மஹீம் வேதனதரம்
யமித்யதௌ வேதோ வததி ஜகத மீச மமலம்
நியந்தரம் த்யேயம் முநி சுர ந்ருநாம் மோக்ஷ தமஸௌ
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               4.

மஹீந்த்ராதி தேவோ ஜயதி திதி ஜன்யஸ்ய பலதோ
ந கஸ்ய ஸ்வதந்த்ரயம் க்வசி தபி க்ருதவ் யத் க்ருதி ம்ருதே
கவித்வ தேர்கவம் பரிஹரதி யோஸௌ விஜயிந
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               5.

விநா யஸ்ய த்யாநம் வ்ரஜதி பசுதாம் சூக்ர முகாம்
விநா யஸ்ய ஜனனம் ஜநி ம்ருதி பயம் யதி ஜனதா
விநா யஸ்ய ஸ்ம்ருத்ய க்ருமி சத ஜனிம் யதி ச விபு
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               6.

நரா தங்கோ தங்க சரணி சரணோ ப்ரந்தி ஹரனோ
கன ஸ்யாமோ வாமோ வ்ருஜ சிசு வயஸ்யோ அர்ஜுன சக
ஸ்வயம்புர் பூதானம் ஜனக உசிதசர சுகத
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               7.

யதா தர்ம க்ளாநிர் பவதி ஜகதம் க்ஷோப கரண
ததா லோக ஸ்வாமி ப்ரகதித வபு சேது த்ருகஜ
சதம் ததா ஸ்வசோ நிசம்ஸ குண கீதோ வ்ருஜபதி
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய:               8.

இதி ஹரிர் அகிலாத்ம ஆராதித ஸங்கரேன
ஸ்ருதி விசத குணோஸௌ மாத்ரு மோக்ஷார்த மதயு
யதி வர நிகதே ஸ்ரீயுக்த ஆவிர் பபூவ
ஸ்வகுண வ்ருத உதார ஷங்க சக்ராப்ஜ ஹஸ்தா.

இதி சங்கராசார்ய விரசிதம் க்ருஷ்ணாஷ்டகம் ஸமாப்தம்.

இந்த கடைசி பலச்ருதியை வைத்து இது ஆதி சங்கரரால் அவர் தாய்க்கு இறுதி சடங்கு செய்த போது தன் தாய்க்கு மோக்ஷம் கிட்ட வேண்டி இயற்றியதாகக் கூறுவார்கள். வேறு ஒரு இடத்தில் சங்கரரின் தாய், தன்னை அழைத்துச் செல்ல வந்த சிவ கணங்களைக் கண்டு பயந்ததாகவும், அதனால் சங்கரர் விஷ்ணுவை பாதாதி கேசம் வர்ணித்து பாடல் இயற்றியதாகவும் படித்துள்ளேன். அது இந்த க்ருஷ்ணாஷ்டகம் தானா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் அது பற்றி குறிப்பிடவும்.

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

கலவை


சென்ற வாரம் அன்னா ஹசாரே-தான் மிக முக்கிய செய்திகளில் இடம் பிடித்தவர். இதைப் பற்றி ஏற்க்கனவே எழுதி விட்டேன். இப்பொழுது அரசு அவருக்கு, 15 நாட்கள் ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த / உண்ணாவிரதம் இருக்க அனுமதித்துள்ளனர். என்னத் திருப்பங்கள் நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.

அடுத்த முக்கிய நிகழ்வாக நான் கருதுவது கொல்கத்தா உயர் நீதி மன்ற நீதிபதி சௌமித்ரா சென்னின் பதவி நீக்கம் தொடர்பாக மாநிலங்கள் அவையில் நடைபெற்ற விவாதம். கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரியால், சென்னுக்கு எதிராக மாநிலங்கள் அவையில் கொண்டுவரப்பட்ட “impeachment (குற்றப்பழி!!!) தீர்மாணம் நிறைவேற்றப்பட்டால் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒர் நீதிபதி நாடாளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்படுவார். இதில் காங்கிரஸுகு இரு தலைக் கொள்ளி நிலை தான். ஏனென்றால் பதவி நீக்கத்திற்கு ஆதரவு அளித்தால், நீதித்துறையின்  வெறுப்பை சந்திக்க வேண்டும்; எதிராக வாக்களித்தால் எதிர் கட்சிகளின் வாய்க்கு மேலும் அவல் கிட்டும். ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டு அல்லலுறும் காங்கிரஸ், முன்னர் நீதிபதி ராமதாஸ்-க்கு உதவியது [மக்களவையில் அவருக்கு எதிராக கொண்டு வந்த (முதல்) impeachment தீர்மானத்தில் வாக்கெடுப்பின் பொழுது வெளிநடப்பு செய்து] போல் செய்ய மாட்டார்கள் என்று தான் நினக்கிறேன். ஆனாலும், சென்-ஐ அவர்கள் தானாக பதவி விலகுமாறு நிர்பந்திப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். ஆனால், அவரோ மாநிலங்கள் அவையில் தான் (நீதித்துறைத் தூய்மை படுத்துதல் என்ற பெயரில்) பலி ஆடு ஆக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் இது நீதித்துறைக்கும் நாடாளு மன்றத்திற்கும் அவ்வப்போது நடக்கும் யார் பெரியவர் என்ற போட்டியை மேலும் அதிகரிக்காமல் இருந்தால் சரி. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

அடுத்து தில்லியில், உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை. யமுனையில் வெள்ளம் அபாய நிலையைத் தொட்டுள்ளது. இத்துணைக்கும் இந்த ஆண்டு,  வானிலைத் துறை அறிக்கையின் படி, சாதாரண மழைதான். ஆனாலும் ஆறுகளில் வெள்ளம். காரணம் மணல் கொள்ளை!! மேலும், பல்வேறு நீர் பிடி துறைகளை (ஏரி, குளம் அனைத்தையும்) வீட்டுமனைகளாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றிவிட்டுள்ளோம். இதன் பயன் மழைக்காலங்களில் வெள்ளம், கோடையில் நீர் பற்றாக்குறை.

வீட்டுமனை என்றவுடன் ஒன்று நினைவுக்கு வருகிறது. சமீப காலமாக எல்லா சேனல்களிலும் (குறிப்பாக தமிழ் சேனல்களில்) வீட்டு மனை விளம்பரங்கள் பெருகியுள்ளன. இதற்கும், நில ஆக்கிரமிப்பு செய்திகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றேத் தோன்றுகிறது. இதைப் பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

அடுத்து, ஆந்திர உயர் நீதி மன்ற ஆணைப்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில், ஜகன்நாத ரெட்டியின் வீடு(கள்), அலுவலகங்கள் மற்றும் அவரின் சாக்ஷி தொலைக்காட்சி அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. அவருக்கும் (ரத்த சரித்திரம் புகழ்) படுதல ரவிக்கும் இருந்த சண்டை அனைவரும் அறிந்த்தே. அதற்கு அடிப்படையே சுரங்கத் தொழில் தான். ஏற்கனவே கர்நாடகத்தில் சுரங்கத்தொழிலில் நடைபெறும் முறைகேடுகள் வெளிவந்துள்ளன. ஆந்திராவில் “தோண்டினாலும் மேலும் பூதங்கள் வெளிவருமோ என்னவோ?

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷம்மி கபூர் சென்ற வாரம் காலமானார்.  மிகப்பெரிய் வெற்றிப் படமான  ஜங்லீ (காட்டுவாசி என்று பொருள்) படம் வெளிவந்த பின் அதே போன்ற படங்களிலேயே நடித்த்தால் மிக நல்ல நாயக நடிகர் என்று கூற முடியாது. ஆனால் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நன்றாகவே நடித்துள்ளார் [தமிழில்  கார்த்திக் -உடன் ”அமரன் ” திரைப்படத்திலும் நடித்துள்ளார்]. இவரும் அசோக் குமாரும் நடித்த “பான் பராக்” விளம்பரம்  1980-90 களில் மிகப் பிரபலம். எனது அபிமான பாடகர் முகமத் ரஃபி தான் இவர் நடிக்கும் படங்களில் அநேகமாக பாடுவார். அதனாலேயே இவர் படங்களை விரும்பிப் பார்த்துள்ளேன்.  அவர் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.

மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய பின் இன்று  இந்திய இங்கிலாந்து அணிகளிடையே நான்காவது  கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. சென்ற போட்டியைப் போலவே சேவாக் நடக்கும் நிலையில் இருந்தாலேயே அணியில் இடம் பெறுவார் என்று கூறாமல், முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே கலமிறக்கப் பட வேண்டும். மேலும், நான்கு வேகப் பந்தாளர்கள் இல்லாமல் கலம் இறங்கினால் இதிலும் தோல்விதான் கிட்டும். ஏழு மட்டையாளர்களாலேயே இதுவரை, 300 எட்ட முடியவில்லை. அதை ஆறாகக் குறைத்தாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.   முழு வெள்ளையடிக்கப்படுமா அல்லது கொஞ்சமாவது தேறுமா என்று பார்ப்போம்.

புதன், ஆகஸ்ட் 17, 2011

லோக்பால்


லோக்பால்

இந்த வாரம் செய்திகளைப் பொறுத்தவரை “அன்னா ஹசாரேவாரம். குறைந்த்து ஒரு வாரத்திற்கு ஹசார்(ரே) (இந்தியில் ஹசார் என்றால் ஆயிரம் என்று பொருள்) முறை  “Flash News” போடலாம். நல்ல தீனி.

இந்நிலையில் அன்னாவைப் பற்றியும் (அவருடைய அறக்கட்டளையில் நடந்துள்ள அல்லது நடந்ததாகக் கூறி) செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் என்னைப் பொருத்தவரை இப்பொழுது நாம் பார்க்க வேண்டியது அவர் எப்படிப் பட்டவர் என்பது அல்ல. அவருடைய போராட்டம் எதற்கு , அதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம், அதன் பின் உள்ள குறிக்கோள் ஆகியவையே.

முதலில் இது லோக்பால் சட்ட வரைவு 1968-ல் சாந்தி பூஷன் அவர்களால் கொண்டு வரப்பட்ட்து. ஆனால், 1969-ல் இது மாநிலங்கள் அவையால் நிராகரிக்கப் பட்டது. இதற்கு சற்று முன் பார்த்தோமானால், இது 1966-ல் மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் நிர்வாக சீரமைப்பு ஆணையம் (Administrative Reforms Commission) தன் இடைக்கால அறிக்கையில், பொது மக்களின் குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்வு காண, – (1) லோக்பால் (Ombudsman; தமிழில் தெரியவில்லை அறிந்தவர்கள் கூறவும்) (2) லோகாயுக்த் (மக்கள் ஆணையம்!!!)  - என்ற சுதந்திர அமைப்புகளைத் (தேர்தல் ஆணையம், உச்ச நீதி மன்றங்கள் போன்றவை) துவங்க பரிந்துரத்தது. அதன் தொடர்ச்சியாகவே மத்தியில் லோக்பாலும் மாநிலங்களில் லோகாயுக்தாவும் சட்ட வரைவுகளாக்க் கொண்டுவரப்பட்டன.

இந்த லோக்பால் வரைவு இதுவரை 10 முறை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இங்கிலாந்து சென்ற இந்திய அணிபோல் “ரொம்ப நல்லவனாகஇருந்துள்ளது.

ஆக, இந்த சட்ட்த்தின் தேவை இன்று திடீரென எழுப்பப் பட்ட்து அல்ல. இதன் பயனை (லோகாயுக்த்) சில தினம் முன்னர் தான் கர்நாடகத்தில் பார்த்தோம். மாநிலங்களுக்கு லோகாயுக்த் தேவை என்றால் மத்தியில் லோக்பாலும் தேவை. அதில் பிரதமரும் நீதித்துறையும் சேர்க்கப்படவில்லை என்றால் அது வெறும் கண் துடைப்பே. அதனால் தான் ஜன் லோக்பல் மசோதா (இது வழக்குரைஞர் சாந்தி பூஷன்; ப்ரகாஷ் பூஷன் (மகன்) , கர்நாடக லோகாயுக்த் தலைவர் ஹெக்டே, அர்விந்த் கெஜிர்வால் ஆகியோரையும் உறுப்பினர்களாகக் கொண்ட) தனியார் குழுவினால் வரையப்பட்ட வடிவத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்த வேண்டும்.

இதில் அன்னா ஹசாரே எங்கே வந்தார் என்று பார்ப்போம்.

அன்னா ஹசாரே 1991-லிருந்தே மராட்டிய மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக “ப்ரஷ்டாசார் (ஊழல்)  விரோதி ஜன் அந்தோலன்என்ற இயக்கதின் மூலம் பல்வேறு பிரச்ச்சனைகளுக்காக போராடியவர்.

அதன் தொடர்ச்சியாக 2000 ஆண்டு துவக்கத்தில் மராட்டிய மாநிலத்தில்தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கப் போராடினார். இன்று நம்மிடம் உள்ளதகவல் உரிமை சட்டத்தின்முன் மாதிரியே அதுதான். மராட்டிய மாநில சட்ட்த்தின் மாதிரியை வைத்து தான் இந்திய அரசே 2005-ல் அச்சட்ட்த்தை இயற்றியது. மேலும், முதலில் அச்சட்ட்த்தில் அரசாங்க கோப்புகளில் அதிகாரிகளின் குறிப்புகளை (Notes என்று அரசு அலுவலகங்களில் கூறுவர்) சேர்க்க மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து 2006 ஆகஸ்த் 9-ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். அது 19-ம் தேதி அரசு பணியும் வரைத் தொடர்ந்தது.

அன்னாவைக் குறை கூறுபவர்களின் முக்கிய குற்றச்சாட்டு அவருடைய அறக்கட்டளைகளில் நடந்துள்ள ஊழல்களைப் பற்றிய சாவந்த் கமிட்டியின் அறிக்கையும் அவர் பிறந்த தினக் கொண்டாடங்களுக்கு அறக்கட்டளை நிதி பயன்படுத்தப் ப்ட்டுள்ளது என்பதே ஆகும். இந்த சாவந்த் கமிட்டியே தேசியவாத காங்கிரஸின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக அன்னா மேற்கொண்ட போராட்டங்களை அடுத்து அப்பொழுதைய முதல்வர் ஷிண்டே-வால் அமைக்கப்பட்டது என்பது தான் இதிலுல்ல முகைநரண். (இதனால் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு பொய் என்பது என் கருத்தல்ல. குற்றச்சாட்டு உண்மையென நிறுவப்பட்டால் – அதைப் பற்றி விசாரிக்க வேண்டியது அரசின் கடமையும் கூட - அவரும் தண்டிக்கப் பட வேண்டியவரே.).

ஆக அவரின் முந்தைய நோக்கமான தகவலறியும் உரிமை சட்டத்தின் பலன்களை பெற்றுள்ள நாம் இப்போது அவரின் நோக்கத்தை வேறாக நினைக்கவில்லை.

மூன்றாவதாக அவரின் போராட்ட முறை, இது அவரால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழியை சமீபத்தில் சில தலைவர்கள் (வேறு யார்? – ராம்தேவ், குமாரசாமி மற்றும் நம் கலைஞர்) கொச்சைப் படுத்தியிருந்தாலும், இதைத் தவிர வேறு சிறந்த வழி இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே இதற்கு எனது ஆதரவு உண்டு.

சனி, ஆகஸ்ட் 13, 2011

சாதன பஞ்சகம்




ஆதி சங்கரர் (குறிப்பாக தன் மாணவர்களுக்கு) ஸாதன பஞ்சகம் என்ற ஒன்றை அருளியுள்ளார். இந்த நேரத்திற்கு அதைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாக பஞ்சகம் என்றால் ஐந்து உட்பொருளை அல்லது ஐந்து அங்கங்களை தன்னுள் கொண்டது என்பது பொருள்

ஸமஸ்க்ருத்தில், இவ்வாறு பல தொகுப்புகள் உள்ளன. அனைவரும் பொதுவாக அறிந்தது தைத்ரீய உபநிஷத்-இல் வரும் “சாந்தி பஞ்சகம்”.


வேதோ நித்யம் அதீயதாம்
ததுதிதம் கர்ம ஸ்வானுஷ்டீயதாம்
தேன ஈசஸ்ய விதீயதாம்
அபசித: காம்யே மதிஸ்தஜ்யதாம்
பாபெளக: பரிதூயதாம்
பவஸுகே தோஷோ (அ)னுந்தீயதாம்
ஆத்மேச்சா வ்யவஸீயதாம்
நிஜக்ரிஹாதூர்ணம் வினிர்கம்யதாம்

வேதம் தினமும் ஓதவும்.
அதன்படி கர்மாக்களை செய்யவும்.
அவற்றை(கர்மாக்களை) ஈஸ்வர அர்பணம் செய்யவும்
மனதை சிதைக்கும் ஆசைகளை விட்டொழிக்கவும்.
பாவங்களையும் - பாவ சிந்தனைகளை - ஒழிக்கவும்
உலக சுகம் நிலையற்றது/அதிருப்தி தருவது  என அறி
ஆத்மத்தை (தன்னை) அறிய விடாமுயற்சியுடன் முயல்
தன்னிலையை* (அகந்தையை) துற
 (*சிலர் இல்வாழ்வை என்றும் பொருள் கூறுகிறார்கள்)
ங்க: ஸத்ஸு விதீயதாம்
பகவதா பக்திர் த்ரிடா (அ)தீயதாம்
சாந்த்யாதி: பரிசீயதாம்
த்ரிட தரம் கர்மாசு ஸந்த்ய ஜ்யதாம்
ஸத் வித்வான் உபஸ்ருப்யதாம்
ப்ரதி தினம் தத்பாதுகா சேவதாம்
ப்ரஹ்மைகாக்ஷரம் அர்த்யதாம்
ச்ருதி சிரோ வாக்யம் ஸமாகர்ண்யதாம்
ஸாதுக்களைத் துணை கொள்க.
பகவத் பக்தியில் உறுதியுடன் இருக்க
சாந்தி முதலிய சத்குணங்களை வளர்த்துக்கொள்க
எல்லா ஆசை வயப்பட்ட செய்கைகளை கைவிடுக
நல்ல வித்வானிடம் (குருவிடம்) தஞசம் அடைக
தினமும் (மேற்சொன்னவரின்) பாத சேவை செய்க.
ப்ரணவத்தை (இறையை) வழிபடுக
ச்ருதி(வேத உபநிடதம்)களை ஆழ்ந்து கேட்க.

வாக்யார்தஸ்ச விசார்யதாம்
ச்ருதி சிரோ பக்ஷஸ் ஸமா ஸ்ரீயதாம்
துஸ் தர்காத்ஸு விரம்யதாம்
ச்ருதி மதஸ் தர்கோ அனுஸந்தீயதாம்
ப்ரமாஸ் மீதி விபாவ்யதம்
அஹ ரஹர் கர்வ: பரித்ய ஜ்யதாம்
தேஹோ (அ)ஹம் மதிஸ்த்ய ஜ்யதாம்
புத ஜனைர்வாத: பரித்ய ஜ்யதாம்

வேத வாக்யங்களை சிந்தித்து உணர்க
வேத ஸ்வரூபத்தில் சரணடை (ஆதாரமாக்க் கொள்)
வீண் விவாதங்களில் (கால)விரயம் செய்ய வேண்டாம்.
வேத(தில் உள்ள) தர்க்க நியாயங்களை கடைபிடிக்கவும்
ப்ரம்மத்தை உணர்க
அகந்தையை விட்டொழிக்கவும்
உடலே தான் என்ற எண்ணத்தை விடு
கற்றுணர்ந்த சான்றோர்களுடன் வாதிட வேண்டாம்

க்ஷுத் வ்யாதீஸ்ச சிகித்ஸ்யதாம்
ப்ரதிதினம் பிக்ஷெளஷதம் புஜ்யதாம்
ஸ்வாத்வான்னோ நது யாச்யதாம்
விதிவசாத் ப்ராப்தேன ஸ்ந்துஷ்யதாம்
சீதோஷ்ணாதி விஷஹ்யதாம்
நது வ்ருதா வாக்யம் ஸமுச்சார்யதாம்
ஒளதாஸீன்யம் அபீப்ஸ்யதாம்
ஜனக்ருபா நைஷ்டுர்யம் உத்ஸ்ருஜ்யதாம்

பசி பிணிக்கு சிகிச்சை எடு. [என்ன சிகிச்சை ...]
தினம் பிக்ஷையால் கிட்டும் உணவை மருந்தென உண்க.
சுவை/போகத்திற்காக (பொருளைத்) தேட வேண்டாம்
கர்மதினால் கிட்டுவதை (வத்து) திருப்தி அடையவும்
தட்ப வெப்பங்களை சகித்து(ஏற்று)க் கொள்க
வீணான பேச்சுக்களில் ஈடுபடாதீர்கள்.
உலக நடப்புகளால் பாதிக்கப்படாதிருங்கள்
பிறரின் கருணையையோ நிந்தனையையோ பொருட்படுத்தாதீர்

ஏகாந்தே ஸுகமாஸ்யதாம்
பரதரே சேத: ஸமாதீயதாம்
பூர்ணாத்மாஸு ஸமீக்ஷ்யதாம்
ஜகதிதம் த்தாபாதிதம் த்ரிச்யதாம்
ப்ராக்கர்ம ப்ரவிலாப்யதாம்
சிதி பலாத் நாப்யுத்தரை ஷ்லிஷ்யதாம்
ப்ராரப்த  த்விஹ் புஜ்யதாம்
அத பரப்ரஹ்மாத்மானமஸ்தீயதாம்
தனிமையில் (அமைதியில்) இனிமை காணுங்கள்
மனதை அமைதியுடன் இறைவனை எண்ணவும்
எங்கும் இருக்கும் ப்ரம்மத்தை உணருங்கள்
இந்த உலகானது மாயத்தோற்றமே என்றுணருங்கள்
பூர்வ ஜென்ம கர்ம வினைகளை வெல்ல முற்படுங்கள்
(வருங்கால) வினைகளை அறிவால் விடுபடவும்
பழைய கர்ம வினைகளை அனுபவித்தே தீர்த்துவிடுங்கள்
பின் தானே ப்ரம்மன் என்றுணர்ந்து (அதிலே) கரைக.

தமிழ் மொழி பெயர்ப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும்/நெறி படுத்தவும்.