அர்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 01, 2011

அர்களம் - 4 [ஸ்லோகம்]


அர்களம்

ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்கா க்ஷமா ஷிவா தாத்ரீ ஸ்வதா ஸ்வாஹா நமோஸ்துதே    ௧
[தேவியின் மேற்கண்ட 11 நாமங்களைக் கூறி வணங்குகிறோம்]

மதுகைடப வித்ராபி வித்யாத்ரு வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨
[மது, கைடபகர்களை அழித்து, ப்ரஹ்மனுக்கு வரமளித்தவளே (உன்னை) வணங்குகிறோம்; (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை (த்வி என்றால் இரண்டு என்று பொருள்; இரண்டாமவர் என்றால் அடுத்தவர், அதாவது நம்மைச் சேராதவர் என்பதால் குறிப்பால் பகைவர் என்பதைக் குறிக்கும்) அழி!]

மஹிஷாஸுர நிர்நாச விதாத்ரி வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௩
[மஹிஷாசுரனை அழித்தவளே, விதாத்ரிக்கு (ப்ரஹ்மன்) வரமளிப்பவளே  (உன்னை) வணங்குகிறோம்; (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

வந்திதாங்க்ரியுகே தேவி தேவி ஸௌபாக்யதாயினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௪
[(ப்ரஹ்மாதி முனிவர்களால்) வணங்கப்பட்ட பாதங்களை உடையவளே, நற்பயன்களை தருபவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ரக்தபீஜ வதே தேவி சண்ட முண்ட விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௫
[ரக்தபீஜன், சண்ட முண்டர்களை வதைத்தவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ சத்ரு விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௬
[சிந்தைக்கு எட்டாத (அடங்ககாத) பெருமைகளை உடையவளே, எல்லா பகைவர்களையும் அழிப்பவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ந தேப்ய: ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாய மே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௭
[சண்டிகையே! எப்பொழுதும் பக்தியுடன் வணங்குபவர்களுக்கும், வணங்கும் எனக்கும் (நீ) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஸ்துவத் பயோ பக்தி பூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௮
[பக்தியுடன் உன்னைத் துதிப்பவர்களின் வ்யாதியை நாசம் செய்யும் சண்டிகே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

சண்டிகே சததம் யே த்வாம் (அ)ர்சயந்தீஹ பக்தித:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௯
[உனது திருவடியை எப்பொழுதும் பக்தியுடன் அர்ச்சிக்கும் அன்பர்களுக்கு சண்டிகையே (நீ) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி ஸௌபாக்யம் (ஆ)ரோக்யம் தேஹி தேவி பரம் சுகம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧
[நற்பயன்களையும், ஆரோக்யத்தையும் சுகத்தையும் தரும் தேவியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

விதேஹி த்விஷதாம் நாசம் விதேஹி முச்சகை:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௧
[பகைவர்களை நாசம் செய்யும் பலத்தை உண்டாக்கும் (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௨
[மங்களத்தையும், திரண்ட ஐச்வர்யத்தையும் உண்டாக்கும் தேவியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

வித்யா வந்தம் யஷஸ் வந்தம் லக்ஷ்மீ வந்தம் ஜனம் குரு
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௩
[திருவடிகளைத் தொழுதவர்க்கு வித்தை, புகழ், ஐச்வர்யம் ஆகியவை தரும் (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ப்ரசண்ட தைத்ய தர்பத்னி சண்டிகே ப்ரணதாய மே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௪
[பராக்ரமசாலிகளான அசுரர்களின் அகந்தையை அழிக்கும் சண்டியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

சதுர்புஜே சதுர்வர்கத்ர ஸன்ஸ்துதே பரமேச்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௫
[நான்கு கைகளுடையவளும், நான்முகனால் துதிக்கப்பட்டவளுமான பரமேச்வரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

க்ருஷ்ணேன ஸன்ஸ்துதே தேவி சாஸ்வத பக்த்யா த்வம் (அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௬
[ஸ்ரீக்ருஷ்ணனால் நிலையான பக்த்தியோடு துதிக்கப்பட்ட அன்னையே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஹிமாசல சுதானாத் பூஜிதே பரமேசவரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி               ௧௭
[ஹிமாச்சல புத்திரியின் நாயகனால் (ஈஸ்வரனால்) பூஜிக்கப்பட்ட பரமேச்வரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஸுராஸுர சிரோ ரத்ன நித்ருஷ்ட சரணோ(அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௮
[தேவாசுரர்களின் தலையை ரத்தினமாக உடைய பாதங்களைக் கொண்டவளே (இங்கு வணங்கப்பட்ட என்றும் பொருள் கொள்ளலாம் சீவப்பட்ட தலைகள் காலடியில் கிடக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்) (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

இந்த்ராணி பதி ஸத்பவ பூஜிதே பரமேச்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௯
[இந்திராணியால் தன் கணவனின் நற்குணத்திற்காக பூஜிக்கப்படும் பரமேசரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி ப்ரசண்டதோர் தண்ட தைத்ய தப விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨
[சக்தி வாய்ந்த தோள்களை உடைய அசுரர்களின் எண்ணங்களை அழிப்பவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி பக்த ஜனோத்தாமதத்தானந்தோதயோ (அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨௧
[பக்த ஜன உத்தமர்களுக்கு ஆனந்தத்தின் உதயமாக இருக்கும் தாயே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

பத்னீம் மனோரமாம் தேஹி மனோ வ்ருத்தான் ()னுசாரிணீம்
தாரிணீம் துர்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்            ௨௨
[மனோ விருத்தியை அனுசரித்து, கடக்க முடியா ஸம்சார ஸாகரத்தை தாண்டுவதற்கு உகந்த, நற்குடி பிறந்த, மனதிற்கு இனிய மனைவியை தருவாயாக]

       இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
       ஸ து ஸப்தசதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பத:
[இந்த அர்கள ஸ்தோத்திரத்தைப் படித்து தேவியின் மஹாத்ம்யம் படித்தால், அவருக்கு ஸப்தசதீ பாராயண பலன் கிட்டும்]

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

அர்களம் - 3 [த்யான ச்லோகம்]

முதல் பகுதியில் தேவி மஹாத்ம்யம் பற்றியும் இரண்டாம் பகுதியில் தேவியின் 64 யோகினி நாமங்களையும் பார்த்தோம். இன்று அர்களத்தின் த்யான ச்லோகங்களைப் பார்ப்போம்



அதார்களம்

       அஸ்ய ஸ்ரீ அர்கள ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
       ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரிஷி:
       அனுஷ்டுப் சந்த:
       ஸ்ரீ மஹாலக்ஷ்மீ சண்டிகா தேவதா
      
       அம் பீஜம் கம் ஷக்தி: லம் கீலகம்
       ஸ்ரீ மஹா லக்ஷ்மீ சண்டிகா ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:

அம் கம் லம் இத்யாதி மி: ஷடாங்க ந்யாஸ:
[ஆறு அங்க ந்யாஸங்களை தகுந்த குருவிடமிருந்து கற்கவும், இவை சாதாரணமாக அணைத்து பூஜைகளிலும் – கணபதி பூஜை, வரலக்ஷ்மி விரத பூஜை போன்றவற்றிலும் -  கடைபிடிக்கப்படுபவை.]

த்யானம்

ப்ரகாஷ மத்ய ஸ்தித சித்ஸ்வரூபாம்
       வராப்யே ஸந்தததீம் த்ரி நேத்ராம்
சிந்தூர வர்ணாங்கித கோமலாங்கீம்
       மாயாமயம் தத்வமயீம் நமாமி

[ஒளியின் நடுவே விளங்கும் சித்த வடிவானவளும், வர-அபய முத்திரைகளைத் தரித்தவளும், மூன்று கண்களை உடயவளும் சிவந்த திருமேனியைக் கொண்ட அழகியும் மாயா வடிவமும் தத்துவ வடிவமும் கொண்ட (அன்னைக்கு) வணக்கம்]

அர்களம் கீலகம் சாதோ படித்வா கவசம் படேத்
ஜபேத் ஸப்தசதீம் பஷ்சவாத் ரும் ஏஷ சிவோதித:   (1) (௧)

[அர்களம் மற்றும் கீலகத்தை முதலிலும் அதன்பின் கவசத்தையும் படித்து, பின்பு ஸப்தசதியை ஜபம் செய்ய வேண்டும் என்பது சிவன் கூற்று]

அர்களம் துரிதம் ஹன்தி கீலகம் பலதம் ததா
கவசம் ரக்ஷதே நித்யம் சண்டிகா த்ரிதயம் படேத்   (2) (௨)

[அர்களம் பாபத்தை அழிக்கும்; கீலகம் வேண்டிய பலன் தரும்; கவசம் காப்பாற்றும். எப்போதும் சண்டியின் மூன்று சரிதத்தையும் படிக்க வேண்டும்]

அர்களம் ஹ்ருதயே யஸ்ய ததான் அர்களவானஸோ
பவிஷ்ய தீதி நிஷ்சித்ய சிவேன ரசிதம் புரா         (3) (௩)

[எவர் ஹ்ருதயத்தில் அர்களம் இருக்கிறதோ அவனுக்கு தடையேதும் இருக்காது என்பது சிவனால் உறுதி செய்யப் பட்டுள்ளது.]

கீலகம் ஹ்ருதயே யஸ்ய ஸ கீலிதமனோரத:
பவிஷ்யதி ந ஸந்தேஹோ நானயதா சிவபாஷிதம் (4) (௪)

[கீலகம் ஹ்ருதயதில் உறைபவனின் விருப்பங்கள் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை என்ப்து சிவன் வாக்கு]

கவசம் ஹ்ருதயே யஸ்ய ஸர்வத்ர கவசீ கலு
ப்ரஹ்மணா நிர்மிதம் பூர்வமிதி நிஷ்ச சேதஸா   (5) (௫)

[எவர் ஹ்ருதயத்தில் கவசம் இருக்கிறதோ அவன் என்றும் கவசம் அணிந்தவன் போலிருப்பான் என்பது ப்ரஹ்மாவால் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை மனதில் நிறுத்தவும்]

யா தேவி ஸ்தூயதே நித்யம் விபுத்தை வேத பாரகை:
ஸா மே வஸ்து ஜிஹ்வாக்ரே ப்ரஹ்ம ரூபா ஸரஸ்வதீ (6) (௬)

[எந்த தேவி வேதங்களின் கரைகண்டவளெனத் துதிக்கபடுகிறாளோ, அந்த ப்ரஹ்ம வடிவான ஸரஸ்வதி என் நாக்கு நுனியில் (வாக்கில்) வசிக்கட்டும்]

ஜய த்வம் தேவி சாமுண்டே ஜய பூதாபஹாரிணி
ஜய ஸர்வகதே தேவி காலராத்ரி நமோஸ்துதே     (7) (௭)

[சாமுண்டீ தேவியே, (ஊழிகாலத்தில்) ப்ராணிகளை அபகரிப்பவளே, எங்கும் நிரைந்தவளே, காலராத்ரி வடிவம் கொண்டவளே உனக்கு வெற்றி கூறி வணங்குகிறோம்]

மார்கண்டேய:
ஏகாபி த்ரிவிதா (ஆ)க்யாதா ஸப்ததா ஸைவ கீர்த்தின்தா
தஸ்யா பேதா:ச (அ)னன்தாஷ்ச தன்மஹாத்ம்யம் சிவோதயம் (8) (௮)

[மார்கண்டேயர் (கூறிய்து): தேவி, ஒருத்தியாக இருந்தும் மூன்று விதமாகவும் (மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாஸரஸ்வதி), ஏழுவிதமாகவும் (ஸப்த மாத்ருகா வடிவங்களான ப்ரஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, நரஸிம்ஹி (சில புத்தகங்களில் இது கணேச்வரி என்று உள்ளது), ஐந்திரி) கூறப்பட்டுள்ள இத் தேவியின் பேதங்கள் (உருவங்கள்) முடிவற்றவை அவளுடைய மஹாத்ம்யங்கள் (பெருமைகள்) பரமேச்வரனிடம் இருந்து உண்டானவை]

நாளை அர்கள ச்லோகங்களைப் பார்ப்போம்.

வியாழன், செப்டம்பர் 29, 2011

அர்களம் - 2


அர்களம் - 2



முதல் பகுதியில் கூறியது போல் அர்களம் பாராயணம் செய்யும் முன் தேவியை அவள் திருநாமங்களால் துதிக்க வேண்டும்.

தேவிக்கு பல நாமங்கள். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவை [உதாரணத்திற்கு லலிதா ஸஹஸ்ர நாமம்]

ஆனால், பொதுவாக தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்பவர்கள் தேவீயை, அவள் யோகமாயை - 64 யோகிநி சித்திகளை அருள்பவள் -என்பதால்  அவளை கீழ் கண்ட 64 யோகிநி சித்த நாமங்களால் அஷ்டகமாகவே பாடித் துதிப்பர்.

ஓம் ஐம்,

திவ்யயோகி மஹாயோகி ஸித்தயோகி கணேச்வரி
ப்ரேதாஷீ டாகிநீ காளீ காலராத்ரி நிஷாசரி                ௧

ஐங்காரீ ஊர்த்வ்வேதாளீ பிசாசீ பூதடாமரீ
ஊர்த்வகேசீ விரூபாக்ஷீ சுஷ்காங்கீ நரபோஜிநீ             ௨

ராக்ஷஸீ கோரரக்தாக்ஷீ விஷ்வரூபீ பயங்கரீ
சாமுண்டீ வீரகௌமாரீ வாராஹீ முண்டதாரிணீ          ௩

ப்ராமரீ ருத்ரவேதாளீ பீஷ்மரீ த்ரிபுராந்தகீ
பைரவீ த்வம்ஸிநீ க்ரோதீ துர்முகீ ப்ரேதவாஹிநீ          ௪

கட்வாங்கீ தீர்கலம்போஷ்டீ மாலிநீ மந்த்ரயோகிநீ
கௌசிகீ மர்திநீ யக்ஷீ ரோமஜங்காப்ரஹாரிளீ             ௫

காலாக்நிக்ராமணீ சக்ரீ கங்காளீ புவநேச்வரீ
பட்காரீ வீரபத்ரேசீ தூம்ராக்ஷீ கலஹப்ரியா                ௬

கண்டகீ நாடகீ மாரீ யமதூதீ கராளிநீ
ஸஹஸ்ராக்ஷீ காமலோலா காகதம்ஷ்ட்ரீ அதோமுகீ      ௭

துர்ஜடீ விகடீ கோரீ கபாலீ விஷலங்கிநீ
சது:ஷஷ்டீ: ஸமாக்யாதா யோகின்யோ வரஸித்திதா:       ௮

நித்யம் ஸ்மரணமாத்ரேண ஸர்வ பாபக்ஷயோ பவேத்.

அத நாமாநி

இதில் முதல் ஸ்லோகத்திலிருந்து எட்டாம் ஸ்லோகத்தின் முதல் வரி வரை 64 யோகிநிகளின் பொயராக உள்ளன. எட்டாவது ஸ்லோக கடைசி வரியில் 64 யொகிநிகளூம் சிறந்த ஸித்திகளைக் கொடுக்கக் கூடியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடைசியாக பலச்ருதி - தினம் இவர்களை நினைத்த அளவிலேயே அனைத்து பாபங்களும் நீங்கும் - எனக் குறிப்பிட்டுள்ளது.

அன்னையை வணங்கி அவளின் யோகிநி நாமங்களைத் துதிப்போம்.

புதன், செப்டம்பர் 28, 2011

அர்களம் [अर्गलम्]


அர்களம் [अर्गलम्]

18 புராணங்களில் ஒன்றான மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருவது தேவீ மஹாத்ம்யம். இதை துர்கா சப்தசதீ, சப்தசதீ, சண்டிபாடம் என்ற பெயரிலும் கூறுவர். இந்த 13 அத்யாயங்களும் மூன்று பாகங்களாகக் கூறப்படும்.

இந்த தேவீ மஹாத்ம்யம் மார்கண்டேயர் பாகுரி என்ற மஹரிஷிக்கு சொன்னதாக்க் கூறுவர். சில புத்தகங்களில் (குறிப்பாக குப்தவதீ உரையில்) இது வேத வ்யாசரின் சிஷ்யரான ஜைமிநி முனிவருக்கு மார்கண்டேய மஹரிஷி உரைத்த்து என்றும் உள்ளது.

இதில் ஸுரதன் என்ற அரசனும் ஸமாதி என்ற வைச்யனும் முறையே தங்களால் பயனடைந்த தன் தேச மக்கள் மற்றும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களாலேயே அவர்களின் இடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு காட்டில் அலைந்து திரிந்து ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அறிமுகம் ஆகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சோகங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றிக் கொள்கின்றனர். அப்பொழுது, ஸுமேதஸ் அவர்கள் நிலைக்கு மஹாமாயை (அ) விஷ்ணுமாயா வால் உருவாக்கப் பட்ட ஒரு மாயை தான் என்றும் அதிலிருந்து மீள அந்த தேவியை  த்யானிப்பதுதான் என்று கூறி அத்தாயின் கதையை அவர்களுக்கு கூறினார். அது தான் தேவி மஹாத்ம்யம்.

இதன் முதல் பாகத்தில் மது, கைடப வதமும் (அத்யாயம் 1), இரண்டாம் பாகத்தில் மஹிஷாசுர வதமும் (அத்யாயம் 2-4), மூன்றாம் பாகம் சும்ப, நிசும்பர்களையும் அவர்களின் படையைச் சேர்ந்த தூம்ரலோசன், ரக்தபீஜன் அனைவரையும் வதமும் (அத்யாயம் 5-10) கொண்டது. அத்யாயம் 11-13 தேவியை தேவர்களும் மற்றவர்களும் துதிப்பதும் தேவி அனைவருக்கும் அருள்வதும் உள்ளது.

தேவீ மஹாத்ம்யத்தின் சிறப்பு என்னவென்றால் இது சாதாரணமாக கதையாக இருந்தாலும் மந்திர வடிவாகவும் கருதப் படுகிறது. எனவே, இதை மந்திர வடிவமாகப் பாராயணம் செய்வர்.  

இந்த தேவீ மஹாத்ம்யத்தை பாரயணம் செய்ய வெவ்வேறு புத்தகங்களில் பல்வேறு முறைகள் கூறப்பட்டுள்ளன. கேரளம், வங்காளம் ஆகிய இடங்களில் மற்றும் சாக்தர்கள் என்று கூறப்படும் (சக்தியை வடிபாடு செய்பவர்கள்) தந்திர வழிபாட்டு முறையில் தேவியை ஆவாஹனம் (சிலை அல்லது பிம்பங்களில் சக்தியை உருவேற்றம்) செய்து வழிபடுவர்.
மற்றவர்கள் சாதாரணமாக, தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்ய நவாங்க (9 அங்கம்) விதிகளைக் கடைபிடிப்பர்.

இவை தான் அந்த 9 விதிகள்

1.   ந்யாஸம் (அங்க சுத்தி என்றும் கூறலாம்)
2.   ஆவாஹநம் (தேவியை அழைத்தல்)
3.   நாமங்கள்
4.   அர்களம்
5.   கீலகம்
6.   ஹ்ருதயம்
7.   தளம்
8.   த்யாநம்
9.   கவசம்

இதன் பின் தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்வர். இதை நவராத்திரி சமயம் தினமும் பாராயணம் செய்வார்கள். விசேஷமாக அஷ்டமி அன்று செய்வது மிக நல்லது என்று கூறுவர்.

முழுவதுமாக தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்ய இயலாதவர்கள், இதில் அர்களம், கீலகம், கவசம் இவை மூன்றையுமாவது படித்தால் நற்பயன் கிட்டும் என்று கூறுவர்

அர்களம் என்றால் என்ன?

அர்களம் என்றால் தாழ்ப்பாள் என்று பொருள்; இங்கு குறிப்பால் அரண் என்ற பொருளைத் தரும்.

நாளை இந்த அர்களத்தின் த்யான ச்லோகங்களைப் பார்ப்போம்.