வெள்ளி, ஜூலை 29, 2011

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது போட்டி

முதல் டெஸ்ட் தோற்ற பின்பு இன்று Nottingam-இல் இரண்டாவது போட்டி நடை பெற உள்ளது.

முதல் போட்டியில் இந்தியா பொதுவாக எல்லாத் துறைகளிலும், குறிப்பாக மட்டையாட்டத்தில், கோட்டை விட்டது. இரண்டு முறையும் 300 ஓட்டங்கள் கூட எட்டாதது மட்டையாட்டத்தில் சொதப்பியதை தான் காட்டுகிறது. அதிலும், ஒரு துவக்க ஆட்ட வீரரைத் தவிர மற்ற அனைவரும் அனுபவம் உள்ளவர்கள்;  ஆடுகளமும் மோசமாக வில்லை; பந்து வீச்சும் - லக்‌ஷ்மண் கூறியது போல் - devastating இல்லை. 

பந்து வீச்சை பொறுத்தவரை முதல் இன்னிங்க்ஸில் இஷாந்த் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்பினார். விளையாட்டை ஓரளவு அனுமானிக்கும் ரசிகர்களுக்குக் கூட, இங்கிலாந்தில் பந்தை கூடுமான வரை நல்ல அல்லது முழு நீளத்தில் (good or full length) வீச வேண்டுமெனத் தெரியும். ஆனால் அவரோ, அளவு குறைவாகவே வீசினார். தொழில் முறை விளையாட்டு வீரரான அவருக்கோ, அணித்தலைவருக்கோ, பயிற்சியாளருக்கோ இது தெரியாதது ஆச்சரியம் தான். [மே.இ. அளவு குறைவான பந்துகள் தான் அவருக்கு wickets தந்தன என்பதால் அதையே இங்கு செய்வேன் என்றால் என்ன செய்ய முடியும்?)  இரண்டாம் இன்னிங்க்ஸில் அதை ஈடுகட்டினார், ஆனால், வெறும் இரண்டு பந்து வீச்சாளர்களைக் (ப்ரவீன், இஷாந்த்) கொண்டு எவ்வளவு தான் முடியும். 

 ஹர்பஜனை பொருத்தவரை அவரை 1-2 போட்டிகள் நீக்கினால் தான் சரியாகும். வேறு சுழல் பந்தாளர் சோபித்தால் அவருக்கும் ஒரு போட்டி இருக்கும். [கும்லேவுக்கும் இது நடந்தது. அப்போது ஹர்பஜன் இருந்ததால் அவருக்கு ஒரு போட்டி இருந்தது; அவர் தன் முழு திறமையைக் காட்ட வேண்டியிருந்தது].

இப்பொழுது, இரண்டாம் போட்டியைப் பொருத்தவரை என் அணி இதுதான்;

1. அபினவ் முகுந்த்
2. யுவராஜ் சிங் [கம்பீர் காயத்தால் ஆட மாட்டார் எனத் தகவல்]
3. த்ராவிட்
4. சச்சின்
5. லக்‌ஷ்மண்
6. ரெய்னா
7. தோனி
8. ப்ரவீன்
9. இஷாந்த்
10.ஸ்ரீசாந்த்
11. முனாஃப்

நான்கு வேகப் பந்தாளர்களும் யுவராஜ் & ரெய்னா மூலம் சுழல் பந்தும் செய்யலாம்.

வெள்ளி, ஜூலை 22, 2011

யாருக்கும் வெட்கமில்லை

சமிபத்தில் ஹர்பஜன் சிங் மெக் டொவல்ஸ் விளம்பரத்திற்காக விஜய் மல்லையாவின் UB குழுமத்திற்கும் தோனிக்கும் - இவ்விளம்பரத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் (குறிப்பாக தன் காலம் சென்ற தந்தையை) தன் சீக்கிய இனத்தையும் கேலி செய்துள்ளதாக குற்றம் சாட்டி - Legal Notice அனுப்பியுள்ளார்.

அந்த விளம்பரம் இதோ

முதலில் இந்த விளம்பரத்தில், சீக்கிய இனத்தை - நேரடியாகவோ மறை முகமாகவோ - எங்கும் தாக்கியதாகவே தெரியவில்லை.

இரண்டாவதாக சைமண்ட்ஸ் விவகாரத்தில், வர்ண வேறுபாட்டை கூறவில்லை (அதாவது அவரை "Monkey" என்று விளிக்கவில்லை; ஹிந்தியில் “மாக்கீ...” என்று தான் கூறினேன்) என ஒப்புதல் அளித்தார். அபொழுது வேறு நபரின் குடும்ப அங்கத்தினரை திட்டி புண்படுத்தியவர், தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் என்றவுடன் நேர் எதிர் நிலையை எடுத்திருக்கிறார்.
மேலும், இவரே வேறு ஒரு மதுபான தயாரிப்பு நிறுவன விளம்பரத்திலும் தோன்றுகிறார். அதில் நடிப்பதால் இவர் சார்ந்த ஒரு சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பது இவருக்கோ இவர் தாயாருக்கோ ஏன் தெரியவில்லை.

தோனி, தனக்கு அதில் பஜ்ஜி சம்மந்தப்பட்டுள்ளார் என தெரியாது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. Script தெரியாமல் நடித்திருந்தாலும் தவறுதான். நாளை வேறு ஒரு விளம்பரத்தில் இதை விட விவகாரமாக வேறு ஏதாவது - தீவிர வாத ஆதரவு போல் - இருந்தால் என்ன செய்வார். அதனால் இது தோனிக்கு தெரிந்து தான் இருக்கும்.

தோனி செய்ததும் கூட இருந்தே காலை வாரிவிடுவது போல் தான்  (குறிப்பாக பஜ்ஜியின் sensitive at same time senselessness-ஐ அறிந்து).

மேலும் இந்த விஷயத்தில் நீ அடிப்பது போல் அடி, அதாவது legal notice அனுப்பு அதன் மூலம் இந்த விளம்பரத்திற்கும் மேலும் விளம்பரம் கிடைக்கும் என்று மல்லையாவே பஜ்ஜியுடன் deal வைத்திருந்தாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை.

இந்த பின்புற வழி (backdoor) விளம்பரங்களை - வேறு பெயரால் மது, புகை விளம்பரங்களை தடை செய்ய அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், அவர்களே மது விற்பனை செய்வதுதான் நடக்கிறது.

இதில் யாரைக் குறை கூற முடியும்.


மொத்ததில் யாருக்கும் வெட்கமில்லை













திங்கள், ஜூலை 11, 2011

மேற்கு இந்தியா & இங்கிலாந்து தொடர்

நேற்று  மேற்கிந்திய அணியுடன் நடந்த தொடர் முடிந்தது. 

தொடரை வென்ற போதிலும், வெற்றி கணக்கு 1 - 0  என்ற அளவிலேயே இருந்தது பொதுவாகவே அணைவரையும் ஏமாற்றம் அடையவேச் செய்தது என்று கூறலாம். சற்று, லாவகத்துடன் பந்து வீசியிருந்தால், 2 - 0  என்ற கணக்கில் வென்றிருக்கலாம்.

சாதாரணமாக, மே.இ. அணியுடன் தொடரை வென்றாலே மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனால், இப்பொழுது, தகுதி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாலும், சமீபத்திய உலகக் கோப்பையும், பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியும் சற்று அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால், பந்து வீச்சில் ஜாகிர் இல்லாததும் பஜ்ஜீ சரியான ஃபார்மில் இல்லாததும், மட்டையில் புதிய வீரர்கள் சரிவர பரிமளிக்காததும் வெற்றிக் கணக்கை மட்டுப் படுத்தியுள்ளது என்றே நினைக்கிறேன்.

தொடரில் என்னைப் பொருத்தவரை ஜொலித்தவர்கள்:      
                   இஷாந்த், முனாஃப், ப்ரவீன், லக்‌ஷ்மண், த்ராவிட்
நிலைமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள்:
                  ரெய்னா, தோனி
சொதப்பியவர்கள் : 
                  விஜய், கோஹ்லி, பஜ்ஜி (பந்து வீச்சு;  பின்னே அது தானே அவர் வேலை)


இங்கிலாந்து தொடரைப் பொருத்தவரை பெரும்பாலான பெரிய தலைகள் அணிக்குள் திரும்புவதால் அணி சற்று வலுவடைந்திருப்பதாகவே தெரிகிறது. 5 நாள் போட்டியை பொருத்தவரை 4 வேக பந்தாளர்களூடன் களம் இறங்குவதே நல்லது என நினைக்கிறேன் (பஜ்ஜி வந்தால் lower order சற்று வலுப்படும் என்றாலும் கூட). தற்போதைய 3 வேகப் பந்தாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஜாகிரும் சேர்ந்தால் நல்ல attack கிடைக்கும். மட்டையை பொருத்தவரை, கம்பீர், ஷேவாக்/முகுந்த், மும்மூர்திகள், தோனியுடன், யுவராஜ்-க்கும் வாய்ப்பு கொடுக்கலாம். யுவராஜ் பொதுவாக இங்கிலாந்துடன் நன்றாக விளையாடுபவர் - பாகிஸ்தானில் அகீப் ஜாவெத் போன்றவர்கள் இந்தியாவிடம் நன்றாக விளையாடுவது போல் - , தற்போது நல்ல ஃபார்மிலும் இருந்தார்என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு போட்டியில் சொதப்பினால் ரெய்னா மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


இங்கிலாந்தும் - அவர்கள் வீட்டிலாவது அதிலும் 5 நாள் போட்டிகளில் - சற்று வலுவான அணிதான். 


பார்ப்போம்.









வெள்ளி, ஜூலை 08, 2011

நாள் கணக்கு

வலைப்பதிவு செய்ய Blogger கணக்கு துவங்கும் போது வலை பதிவை எவ்வாறு பகுக்க வேண்டும் என ஒரு தெரிவு குறிப்பிடுகிறது – நாட் கணக்கிலா, வாரக் கணக்கிலா அல்லது வருடக் கணக்கிலா என.

நாள் என்பது என்ன? அந்த கணக்கைப் பார்ப்போமா!!!

மனிதர்களுக்கு ஒர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.  அதாவது,
365 (மனித ஆண்டு)   =       1 தேவ வருடம்

சதுர்  யுகங்கள்      
        கிருத யுகம்   4800 தேவ வருடம்
        த்ரேதா யுகம் 3600 தேவ வருடம்
        த்வாபர யுகம் 2400 தேவ வருடம்
        கலி யுகம்     1200 தேவ வருடம்    மொத்தம் 12000 தேவ வருடங்கள்
                         அதாவது 12000 X  365 = 4380000 (மனித) ஆண்டுகள்

1 மன்வந்தரம் =      71 சதுர் யுகங்கள்                    
              =       852000 தேவ வருடங்கள்      (71 X 12000)
              =       310980000 (மனித) ஆண்டுகள் (71 X 12000  X 365)

1 கல்பம்      =       14 மன்வந்தரம்
              =       994 சதுர் யுகங்கள் *           (14 X 71)
              =       11928000 தேவ ஆண்டுகள்      (14 X 71 X 12000)
              =       4353720000 (மனித) ஆண்டுகள் (14 X 71 X 12000 X 365)
[* சில இடங்களில் 1000 சதுர் யுகங்கள் கொண்ட்து ஒரு கல்பம் என்றும் குறிக்கப் பட்டுள்ளது.]

ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு ஒரு  நாள்.

1 ப்ரம்ம வருடம்  =       365 கல்பம்
                 =       5110 மன்வந்தரம்                  (365 X 14)
                 =       364810 சதுர் யுகம்                (365 X 14 X 71)
                 =       4353620000 தேவ வருடம்        (365 X 14 X 71 X12000)
                 =       1586107800000 மனித ஆண்டுகள் (365 X 14 X 71 X 12000 X 365)

1 ப்ரம்ம யுகம்    =       8000 ப்ரம்ம வருடங்கள்
                 =       2920000 கல்பம்              (8000 X 365
                 =       40880000 மன்வந்தரம்        (8000 X 365 X 14)
                 =       2918480000 சதுர் யுகம்       (8000 X 365 X 14 X 71)
                 =       327040000000 தேவ வருடம்  (8000 X365 X14 X71 X12000)
                 =       23347840000000 ம.ஆண்டுகள் (8000 X365 X14 X71 X12000 X365)

1 சாவனம்       =       1000 ப்ரம்ம யுகம்
                =       8000000 ப்ரம்ம வருடங்கள்     (1000 X 8000)
                =       2920000000 கல்பம்            (1000X8000X365)
                =       40880000000 மன்வந்தரம்      (1000 X 8000 X 365 X 14)
                =       2918480000000 சதுர் யுகம்     (1000 X 8000 X 365 X 14 X 71)
                =       327040000000000 தே.வரு     (1000X8000X365X14X71X12000)
                =       23347840000000000 ம.ஆ.    (1000X8000X365X14X71X12000X365)

ப்ரம்மாவின் ஆயுள்     =       3003 சாவனம்
                                              =       3003000 ப்ரம்ம யுகம்
                                             =        240240000000 ப்ரம்ம வருடங்கள்  (3003 X 1000 X 8000)
                                             =        8768760000000 கல்பம்                        (3003X1000X8000X365)
                                             =        122762640000000 மன்வந்தரம்      (3000X1000X8000X365X14)
                                             =        8764195440000000 சதுர் யுகம்        (3003X1000X8000X365X14X71)
                                             =        982101120000000000 தே.வரு     (3003X1000X8000X365X14X71X12000)
                                             =       70113563520000000000 .. (3003X1000X8000X365X14X71X12000X365)
                                                                (கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்)

ப்ரம்மாவின் ஆயுள்  என்பது    மஹா விஷ்ணு விற்கு ஒரு நாள்.



.



திங்கள், ஜூலை 04, 2011

முதல் கணக்கு

வணக்கம் நண்பர்களே!!

நான் சற்றேரக்குறைய 10 வருடங்களாக வலைப்பூக்களை படித்தும் சுவைத்தும் வருகிறேன். ஆனாலும், எனக்கென ஒரு வலைப் பக்கம் துவங்க எப்பொழுதுமே, ஒரு தயக்கம்.

காரணம், ”எதைப் பற்றி எழுதுவது? நான் அறிந்த்து என்ன? அப்படி பகிர்வதரற்க்கு என்னிடம் என்ன உள்ளது?” என என்னை நானே கேட்டு தவிர்த்து வந்தேன். நான் அறிந்ததோ கைமண் அளவுதான்!!

இருப்பினும், நாமும் ஒரு வலைப் பக்கம் துவங்கிதான் பார்க்கலாமே! தெரிந்ததை எழுதுவோம், படிப்பவர்களுக்கு தானே பிரச்சனை!!! முடியவில்லை என்றால் கடையை மூடிவிடலாம்!!!

இனிமேல் நானும் பதிவர்தான்! பதிவர்தான்!! பதிவர்தான்!!!