திங்கள், ஜூலை 04, 2011

முதல் கணக்கு

வணக்கம் நண்பர்களே!!

நான் சற்றேரக்குறைய 10 வருடங்களாக வலைப்பூக்களை படித்தும் சுவைத்தும் வருகிறேன். ஆனாலும், எனக்கென ஒரு வலைப் பக்கம் துவங்க எப்பொழுதுமே, ஒரு தயக்கம்.

காரணம், ”எதைப் பற்றி எழுதுவது? நான் அறிந்த்து என்ன? அப்படி பகிர்வதரற்க்கு என்னிடம் என்ன உள்ளது?” என என்னை நானே கேட்டு தவிர்த்து வந்தேன். நான் அறிந்ததோ கைமண் அளவுதான்!!

இருப்பினும், நாமும் ஒரு வலைப் பக்கம் துவங்கிதான் பார்க்கலாமே! தெரிந்ததை எழுதுவோம், படிப்பவர்களுக்கு தானே பிரச்சனை!!! முடியவில்லை என்றால் கடையை மூடிவிடலாம்!!!

இனிமேல் நானும் பதிவர்தான்! பதிவர்தான்!! பதிவர்தான்!!!

5 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. தங்களை வலைப்பூவின் உலகிற்கு இனிதே வரவேற்கிறேன்......உங்களின் பணி செம்மையாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. சீனு.... நீ எப்படா வலைப்பூ ஆரம்பித்தாய், சொல்லவே இல்ல... :)) நல்லது நீயும் களத்தில் இறங்கிவிட்டாய்....

  ஃபாலோயர்ஸ் கேட்ஜட் சேர்த்துடு... அப்பதான் நிறைய பேர் படிக்க முடியும். சரியா...

  ஒன்றொன்றாய் படிக்கிறேன்...

  Welcome to the Blog World... Have a blast.... :)))

  பதிலளிநீக்கு
 4. நன்றி வெங்கட்,

  Follower Gadget கொஞ்சம் படுத்துகிறது. Code எத்தனை முறை ஒட்டினாலும் சரியாக வரமாட்டேன் என்கிறது. ஓருவேளை நான் epic பயன்படுத்துவதாலா எனத் தெரியவில்லை.

  முயர்ச்சிகிறேன். முடியவில்லை என்றால் உன்னிடம் தான் கேட்பேன்.

  பதிலளிநீக்கு