ஜெயா தொலைக்காட்சியில்
கடந்த இரண்டு நாட்களாக அனைவரையும் கவர்ந்த ஓர் அறிவிப்பு வெளியானது. அது ராஜா, அவருடைய
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்குப் பிடித்த10 பாடல்களை பாட உள்ளதாக வெளியிட்ட
அறிவிப்பே.
ராஜா இசையமைத்த பாடல்களோஆயிரக்கணக்கில்.
அதில் நாங்களெல்லாம் வித்யாசமான combination-களை வைத்து,
- ராஜா-SPB-solo;
- ராஜா-SPB-duet (ஜானகியுடன், சித்ராவுடன், மற்றவர்களுடன் என்று sub-category வேறு உண்டு);
- ராஜா; தாஸ்-solo;
- ராஜா-தாஸ்-duet;
- ராஜா-வைரமுத்து;
- ராஜா-ஜானகி(duets);
- ராஜா – சித்ரா
- ராஜா - வாசு
- ராஜா (solo); தவிர
- ராஜாவின் கர்நாடக சங்கீத பாடல்கள்; மேற்கத்திய இசைபாடல்கள்
- ராஜாவின் ஜதி வரிசை பாடல்கள்;
- ராஜாவின் குழலிசை பாடல்கள்; கிடார் பாடல்கள்; இன்னும் பல
அதில் பத்து பாடல்களைத்
தேர்வு செய்வதிலேயே கஷ்டப் படுவோம். இதில், மொத்தமே பத்து பாடல்கள் தான் தேர்ந்தெடுக்க
வேண்டும் என்று சொன்னால் அது எப்படி முடியும்.
ராஜா
இது ஞாயமா?
ராஜா ஒரு சங்கீத சாகரம்,
அதில் 10 மட்டும் கமண்டலத்தில் பிடிக்க நாங்கள் என்ன அகத்திய முனிவரா? இது சற்றும்
ஞாயமில்லை.
இருந்தாலும் ஆசை யாரை
விட்டது. இது என் தேர்வு –
- இதயம் ஒரு கோவில் - இது என் all-time favorite; எழுதியதும் ராஜா தான் என்று நினைக்கிறேன். அதிலும் ராஜாவே பாடும் track version – பாலு கலக்கிதான் இருப்பார்; ஆனாலும் ராஜா பாட்டோடு ஒன்றியிருப்பார்; அதுதான் என் தேர்வு. Incidentally, இந்த நிகழ்ச்சி அறிவிப்பின் bgm-ம் இதுதான். (உடனேயே என் மனைவி உங்கள் பாட்டே வந்து விட்டது என்று கூறினார்).
- நான் தேடும் செவ்வந்தி பூவிது – ராஜா, ஜானகி combination ஒரு பாடல் கூட சோடை போனதில்லை; அதில் இது முதல்.
- சிறிய பறவை சிறகை விரிக்க – மூன்று காதலர்கள் ரோமியோ, மஜ்னு, அம்பிகாபதி; மூவருக்கும் மூன்று சரணங்கள்; அதற்கேற்ப இசை வித்யாசம் – இது என் all-time favorite.
- ஒரு குங்கும செங்கமலம் – எனக்கு மிகவும் பிடித்த பாடல்; No more explanation.
- ராசாவே உன்ன எண்ணி இந்த ரோசாபூ – ராஜா-வைரமுத்து எனக்குப் பிடித்த combination. பிரிவதற்குச் சற்று முன்னர் எழுதிய பாடல் என்பதால் ஒரு நெருக்கம்.
- பொன்வானம் தண்ணீர் தூவுது – குரலா இசையா எது பெஸ்ட் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
- விழியிலே மணி விழியில் மௌன மொழி – ஜொதெகளு போல இல்லை என்றாலும் 30 வருடம் கழித்தும் ஹிட்டடிக்கும் tune.
- தென்றல் வந்து தீண்டும் போது – musical rainbow
- சங்கத்தில் பாடாத கவிதை – இதுவும் வேறு மொழியில் (original மலையாளம்) இருந்து தமிழுக்கு இறக்குமதிதான்.
- அழகான பூக்கள் (படம்: அன்பே ஓடிவா!!!) – இளையராஜா என்றால் என்னவோ ராகதேவன், நிறைய இசை சாதனங்களை வைத்து பெரிய ஜாம்பவான்கள் ரசிக்க தரும் மேட்டுக்குடி இசையமைப்பாளர் அல்ல; அவரால் குறைந்த இசைக்கருவிகளூடன் உயர்ந்த தரமான பாடல்களை சாதாரண ரசிகர்களுக்கும் நிறைவு தரும் பாடல்கள் தருபவர் என்பது பல பாடல்களில் நமக்குத் தெரியும். அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
