வெள்ளி, செப்டம்பர் 30, 2011

அர்களம் - 3 [த்யான ச்லோகம்]

முதல் பகுதியில் தேவி மஹாத்ம்யம் பற்றியும் இரண்டாம் பகுதியில் தேவியின் 64 யோகினி நாமங்களையும் பார்த்தோம். இன்று அர்களத்தின் த்யான ச்லோகங்களைப் பார்ப்போம்



அதார்களம்

       அஸ்ய ஸ்ரீ அர்கள ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
       ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரிஷி:
       அனுஷ்டுப் சந்த:
       ஸ்ரீ மஹாலக்ஷ்மீ சண்டிகா தேவதா
      
       அம் பீஜம் கம் ஷக்தி: லம் கீலகம்
       ஸ்ரீ மஹா லக்ஷ்மீ சண்டிகா ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:

அம் கம் லம் இத்யாதி மி: ஷடாங்க ந்யாஸ:
[ஆறு அங்க ந்யாஸங்களை தகுந்த குருவிடமிருந்து கற்கவும், இவை சாதாரணமாக அணைத்து பூஜைகளிலும் – கணபதி பூஜை, வரலக்ஷ்மி விரத பூஜை போன்றவற்றிலும் -  கடைபிடிக்கப்படுபவை.]

த்யானம்

ப்ரகாஷ மத்ய ஸ்தித சித்ஸ்வரூபாம்
       வராப்யே ஸந்தததீம் த்ரி நேத்ராம்
சிந்தூர வர்ணாங்கித கோமலாங்கீம்
       மாயாமயம் தத்வமயீம் நமாமி

[ஒளியின் நடுவே விளங்கும் சித்த வடிவானவளும், வர-அபய முத்திரைகளைத் தரித்தவளும், மூன்று கண்களை உடயவளும் சிவந்த திருமேனியைக் கொண்ட அழகியும் மாயா வடிவமும் தத்துவ வடிவமும் கொண்ட (அன்னைக்கு) வணக்கம்]

அர்களம் கீலகம் சாதோ படித்வா கவசம் படேத்
ஜபேத் ஸப்தசதீம் பஷ்சவாத் ரும் ஏஷ சிவோதித:   (1) (௧)

[அர்களம் மற்றும் கீலகத்தை முதலிலும் அதன்பின் கவசத்தையும் படித்து, பின்பு ஸப்தசதியை ஜபம் செய்ய வேண்டும் என்பது சிவன் கூற்று]

அர்களம் துரிதம் ஹன்தி கீலகம் பலதம் ததா
கவசம் ரக்ஷதே நித்யம் சண்டிகா த்ரிதயம் படேத்   (2) (௨)

[அர்களம் பாபத்தை அழிக்கும்; கீலகம் வேண்டிய பலன் தரும்; கவசம் காப்பாற்றும். எப்போதும் சண்டியின் மூன்று சரிதத்தையும் படிக்க வேண்டும்]

அர்களம் ஹ்ருதயே யஸ்ய ததான் அர்களவானஸோ
பவிஷ்ய தீதி நிஷ்சித்ய சிவேன ரசிதம் புரா         (3) (௩)

[எவர் ஹ்ருதயத்தில் அர்களம் இருக்கிறதோ அவனுக்கு தடையேதும் இருக்காது என்பது சிவனால் உறுதி செய்யப் பட்டுள்ளது.]

கீலகம் ஹ்ருதயே யஸ்ய ஸ கீலிதமனோரத:
பவிஷ்யதி ந ஸந்தேஹோ நானயதா சிவபாஷிதம் (4) (௪)

[கீலகம் ஹ்ருதயதில் உறைபவனின் விருப்பங்கள் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை என்ப்து சிவன் வாக்கு]

கவசம் ஹ்ருதயே யஸ்ய ஸர்வத்ர கவசீ கலு
ப்ரஹ்மணா நிர்மிதம் பூர்வமிதி நிஷ்ச சேதஸா   (5) (௫)

[எவர் ஹ்ருதயத்தில் கவசம் இருக்கிறதோ அவன் என்றும் கவசம் அணிந்தவன் போலிருப்பான் என்பது ப்ரஹ்மாவால் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை மனதில் நிறுத்தவும்]

யா தேவி ஸ்தூயதே நித்யம் விபுத்தை வேத பாரகை:
ஸா மே வஸ்து ஜிஹ்வாக்ரே ப்ரஹ்ம ரூபா ஸரஸ்வதீ (6) (௬)

[எந்த தேவி வேதங்களின் கரைகண்டவளெனத் துதிக்கபடுகிறாளோ, அந்த ப்ரஹ்ம வடிவான ஸரஸ்வதி என் நாக்கு நுனியில் (வாக்கில்) வசிக்கட்டும்]

ஜய த்வம் தேவி சாமுண்டே ஜய பூதாபஹாரிணி
ஜய ஸர்வகதே தேவி காலராத்ரி நமோஸ்துதே     (7) (௭)

[சாமுண்டீ தேவியே, (ஊழிகாலத்தில்) ப்ராணிகளை அபகரிப்பவளே, எங்கும் நிரைந்தவளே, காலராத்ரி வடிவம் கொண்டவளே உனக்கு வெற்றி கூறி வணங்குகிறோம்]

மார்கண்டேய:
ஏகாபி த்ரிவிதா (ஆ)க்யாதா ஸப்ததா ஸைவ கீர்த்தின்தா
தஸ்யா பேதா:ச (அ)னன்தாஷ்ச தன்மஹாத்ம்யம் சிவோதயம் (8) (௮)

[மார்கண்டேயர் (கூறிய்து): தேவி, ஒருத்தியாக இருந்தும் மூன்று விதமாகவும் (மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாஸரஸ்வதி), ஏழுவிதமாகவும் (ஸப்த மாத்ருகா வடிவங்களான ப்ரஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, நரஸிம்ஹி (சில புத்தகங்களில் இது கணேச்வரி என்று உள்ளது), ஐந்திரி) கூறப்பட்டுள்ள இத் தேவியின் பேதங்கள் (உருவங்கள்) முடிவற்றவை அவளுடைய மஹாத்ம்யங்கள் (பெருமைகள்) பரமேச்வரனிடம் இருந்து உண்டானவை]

நாளை அர்கள ச்லோகங்களைப் பார்ப்போம்.

வியாழன், செப்டம்பர் 29, 2011

அர்களம் - 2


அர்களம் - 2



முதல் பகுதியில் கூறியது போல் அர்களம் பாராயணம் செய்யும் முன் தேவியை அவள் திருநாமங்களால் துதிக்க வேண்டும்.

தேவிக்கு பல நாமங்கள். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவை [உதாரணத்திற்கு லலிதா ஸஹஸ்ர நாமம்]

ஆனால், பொதுவாக தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்பவர்கள் தேவீயை, அவள் யோகமாயை - 64 யோகிநி சித்திகளை அருள்பவள் -என்பதால்  அவளை கீழ் கண்ட 64 யோகிநி சித்த நாமங்களால் அஷ்டகமாகவே பாடித் துதிப்பர்.

ஓம் ஐம்,

திவ்யயோகி மஹாயோகி ஸித்தயோகி கணேச்வரி
ப்ரேதாஷீ டாகிநீ காளீ காலராத்ரி நிஷாசரி                ௧

ஐங்காரீ ஊர்த்வ்வேதாளீ பிசாசீ பூதடாமரீ
ஊர்த்வகேசீ விரூபாக்ஷீ சுஷ்காங்கீ நரபோஜிநீ             ௨

ராக்ஷஸீ கோரரக்தாக்ஷீ விஷ்வரூபீ பயங்கரீ
சாமுண்டீ வீரகௌமாரீ வாராஹீ முண்டதாரிணீ          ௩

ப்ராமரீ ருத்ரவேதாளீ பீஷ்மரீ த்ரிபுராந்தகீ
பைரவீ த்வம்ஸிநீ க்ரோதீ துர்முகீ ப்ரேதவாஹிநீ          ௪

கட்வாங்கீ தீர்கலம்போஷ்டீ மாலிநீ மந்த்ரயோகிநீ
கௌசிகீ மர்திநீ யக்ஷீ ரோமஜங்காப்ரஹாரிளீ             ௫

காலாக்நிக்ராமணீ சக்ரீ கங்காளீ புவநேச்வரீ
பட்காரீ வீரபத்ரேசீ தூம்ராக்ஷீ கலஹப்ரியா                ௬

கண்டகீ நாடகீ மாரீ யமதூதீ கராளிநீ
ஸஹஸ்ராக்ஷீ காமலோலா காகதம்ஷ்ட்ரீ அதோமுகீ      ௭

துர்ஜடீ விகடீ கோரீ கபாலீ விஷலங்கிநீ
சது:ஷஷ்டீ: ஸமாக்யாதா யோகின்யோ வரஸித்திதா:       ௮

நித்யம் ஸ்மரணமாத்ரேண ஸர்வ பாபக்ஷயோ பவேத்.

அத நாமாநி

இதில் முதல் ஸ்லோகத்திலிருந்து எட்டாம் ஸ்லோகத்தின் முதல் வரி வரை 64 யோகிநிகளின் பொயராக உள்ளன. எட்டாவது ஸ்லோக கடைசி வரியில் 64 யொகிநிகளூம் சிறந்த ஸித்திகளைக் கொடுக்கக் கூடியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடைசியாக பலச்ருதி - தினம் இவர்களை நினைத்த அளவிலேயே அனைத்து பாபங்களும் நீங்கும் - எனக் குறிப்பிட்டுள்ளது.

அன்னையை வணங்கி அவளின் யோகிநி நாமங்களைத் துதிப்போம்.

புதன், செப்டம்பர் 28, 2011

அர்களம் [अर्गलम्]


அர்களம் [अर्गलम्]

18 புராணங்களில் ஒன்றான மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருவது தேவீ மஹாத்ம்யம். இதை துர்கா சப்தசதீ, சப்தசதீ, சண்டிபாடம் என்ற பெயரிலும் கூறுவர். இந்த 13 அத்யாயங்களும் மூன்று பாகங்களாகக் கூறப்படும்.

இந்த தேவீ மஹாத்ம்யம் மார்கண்டேயர் பாகுரி என்ற மஹரிஷிக்கு சொன்னதாக்க் கூறுவர். சில புத்தகங்களில் (குறிப்பாக குப்தவதீ உரையில்) இது வேத வ்யாசரின் சிஷ்யரான ஜைமிநி முனிவருக்கு மார்கண்டேய மஹரிஷி உரைத்த்து என்றும் உள்ளது.

இதில் ஸுரதன் என்ற அரசனும் ஸமாதி என்ற வைச்யனும் முறையே தங்களால் பயனடைந்த தன் தேச மக்கள் மற்றும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களாலேயே அவர்களின் இடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு காட்டில் அலைந்து திரிந்து ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அறிமுகம் ஆகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சோகங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றிக் கொள்கின்றனர். அப்பொழுது, ஸுமேதஸ் அவர்கள் நிலைக்கு மஹாமாயை (அ) விஷ்ணுமாயா வால் உருவாக்கப் பட்ட ஒரு மாயை தான் என்றும் அதிலிருந்து மீள அந்த தேவியை  த்யானிப்பதுதான் என்று கூறி அத்தாயின் கதையை அவர்களுக்கு கூறினார். அது தான் தேவி மஹாத்ம்யம்.

இதன் முதல் பாகத்தில் மது, கைடப வதமும் (அத்யாயம் 1), இரண்டாம் பாகத்தில் மஹிஷாசுர வதமும் (அத்யாயம் 2-4), மூன்றாம் பாகம் சும்ப, நிசும்பர்களையும் அவர்களின் படையைச் சேர்ந்த தூம்ரலோசன், ரக்தபீஜன் அனைவரையும் வதமும் (அத்யாயம் 5-10) கொண்டது. அத்யாயம் 11-13 தேவியை தேவர்களும் மற்றவர்களும் துதிப்பதும் தேவி அனைவருக்கும் அருள்வதும் உள்ளது.

தேவீ மஹாத்ம்யத்தின் சிறப்பு என்னவென்றால் இது சாதாரணமாக கதையாக இருந்தாலும் மந்திர வடிவாகவும் கருதப் படுகிறது. எனவே, இதை மந்திர வடிவமாகப் பாராயணம் செய்வர்.  

இந்த தேவீ மஹாத்ம்யத்தை பாரயணம் செய்ய வெவ்வேறு புத்தகங்களில் பல்வேறு முறைகள் கூறப்பட்டுள்ளன. கேரளம், வங்காளம் ஆகிய இடங்களில் மற்றும் சாக்தர்கள் என்று கூறப்படும் (சக்தியை வடிபாடு செய்பவர்கள்) தந்திர வழிபாட்டு முறையில் தேவியை ஆவாஹனம் (சிலை அல்லது பிம்பங்களில் சக்தியை உருவேற்றம்) செய்து வழிபடுவர்.
மற்றவர்கள் சாதாரணமாக, தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்ய நவாங்க (9 அங்கம்) விதிகளைக் கடைபிடிப்பர்.

இவை தான் அந்த 9 விதிகள்

1.   ந்யாஸம் (அங்க சுத்தி என்றும் கூறலாம்)
2.   ஆவாஹநம் (தேவியை அழைத்தல்)
3.   நாமங்கள்
4.   அர்களம்
5.   கீலகம்
6.   ஹ்ருதயம்
7.   தளம்
8.   த்யாநம்
9.   கவசம்

இதன் பின் தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்வர். இதை நவராத்திரி சமயம் தினமும் பாராயணம் செய்வார்கள். விசேஷமாக அஷ்டமி அன்று செய்வது மிக நல்லது என்று கூறுவர்.

முழுவதுமாக தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்ய இயலாதவர்கள், இதில் அர்களம், கீலகம், கவசம் இவை மூன்றையுமாவது படித்தால் நற்பயன் கிட்டும் என்று கூறுவர்

அர்களம் என்றால் என்ன?

அர்களம் என்றால் தாழ்ப்பாள் என்று பொருள்; இங்கு குறிப்பால் அரண் என்ற பொருளைத் தரும்.

நாளை இந்த அர்களத்தின் த்யான ச்லோகங்களைப் பார்ப்போம்.

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

மஹாலய பட்சம்


மஹாலய பட்சம்

இன்று மஹாலய அமாவஸ்யை. சென்ற பௌர்ணமி துவங்கி இன்று வரை மஹாலய பக்ஷம்.

பொதுவாக, சௌர மாதம், சந்திர மாதம் என்று மாதங்களில் இரண்டு வகை உண்டு.

சௌர மாதம் என்பது சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியன் 12 ராசிகளில் பிரவேசிப்பதை சங்கராந்தி என்று கூறுவர். அணைவரும் அறிந்த மகர சங்கராந்தி என்பது சூரியன் மகர ராசியில் நுழைவதைக் குறிக்கும். தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநில மக்கள் இந்த சூரிய மாதத்தையே பின்பற்றுகின்றனர். அதிலும் கேரளத்தில் இவை எந்த ராசியில் சூரியன் இருக்கிறாதோ அந்த பெயரிலேயே அழைக்கபடும். தமிழ்நாட்டில் அந்த மாத பௌர்ணமியில் இருக்கும் நட்சத்திரத்தின் (பௌர்ணமி அன்றோ அல்லது அதை ஒட்டியோ அந்த நட்சத்திரம் இருக்கும்) பெயரால் அழைக்கப் படும்.   

சந்திர மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. இதிலும் இரண்டு வகை உண்டு. முதலாவது, அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி அமாவாசையில் முடிவது. இதிலும், மாதப் பெயர் பொதுவாக பௌர்ணமி அன்று உள்ள நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப் படும். ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இந்த முறை தான்.

மற்றொரு முறை, பௌர்ணமி மறுதினம் துவங்கி பௌர்ணமியில் முடிவது. பொதுவாக, பௌர்ணமியை பூர்ண மாஸ்ய” (அதாவது மாதம் பூர்த்தி அடைவு) என்றே கூறுவர். வட இந்தியாவில் இந்த முறைதான். மாதங்களின் பெயரும் அன்றைய நட்சத்திர பெயர்தான்.

இதில் இருக்கும் ஒரே ஒரு சிக்கல், பூமி சூரியனைச் சுற்ற 365 ¼  நாள் எடுத்துக் கொள்ளும். அதனால், சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடம் 365 () 366 நாட்களாக இருக்கும். ஆனால், சந்திர மாதங்கள் 360 நாட்களுடன் இருக்கும். இந்த மீதமுள்ள 5/6 நாட்களை சேர்த்து 5 வருடங்களுக்கு ஒரு முறை 13 மாதங்கள் கொண்ட வருடமாக கணக்கிடுவர். அந்த அதிக மாதத்திற்கு பெயரும் கிடையாது. அந்த மாதத்தில் பொதுவாக, திருமணம் போன்ற நல்ல செயல்கள் செய்ய மாட்டார்கள்.

பொதுவாக, நாம் கொண்டாடும் பண்டிகைகள் இந்த சந்திர மாத அடிப்படையிலானவை தான். இதை நாம், கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளில் அவதானிக்கலாம்.

மஹாலய பக்ஷம் பாத்ரபாத மாதம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து அமாவாசை வரை 15 நாட்களுக்கு நடக்கும். அது இன்றைய அமாவாசையுடன் நிறைவு பெறுகிறது.

பொதுவாக இந்த 15 நாட்களும் நீத்தார் கடன் செய்வார்கள்.

இதற்குப் பின் ஒரு கதை உள்ளது.

கர்ணன், உயிர் நீத்தப் பின் சொர்கலோகம் சென்றான். அங்கு அவனுக்கு அவன் செய்த புண்ணியத்தின் பலனாக எல்லா பொருட்களும் (பொன், பொருள் எல்லாம்) கிடைத்தன. ஆனால், உணவு மட்டும் கிட்டவில்லை. அது ஏன் எனக்கேட்ட பொழுது அவன் எல்லா தானங்களும் செய்ததாகவும் ஆனால் அன்னதானம் மட்டும் செய்யவில்லை அதனால் தான் அன்னம் அவனுக்கு கிட்டவில்லை என்ற பதில் கிடைத்தது. உடனே அவன் எமனிடம் வேண்டி 15 நாட்கள் பூலோகம் வந்து அந்த 15 நாட்களும் எளியவர்களுக்கு அன்ன தானம் செய்தான். அந்த 15 நாட்களே மஹாலய பக்ஷம் என்று கூறுவர்.

ஆனால் இது எப்படி நீத்தார் கடனாக மாறியது என்பது தெரியவில்லை.