வெள்ளி, செப்டம்பர் 30, 2011

அர்களம் - 3 [த்யான ச்லோகம்]

முதல் பகுதியில் தேவி மஹாத்ம்யம் பற்றியும் இரண்டாம் பகுதியில் தேவியின் 64 யோகினி நாமங்களையும் பார்த்தோம். இன்று அர்களத்தின் த்யான ச்லோகங்களைப் பார்ப்போம்அதார்களம்

       அஸ்ய ஸ்ரீ அர்கள ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
       ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரிஷி:
       அனுஷ்டுப் சந்த:
       ஸ்ரீ மஹாலக்ஷ்மீ சண்டிகா தேவதா
      
       அம் பீஜம் கம் ஷக்தி: லம் கீலகம்
       ஸ்ரீ மஹா லக்ஷ்மீ சண்டிகா ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:

அம் கம் லம் இத்யாதி மி: ஷடாங்க ந்யாஸ:
[ஆறு அங்க ந்யாஸங்களை தகுந்த குருவிடமிருந்து கற்கவும், இவை சாதாரணமாக அணைத்து பூஜைகளிலும் – கணபதி பூஜை, வரலக்ஷ்மி விரத பூஜை போன்றவற்றிலும் -  கடைபிடிக்கப்படுபவை.]

த்யானம்

ப்ரகாஷ மத்ய ஸ்தித சித்ஸ்வரூபாம்
       வராப்யே ஸந்தததீம் த்ரி நேத்ராம்
சிந்தூர வர்ணாங்கித கோமலாங்கீம்
       மாயாமயம் தத்வமயீம் நமாமி

[ஒளியின் நடுவே விளங்கும் சித்த வடிவானவளும், வர-அபய முத்திரைகளைத் தரித்தவளும், மூன்று கண்களை உடயவளும் சிவந்த திருமேனியைக் கொண்ட அழகியும் மாயா வடிவமும் தத்துவ வடிவமும் கொண்ட (அன்னைக்கு) வணக்கம்]

அர்களம் கீலகம் சாதோ படித்வா கவசம் படேத்
ஜபேத் ஸப்தசதீம் பஷ்சவாத் ரும் ஏஷ சிவோதித:   (1) (௧)

[அர்களம் மற்றும் கீலகத்தை முதலிலும் அதன்பின் கவசத்தையும் படித்து, பின்பு ஸப்தசதியை ஜபம் செய்ய வேண்டும் என்பது சிவன் கூற்று]

அர்களம் துரிதம் ஹன்தி கீலகம் பலதம் ததா
கவசம் ரக்ஷதே நித்யம் சண்டிகா த்ரிதயம் படேத்   (2) (௨)

[அர்களம் பாபத்தை அழிக்கும்; கீலகம் வேண்டிய பலன் தரும்; கவசம் காப்பாற்றும். எப்போதும் சண்டியின் மூன்று சரிதத்தையும் படிக்க வேண்டும்]

அர்களம் ஹ்ருதயே யஸ்ய ததான் அர்களவானஸோ
பவிஷ்ய தீதி நிஷ்சித்ய சிவேன ரசிதம் புரா         (3) (௩)

[எவர் ஹ்ருதயத்தில் அர்களம் இருக்கிறதோ அவனுக்கு தடையேதும் இருக்காது என்பது சிவனால் உறுதி செய்யப் பட்டுள்ளது.]

கீலகம் ஹ்ருதயே யஸ்ய ஸ கீலிதமனோரத:
பவிஷ்யதி ந ஸந்தேஹோ நானயதா சிவபாஷிதம் (4) (௪)

[கீலகம் ஹ்ருதயதில் உறைபவனின் விருப்பங்கள் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை என்ப்து சிவன் வாக்கு]

கவசம் ஹ்ருதயே யஸ்ய ஸர்வத்ர கவசீ கலு
ப்ரஹ்மணா நிர்மிதம் பூர்வமிதி நிஷ்ச சேதஸா   (5) (௫)

[எவர் ஹ்ருதயத்தில் கவசம் இருக்கிறதோ அவன் என்றும் கவசம் அணிந்தவன் போலிருப்பான் என்பது ப்ரஹ்மாவால் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை மனதில் நிறுத்தவும்]

யா தேவி ஸ்தூயதே நித்யம் விபுத்தை வேத பாரகை:
ஸா மே வஸ்து ஜிஹ்வாக்ரே ப்ரஹ்ம ரூபா ஸரஸ்வதீ (6) (௬)

[எந்த தேவி வேதங்களின் கரைகண்டவளெனத் துதிக்கபடுகிறாளோ, அந்த ப்ரஹ்ம வடிவான ஸரஸ்வதி என் நாக்கு நுனியில் (வாக்கில்) வசிக்கட்டும்]

ஜய த்வம் தேவி சாமுண்டே ஜய பூதாபஹாரிணி
ஜய ஸர்வகதே தேவி காலராத்ரி நமோஸ்துதே     (7) (௭)

[சாமுண்டீ தேவியே, (ஊழிகாலத்தில்) ப்ராணிகளை அபகரிப்பவளே, எங்கும் நிரைந்தவளே, காலராத்ரி வடிவம் கொண்டவளே உனக்கு வெற்றி கூறி வணங்குகிறோம்]

மார்கண்டேய:
ஏகாபி த்ரிவிதா (ஆ)க்யாதா ஸப்ததா ஸைவ கீர்த்தின்தா
தஸ்யா பேதா:ச (அ)னன்தாஷ்ச தன்மஹாத்ம்யம் சிவோதயம் (8) (௮)

[மார்கண்டேயர் (கூறிய்து): தேவி, ஒருத்தியாக இருந்தும் மூன்று விதமாகவும் (மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாஸரஸ்வதி), ஏழுவிதமாகவும் (ஸப்த மாத்ருகா வடிவங்களான ப்ரஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, நரஸிம்ஹி (சில புத்தகங்களில் இது கணேச்வரி என்று உள்ளது), ஐந்திரி) கூறப்பட்டுள்ள இத் தேவியின் பேதங்கள் (உருவங்கள்) முடிவற்றவை அவளுடைய மஹாத்ம்யங்கள் (பெருமைகள்) பரமேச்வரனிடம் இருந்து உண்டானவை]

நாளை அர்கள ச்லோகங்களைப் பார்ப்போம்.

1 கருத்து:

  1. ஸ்லோகங்களும் அவற்றின் அர்த்தங்களுடன் கொடுத்தது நல்லதாகப் போயிற்று சீனு. புரியாமல் படிப்பதை விட அர்த்தம் புரிந்து படித்தால் இன்னும் அதிகம் ஆர்வம் இருக்கும்...

    பதிலளிநீக்கு