வியாழன், டிசம்பர் 22, 2011

56 புராதன இந்திய தேசங்கள்


மாயாவதியின் உத்திரபிரதேச பிரிவினைக் காரணமாக அதன் எதிர்காலத்தைக் குறித்து எழுதிய போது, பிரிந்து கிடந்த தேசத்தைக் கஷ்டப் பட்டுச் சேர்த்துள்ளோம்; அது மீண்டும் பிரிந்து  விடுமோ என்ற பயம் எழுந்தது.

பொதுவாக இந்தியா என்பது எந்த காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை என்று கூறுவர். ஆனாலும் பழைய புராணக் கதைகளிலும் நூல்களிலும், ’56 தேசத்தைச் சேர்ந்த அரசர்கள்’ என்ற ஒரு சொல் விரவி வரும். அவ்வப்போது, பல (நூற்றுக்கணக்கான) சிறிய அரசாங்கங்களூம், சிற்றரசர்களும் ஆண்டு வந்திருந்தாலும், பெரிய ராஜ்ஜியங்கள் என்று 56 தேச அரசர்கள் என்று தான் அனைத்து கதைகளிலும் கூறப்பட்டிருக்கும்.

அந்த காலத்திலேயே இந்தியர்கள் பாரசீகம், சீனம், கடாரம், ரோமாபுரி, துருக்கி ஆகிய நாட்டுடன் (வாணிகத்) தொடர்புடன் இருந்து வந்துள்ளார்கள்.

ஆனாலும், அந்த கதைகளில் சொல்லும் 56 தேச அரசர்களில் இந்த துணைக்கண்டத்தைச் சேராதவர்கள் இருந்ததில்லை. அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை மட்டுமே சேர்ந்தவர்கள். தனித்தனி நாடாக இருந்தாலும் (தங்களுக்குள் சண்டையிட்டு வந்திருந்தாலும்) அவர்கள் கலாசார அடிப்படையில், ஒரே நாடாக இல்லாவிட்டலும், ஒரே சமூகமாகவே இருந்து வந்துள்ளனர்.

நம் புராண இதிகாசங்களிலும் (ராமாயணம், மஹாபாரதம்), பழைய கதைகளிலிருந்தும் (விக்ரமாதித்யன் கதைகள், மதன காமராசன் கதைகள் போன்றவை) அந்த 56 புராதன இந்திய தேசங்களைத் தொகுத்துள்ளேன்.  (தவறுகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக் காட்டவும்)
எண்
பழய பெயர்
தற்போதய பெயர் (அ) இடம்
1.        
ஹிந்து குஷ் பகுதி
2.        
வட காஷ்மீரம் – கில்கிட் பகுதி (POK)
3.        
காந்தஹார் (ஆஃப்கானிஸ்தானம்)
4.        
காஷ்மீர்
5.        
மேற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்)
6.        
பஞ்சாப் (குறிப்பாக சியால்கோட் (பாக்) பகுதி)
7.        
ஹிமாசல பிரதேசம் (குறிப்பாக காங்டா பகுதி)
8.        
கிழக்கு பலூசிஸ்தான் (பாக்)
9.        
சிந்து பகுதி (பாகிஸ்தான்)
10.     
முல்தான், மிதான்கோட் கராச்சி(!!!)
11.     
ஆரவல்லி மலைப் பகுதி (ராஜஸ்தான்)
12.     
மால்வா பகுதி [தென்கிழக்கு ராஜஸ்தானும் மேற்கு மத்திய பிரதேசமும் இணையும் பகுதி]
13.     
உஜ்ஜயினி பகுதி (மத்திய பிரதேசம் மால்வாவிற்கு அருகில்)
14.     
தென் குஜராத்
15.     
வட குஜராத், தெற்கு ராஜஸ்தான்
16.     
கோதாவரி நதிக்கரை பகுதி
17.     
ஹேஹய (ஹேயய) தேசம்
நர்மதா பள்ளத்தாக்கு
18.     
அனுப தேசம்
நர்மதை தபதிக்கு இடைபட்ட பகுதி
19.     
கருஷ தேசம்
குவாலியர் பகுதி
20.     
சேடி (Chedi) தேசம்
புந்தேல் கண்ட்
21.     
ஆபீர (யாதவ) தேசம்
ஆக்ரா பகுதி
22.     
சூரசேனம்
மதுரா புகுதி (உத்திர பிரதேசம்)
23.     
மத்ஸ்ய தேசம்
ஜெய்பூர் (ராஜஸ்தான்)
24.     
ஸால்வ தேசம்
ஹரியானா
25.     
குரு தேசம்
தில்லி + பச்சிம் ப்ரதேஷ்(மேற்கு உத்திர பிரதேசம்)
26.     
பாஞ்சாலம்
ஆவாத் ப்ரதேசம் (மத்திய உத்திர பிரதேசம்)
27.     
வத்ஸ தேசம்
அலஹாபாத் பகுதி
28.     
கோசலம்
பூர்வாஞ்சல் (கிழக்கு உத்திர பிரதேசம்)
29.     
விதேஹம்
பீஹார் நேபாள எல்லை மாவட்டங்கள்
30.     
மகதம்
பிஹார் - குறிப்பாக பாட்னா (பாடலிபுத்திரம்) அதைச் சுற்றிய பகுதி
31.     
அங்க தேசம்
தென் கிழக்கு பிஹார் (முங்கேர் மாவட்டம்)
32.     
காசி தேசம்
காசி
33.     
வங்கம்
வங்காளம்
34.     
நேபாளம்
நேபாளம்
35.     
கிம்பூருஷம்
திபெத் எல்லை பகுதி
36.     
பார்வத தேசம்
பூடான்
37.     
புலந்த தேசம்
மேற்கு உத்ராஞ்சல்
38.     
காமரூபம் / ப்ராக்ஜோதிஷபுரம்
அஸ்ஸாம்
39.     
புண்டர தேசம்
பிரம்மபுத்திரா நதிக்கரை (அருணாசல பிரதேசம்!!)
40.     
ஸுஹ்ம (ஸிம்ம!!) தேசம்
பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கு இந்தியா
41.     
கலிங்கம்
கரையோர ஒதிஸா
42.     
உத்கலம்
மேற்கு ஒதிசா
43.     
விதர்பம்
நாக்பூர்
44.     
அஸ்மகம்
விந்திய பிரதேசம் (தெற்கு மத்தியபிரதேசம்)
45.     
தண்டகம்
ஔரங்காபாத், நாசிக் பகுதி
46.     
மராட்டியம்
மேற்கு மஹாராஷ்ட்ரா
47.     
சாளுக்ய தேசம் (கர்நாடகம்)
வடகர்நாடகம்
48.     
கிஷ்கிந்தா
தென் கர்நாடகம்
49.     
கொங்கணம்
கோவா
50.     
ஆந்த்ரம்
(தெலுங்கானா நீங்கிய கரையோர) ஆந்திரம்
51.     
யவன தேசம்
தெலுங்கானா
52.     
த்ராவிட தேசம்
ராயல் சீமா + வட தமிழகம்
(திருவேங்கடம், -  பாலாறு பகுதி)
53.     
சோழ தேசம்
மத்திய தமிழ் நாடு
54.     
பாண்டிய தேசம்
தென் தமிழ் நாடு
55.     
கேரளம் /
சேர தேசம்
கேரளம்
56.     
ஸிம்ம (அ) ஸிங்கள தேசம்
இலங்கை

மேற்கூறிய அரசாங்கங்களில் சில நேரங்களில் மாற்றமும் இருந்துள்ளது. சமயங்களில், சில ராஜ்ஜியங்கள் சேர்ந்து ஒரே பெயரிலும், வேறு சில பிரிந்து வேறு பெயர்களிலும் வழங்கப் பட்டுள்ளன. உதாரணமாகக் கூறுவதென்றால், கிஷ்கிந்தை தனி நாடாக வழங்கப் படாமல் சாளுக்கிய ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்துள்ளது. ஆபீர தேசம் (யாதவர் நாடு)  முதலில் ஆக்ரா பகுதியில் இருந்தாலும் பின்னர் (கிருஷ்ணர் காளத்தில்) த்வாரகைக்கு மாறியது. சில நேரங்களில் அது குந்திநாடு என்றும் வழங்கப் பட்டுள்ளது. (குந்தி தேசமும் ஆபீர தேசமும் வேறு என்ற கருத்தும் உண்டு). த்ராவிட தேசம் பின்னர் பல்லவப் பேரரசாக மாறியது. அதே போல் கோசல தேசம் வட கோசலம் (தசரதரால் ஆளப்பட்டது), ஆனால் தென் கோசலம் (தற்போதைய சதீஸ்கர் பகுதி) என தனி தேசமாக இருந்தது (ராமரின் தாயார் கௌசல்யா இந்த கோசலத்தையே சேர்ந்தவர்).

இந்த தேசங்களைப் பற்றி (விரிவாக) எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன்.

14 கருத்துகள்:

 1. நல்ல அழகான தகவல் தொகுப்பு.

  (யவன ராணி என்றதும் சாண்டில்யன் நினைவுக்கு வருவார். தெலுங்கானாதான் யவனதேசம் என்று தெரிந்ததும் இனி யவனராணி விஜயசாந்திதான் நினைவுக்கு வருவார்.)

  பதிலளிநீக்கு
 2. நல்ல சேகரிப்பு சீனு....

  தொடரட்டும் வித்தியாசமான பகிர்வுகள்....

  பதிலளிநீக்கு
 3. நன்றி பத்து,

  //யவனராணி விஜயசாந்திதான்//
  பார்த்து, வந்து ஒரு உதை விடப் போகிறார்.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. ராமாயண மஹாபாரதத்தில் சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் குறிப்புகள் உள்ளன

   நீக்கு
  2. 56தேசங்கள் பற்றி விளக்கமாக பி வி சீனிவாச ஐயங்கார் 2பாகங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார்.

   நீக்கு
  3. வேறு சிலரும் எழுதியுள்ளனர். உதாரணமாக, பி.வி.ஜகதீச அய்யர் என்பவரின் நூல் தான் இது பற்றி நான் முதலில் படித்தது.

   நீக்கு
 5. பாரதத்தின் புராதன நாடுகளின் பட்டியலை தெரிந்து கொண்டேன் மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. தேடு, தேடத்தேட திகட்டாத பொக்கிஷம் இந்து ராஷ்டிரம் பற்றிய தகவல்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 7. சில நூல்கள் படித்து நானாக 30 தேசத் தமிழ் பெயரை அறிந்து இருந்தேன்.இன்று முழுவதும் உங்களால் அறிந்து கொண்டேன்.மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு