புதன், நவம்பர் 14, 2012

’பத்ர’ காளி (பாகம்-2)


வங்காளத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப் படுகிறது என்று இதன் முதல் பாகத்தில் எழுதியிருந்தேன்.

சாதாரணமாக பத்ரகாளி என்று நம் தமிழ்நாட்டில் கூறப்படும் பெண் தெய்வம் இந்தியா முழுவதும் காளி என்றே கூறப்படுகிறது. வட இந்தியாவைப் பொறுத்தவரை ‘பத்ர’காளி என்று கூறப்படும் பெண் தெய்வம் சிவ கணங்களின் தலைவராகக் கருதப்படும் ‘வீர பத்ர’னின் துணைவியாகவே கூறப்படுகிறது. சிவனின் வலது காதிலிருந்து தட்சனின் யாகத்தை அழிக்கத் தோன்றியவர் வீரபத்ரன். [வீரபத்ரருக்கு நம் தமிழகத்தில் கோவில்களும் உண்டு]. சிவனின் இடதுகாதில் (சக்தியின் பாகம்) தோன்றியவள் பத்ரகாளி என்று கூறுகிறார்கள். [நாட்டார் தெய்வங்களாக இருந்து பின்னர் இந்து மதத்தில் இணைக்கப் பட்டும் இருக்கலாம்].

இதற்கும் இந்த அமாவாசையில் காளி பூஜை செய்வதற்கும் என்ன சம்பந்தம்? பார்க்கலாம்...

பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களாகக் கூறப்படுபவை திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகியவை என்று எனது இந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.

மொத்தம் 11 கரணங்கள். கரணம் என்பது திதியில் பாதி. ஒரு மாதத்தில் மொத்தம் 30 திதிகள் இருக்கின்றன; அப்படியானால், 60 கரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், கரணங்கள் மொத்தம் 11 தான். வளர்பிறை முதல் (பிரதமை) திதியின் முதல் பாதி எப்பொழுதுமே ‘கிம்ஸ்துக’ கரணம் என்று அழக்கப்படும்; தொடர்ந்து 7 கரணங்கள் (பவ, பாலவ, கௌளவ, தைதூல, கர்ஜ, வணிஜ, விஷ்டி(அ) பத்ரா) 8 முறைத் திரும்பத் திரும்ப வரும். மீதி உள்ள 3 பாதி திதிகள் சகுனி, சதுஷ்பதம், நாகவம் என்ற கரணங்களாகக் குறிக்கப்படும்

இதில் 7-ஆவது சுழற்சியாக வரும் விஷ்டி என்ற பத்ர கரணம் அசுபமாகக் கருதப்படுகிறது. பொதுவாக ‘பத்ர’ என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு வெள்ளை, சுத்தம் என்ற பொருள்களும் கூறப்படுகின்றன. எனவே இவ்வேளை த்யானம் போன்றவை செய்ய நல்ல நேரமாகக் கூறப்படுகிறது. அதனாலேயே மற்ற காரியங்கள் செய்ய ஏற்ற நேரம் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

நம் தமிழ்நாட்டில் இந்த பத்ர கரணம் அவ்வளவாகப் பார்க்கப்படுவதாகத் தெரியவில்லை (அல்லது நான் கேள்வி பட்டிருக்கவில்லை; பஞ்சாங்கங்களில் மட்டும் பத்ர கரணம் சுபகாரியங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்). ஆனால், இங்கு வடக்கில் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது. திதி சுழற்சி படி வளர்பிறையில் (சுக்கில பட்சம்) சதுர்த்தியின் பின்பாதி, அஷ்டமியின் முன்பாதி, ஏகாதசியின் பின் பாதி, பௌர்ணமியின் முன்பாதி ஆகியவையும் தேய்பிறையில் த்ரிதியையின் பின் பாதி, சப்தமியின் முன்பாதி, தசமியின் பின் பாதி, சதுர்தசியின் முன்பாதி ஆகியவை பத்ர கரணங்கள். தேய்பிறை சதுர்தசியின் பின் பாகம் குணி கரணமாகவும், அமாவாசையின் முதல் பாகம் சதுஷ்பத கரணமாகவும், பின்பாகம் நாக கரணமாகவும் கூறப்படும். இதில் வளர்பிறை பத்ர கரணங்கள் வ்ரிச்சகி (தேள்) என்றும் தேய்பிறை பத்ர கரணங்கள் சர்பிணி (பாம்பு) என்றும் கூறப்படுகின்றன.

ரத்னகோஷம் என்ற நூலின் படி இந்த 8 பத்ர கரணங்களுக்கும் எட்டு தனித்தனி அதிதேவதைகளும் உண்டு. அவையும் அவற்றின் திசைகளும் பின் வருமாறு:
வரிசை
பக்ஷம்
திதி

திசை
அதிதேவதை
1.
வளர்பிறை
சதுர்த்தி
பின் பாதி
மேற்கு
த்ரிஷ்ரா
2.
வளர்பிறை
அஷ்டமி
முன் பாதி
தென்கிழக்கு
ஹன்ஸி
3.
வளர்பிறை
ஏகாதசி
பின் பாதி
வடக்கு
சுமுகி
4.
வளர்பிறை
பௌர்ணமி
முன் பாதி
தென்மேற்கு
நந்தினி
5.
தேய்பிறை
த்ரிதியை
பின்பாதி
வடகிழக்கு
கராலிகா
6.
தேய்பிறை
சப்தமி
முன்பாதி
தெற்கு
ருத்ரமுகி
7.
தேய்பிறை
தசமி
பின்பாதி
வடமேற்கு
வைக்ருதி
8.
தேய்பிறை
சதுர்தசி
முன்பாதி
கிழக்கு
சதுர்முகி

ஐப்பசி மாதத்தின் இந்தத் தேய்பிறை சதுர்தசி திதி தான் நரகசதுர்தசி. பொதுவாக நாம் தீபாவளியாகக் கொண்டாடுவது சதுர்தசி-யின் பின் பகுதி தான். ஏனென்றால் அன்றையப் பகல் பொழுதில் அமாவாசை பிறந்திருக்கும். அந்த அமாவாசையின் முதல் கரணம் ஸகுணி (நற்குணம் என்று பொருள்) இதன் அதிதேவதை ‘காளி’. இதற்கு அடுத்து அமாவாசையன்று வரும் இரண்டு கரணங்கள் சதுஷ்பதம் மற்றும் நாகம். இவற்றின் அதிதேவதைகள் முறையே ருத்ரா-வும் நாகாவும் ஆவர்.

பொதுவாகவே த்ரயோதசி திதியை சிவரூபமாகவும், சதுர்தசி திதியை சக்தி ரூபமாகவும் கூறுவர். இவை இரண்டும் கூடும் காலமே ப்ரதோஷ காலம். இந்தத் தேய்பிறைச் சதுர்தசியைப் பொறுத்தவரை பத்ரா-வும் காளி-யும் கூடும் தினம். அதனால் தான் இந்த தினத்தில் பூஜை செய்கின்றனர் என்று தோன்றுகிறது. மேலும், இந்த கரணமும் ‘பத்ர காளி’ என்று நம் தமிழ்நாட்டில் கூறுவதற்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்றேத் தோன்றுகிறது.


ஆனால், எனக்குத் தெரிந்த வங்காளிகள், அமாவாசை இருட்டு என்பதால் ‘காளி’ (கருப்பு) அதனால் கொண்டாடுவதாகவேக் கூறுகிறார்கள்.


[இதைப் பற்றி வேறு குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை குறிப்புகள் தெரிந்தால் கூறவும். அல்லது,  தவறு ஏதேனும் இருந்தால்/தெரிந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டவும்]

15 கருத்துகள்:

  1. உங்களின் பகிர்வின் மூலம் தான் சில விளக்கமான விவரங்களை அறிந்தேன்...

    நன்றி...
    tm1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் கரணங்களைப் பற்றியப் போதுமானத் தகவல்கள் இல்லை. ஜோதிடப் பதிவு எழுதுபவர்கள் கூட இது பற்றி மேலோட்டமாகவே எழுதுகின்றனர்.

      மேலதிகத் தகவல்கள் யாராவது தரமாட்டார்களா என்று தான் இதை எழுதியுள்ளேன்.

      வருகைக்கு நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  2. பத்ரகாளி பற்றிய பகிர்வுகள் --பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அறிந்துகொண்டேன்.
    சிறீ பத்ரகாளி சமேத வீரபத்ரர்கோவில் எமது கிராமத்தில் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள்!

      பத்ரகாளி & வீரபத்ரர் பற்றிய மேலதிகத் தகவல்கள் தெரிந்தால் தயவு செய்து கூறவும்.

      மேலும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

      நீக்கு
  4. எத்தனை தகவல்கள் ஒவ்வொரு பதிவிலும் பகிர்ந்து கொள்ளுகிறீர்கள் ஸ்ரீனி!
    மேலதிகத் தகவல் தெரிந்தால் கட்டாயம் எழுதுகிறேன்.

    மன நிறைவான பகிர்வுகள் உங்களுடையவை என்று சொல்ல வேண்டும்.

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. தெரியாத நிறைய விஷயங்கள் சீனு.... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நாட்டார் தெய்வங்களாக இருந்து பின்னர் இந்து மதத்தில் இணைக்கப் பட்டும் இருக்கலாம்]. - I think it is the other way around. Enna grama devadaingala pala hindu religion old text la sonaduku vera perla irukaradave iruku. For eg. Aiyenar is nothing but Aiyappa swamy, Pechayi is nothing but Saraswathi (Pechu + Ayi. Kathavarayan (Kathu na wind) adu vayu bhagavanuku vera peru and so on. Iduku karanam ennana hindu religion oru individual yarum uruvakala adanala grassroot varaikum anda makkaloda dialect la peru mari irukalam. Azhwar, nayanmar padalgala patha idu nalla puriyum enna they belong to various castes. Aana avanga solradu ore vishayatha dan.

    பதிலளிநீக்கு
  7. நாட்டார் தெய்வங்களாக இருந்து பின்னர் இந்து மதத்தில் இணைக்கப் பட்டும் இருக்கலாம்]. - I think it is the other way around. Enna grama devadaingala pala hindu religion old text la sonaduku vera perla irukaradave iruku. For eg. Aiyenar is nothing but Aiyappa swamy, Pechayi is nothing but Saraswathi (Pechu + Ayi. Kathavarayan (Kathu na wind) so adu vayu bhagavanuku vera peru and so on. Iduku karanam ennana hindu religion oru individual yarum uruvakala adanala grassroot varaikum anda makkaloda dialect la peru mari irukalam. Azhwar, nayanmar padalgala patha idu nalla puriyum enna they belong to various castes. Aana avanga solradu ore vishayatha dan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ராம்குமார்.

      நீக்கு