வெள்ளி, ஜூலை 29, 2011

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது போட்டி

முதல் டெஸ்ட் தோற்ற பின்பு இன்று Nottingam-இல் இரண்டாவது போட்டி நடை பெற உள்ளது.

முதல் போட்டியில் இந்தியா பொதுவாக எல்லாத் துறைகளிலும், குறிப்பாக மட்டையாட்டத்தில், கோட்டை விட்டது. இரண்டு முறையும் 300 ஓட்டங்கள் கூட எட்டாதது மட்டையாட்டத்தில் சொதப்பியதை தான் காட்டுகிறது. அதிலும், ஒரு துவக்க ஆட்ட வீரரைத் தவிர மற்ற அனைவரும் அனுபவம் உள்ளவர்கள்;  ஆடுகளமும் மோசமாக வில்லை; பந்து வீச்சும் - லக்‌ஷ்மண் கூறியது போல் - devastating இல்லை. 

பந்து வீச்சை பொறுத்தவரை முதல் இன்னிங்க்ஸில் இஷாந்த் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்பினார். விளையாட்டை ஓரளவு அனுமானிக்கும் ரசிகர்களுக்குக் கூட, இங்கிலாந்தில் பந்தை கூடுமான வரை நல்ல அல்லது முழு நீளத்தில் (good or full length) வீச வேண்டுமெனத் தெரியும். ஆனால் அவரோ, அளவு குறைவாகவே வீசினார். தொழில் முறை விளையாட்டு வீரரான அவருக்கோ, அணித்தலைவருக்கோ, பயிற்சியாளருக்கோ இது தெரியாதது ஆச்சரியம் தான். [மே.இ. அளவு குறைவான பந்துகள் தான் அவருக்கு wickets தந்தன என்பதால் அதையே இங்கு செய்வேன் என்றால் என்ன செய்ய முடியும்?)  இரண்டாம் இன்னிங்க்ஸில் அதை ஈடுகட்டினார், ஆனால், வெறும் இரண்டு பந்து வீச்சாளர்களைக் (ப்ரவீன், இஷாந்த்) கொண்டு எவ்வளவு தான் முடியும். 

 ஹர்பஜனை பொருத்தவரை அவரை 1-2 போட்டிகள் நீக்கினால் தான் சரியாகும். வேறு சுழல் பந்தாளர் சோபித்தால் அவருக்கும் ஒரு போட்டி இருக்கும். [கும்லேவுக்கும் இது நடந்தது. அப்போது ஹர்பஜன் இருந்ததால் அவருக்கு ஒரு போட்டி இருந்தது; அவர் தன் முழு திறமையைக் காட்ட வேண்டியிருந்தது].

இப்பொழுது, இரண்டாம் போட்டியைப் பொருத்தவரை என் அணி இதுதான்;

1. அபினவ் முகுந்த்
2. யுவராஜ் சிங் [கம்பீர் காயத்தால் ஆட மாட்டார் எனத் தகவல்]
3. த்ராவிட்
4. சச்சின்
5. லக்‌ஷ்மண்
6. ரெய்னா
7. தோனி
8. ப்ரவீன்
9. இஷாந்த்
10.ஸ்ரீசாந்த்
11. முனாஃப்

நான்கு வேகப் பந்தாளர்களும் யுவராஜ் & ரெய்னா மூலம் சுழல் பந்தும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக