வியாழன், அக்டோபர் 20, 2011

இனிப்பு விஷ(ய)ங்கள்



தீபாவளி வந்துவிட்டாலே எங்கும் கடைகள் தான். அதிலும் இந்த இனிப்பகங்கள் வாசலில் எப்பொழுதும் கூட்டம் தான். இவர்கள் தங்கள் கடைக்கு முன் பெரிய் பந்தல் போட்டு பாதி தெருவை அடைத்துவிடுவார்கள், அதனால் ஏற்படும் வாகன நெரிசல் வேறு. எங்கள் சிறு வயதில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும்பாலும் இனிப்பும் மற்ற பலகாரங்களும் வீட்டிலேயே செய்வது தான் வழக்கம். இங்கு தில்லியிலோ பெரும்பாலும் இதுபோன்ற கடைகளிலிருந்து வாங்கித் தான் கொண்டாடுகிறார்கள். இங்கிருக்கும் தமிழ்ர்களும் பெரும்பாலும் வீட்டிலேயே செய்வது போல் தான் தெரிகிறது. ஆனால் வட இந்தியர்கள் பெரும்பாலும் இந்த கடைகளின் பண்டங்களையே வாங்குகிறார்கள்.

இதில் முக்கிய பிரச்சனை என்ன என்றால், தில்லி மைய நகரிலாவது பராவாயில்லை, புறநகர் பகுதிகளில் விற்கப்படும் இது போன்ற திண்பண்டங்கள் பெரும்பாலும் தரம் குறைந்தவையாக இருக்கும். பெரும்பாலானவற்றில் கலபட்த்திற்கு உத்திரவாதம் தரலாம். அதிலும், குறிப்பாக உத்திரபிரதேசத்தின் காஸியாபாத் இதற்கு பெயர்போனது. சமீபத்தில் தில்லியில் இது போன்ற 75 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 50% கடைகள் முறைப்படி அனுமதி பெறாதவை. புறநகரில் நட்ததப் பட்டிருந்தால் நிலைமை 80% ஆக இருந்திருக்கும். தில்லி மையப் பகுதியில் கடந்த 70 நாட்களில் உணவுப் பொருட்கள் கலப்பட தடுப்புத் துறையினரால் (PFA) பரிசோதிக்கப்பட்ட 653 மாதிரிகளில் 17 மட்டுமே தரமானவை / கலப்படம் அற்றவை. முக்கியமாக, பால் பொருட்களில், பாலுக்கு பதிலாக வெள்ளை பெயிண்ட்; பாலேட்டிற்கு பதிலாக டாய்லெட் பேப்பர்கள்; நெய்க்கு பதிலாக மிருகக் கொழுப்புகள் ஆகியவை கலப்படம் செய்யப் பட்ட்டிருக்கின்றன.

எங்கள் வீட்டில் எப்பொழுதும் வீட்டில் செய்வதுதான். மனைவிக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்பது மட்டுமன்றி அதில் அவருக்கு விருப்பமும் உண்டு. தவிர, வெளியில் வாங்கும் பண்டங்கள் அவருக்கு ஒத்துக்கொள்வதும் இல்லை (பெரும்பாலும் கடுகு எண்ணெயால் தயாரிக்கப் படுவதால்). இருந்தாலும், அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்கள் இவற்றை தீபாவளியன்று நமக்குக் கொடுத்துவிடுவார்கள். அவற்றின் மேல் தோற்றக் கவர்ச்சியைக் கண்டு குழந்தைகள் தமக்கு வேண்டுமென்று அடம் பிடிக்கும் அதை சமாளிப்பது தான் பெரிய பிரச்சனை.

10 கருத்துகள்:

  1. பச்ச பால ஸ்ட்ரா போட்டு குடிக்கிற ஊராச்சே வடமாநிலம். பதிவைப் பார்த்தால் தீபாவளி பலகாரம் இப்பவே வீட்டில் செய்தாச்சு போலருக்கு.

    பதிலளிநீக்கு
  2. சாதாரணமாகவே கலப்படம் இருந்தாலும் தீபாவளி சமயத்தில் இன்னும் அதிகம் சீனு.

    //மனைவிக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்பது மட்டுமன்றி அதில் அவருக்கு விருப்பமும் உண்டு.//

    ம்ம்ம்ம்ம்... சரி சரி.... :)

    பதிலளிநீக்கு
  3. // பாலுக்கு பதிலாக வெள்ளை பெயிண்ட்; பாலேட்டிற்கு பதிலாக டாய்லெட் பேப்பர்கள்; நெய்க்கு பதிலாக மிருகக் கொழுப்புகள் //
    உக்காந்து யோசிப்பாங்களோ? கேக்கவே பயங்கரமா இருக்கு! எங்கள் வீட்டிலும் எப்போதும் வீட்டில் செய்தவை தான்!

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஆச்சி,
    இன்னமும் ஆரம்பிக்கவில்லை. நான்கு நாட்கள் இருக்கின்றதே.

    பதிலளிநீக்கு
  5. வாருங்கள் பந்து, தங்கள் வருகைக்கு நன்றிகள்.

    //உக்காந்து யோசிப்பாங்களோ? கேக்கவே பயங்கரமா இருக்கு!//
    இதற்க்கெனத் தனியாக R&D துறையே வைத்திருக்கிறார்கள்.
    // எங்கள் வீட்டிலும் எப்போதும் வீட்டில் செய்தவை தான்! //
    நல்லது. அ.ஐ.நா. வில் நம் தமிழ்நாட்டு இனிப்பு வகைகளும் கிட்டுமா?

    பதிலளிநீக்கு
  6. வாங்க ராஜா,

    எது இனிப்பான செய்தி கலப்படம் செய்வதா?

    இல்லை நாங்கள் வீட்டிலேயே செய்வதா?

    :)

    பதிலளிநீக்கு
  7. Hi Cheenu, my first visit to your blog. I'm truly impressed. Will browse in detail. I too intend to start blogging soon.

    பதிலளிநீக்கு
  8. ஹே! ரகு வாவ். சீக்கிரம் ஆரம்பிக்கவும். என் போன்ற அரைகுரைகளே வலை எழுதும் பொழுது, உன் போன்ற “Jack of all Trades & Master in all" எழுதினால் நிச்சயம் நன்றாக இருக்கும். சீக்கிரம் ஆரம்பிக்கவும். ஒரு சின்ன suggestion "தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதவும்”.

    பதிலளிநீக்கு