ஞாயிறு, நவம்பர் 01, 2020

வளம் பெறும் வழி

வளம் பெறும் வழி

[வல்லமை இதழின் 281-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] ஆணும் பெண்ணும்
சரி நிகர் சமானம்
அடையும் இலக்கில்
அவரவர் உயரம்
விடுதலை உணர்வு
விகிதத்தில் இல்லை
எட்டும் அறிவில்
இளைத்தவர் இல்லை...

உள்ளத்தின் உள் நோக்கி
உன் திறன் அறிந்தால்
உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்
அச்சம் தவிர்த்து
அகிலத்தை வெல்லலாம்
வெற்றுப் புகழ்ச்சியை
ஒதுக்கி வைத்து
உண்மை அறிவை
உயர்த்தும் கல்வியை
வளர்த்து வளம் பெறும் வழியறிவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக