செவ்வாய், ஜூன் 25, 2013

யூரிகாகரினும் மாற்றானும்
சென்ற வாரம் சூர்யா நடித்த மாற்றான் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள் (ஜெயா?)

அந்தப் படத்தில் சில நிகழ்வுகள் ரஷ்யாவில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் சிலர் விமானவிபத்தில் இறந்தது போலவும் காட்டி அந்த விமான விபத்து சதித்திட்டம் என்பது போல் கதைத் தொடரும்.

இதைப் பார்த்ததும் சமீபத்தில் படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அது…

யூரி காகரின். இந்தப் பெயர் 1960-70களில் மிகவும் பிரபலம்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் ‘பனிப்போர்’ நடந்து கொண்டிருந்த நேரம். இருவரும் ஒவ்வொரு துறையிலும் மற்றவர்களை பின் தள்ளி முன்னேற எண்ணியிருந்த நேரம். விண்வெளித்துறையில் பூமியைத் தாண்டி பிற கோள்களின் கால்பதிக்க இரு தரப்பும் முயன்று கொண்டிருந்த வேளையில் அமெரிக்கா 1961 ஆண்டு மேமாதம் அலென் ஷெபெர்ட் என்பவரை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்ப எண்ணியிருந்த நிலையில் அதற்கு முன்னதாக 1961 ஏப்ரல் மாதத்தில் (12-ஆம் தேதி) யூரிகாகரினை விண்வெளிக்கு அனுப்பியது. ஆக முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதர் ’யூரிகாகரின்’. இந்த நிகழ்வை வாஸ்டாக் 1 மிஷன் என்றுக் கூறுவர்.

ஆனால் விண்வெளிக்குச் சென்ற 7 வருடத்திற்குள் 1968-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் நாள் தன் விமானப் பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் ஸெர்யொகினுடன் வழக்கமான மிக் 15 ரக ஜெட் பயிற்சி விமானத்தில் மாஸ்கோ அருகே பறக்கும் பொழுது விபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து அவர் உயிரிழந்தச் சம்பவம் விபத்தா அல்லது சதிவேளையா என்ற கேள்வி எழுந்தது.

அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்புகளின் படி,  ககாரினும் ஸெர்வோகினும் பறவை அல்லது வேறு பொருள் மோதுவதைத் தவிர்க்க விமானப்ப்பாதையை மாற்றும் பொழுது அது குறைந்த உயரத்தில் இருந்த்தால் வால் சுழற்சி (tailspin) ஏற்பட்டு தரையில் சரிந்தது என்பதே ஆமும்.

ஒரு ஓய்வு பெற்ற சோவியத் விமானப்படை கர்னல் மூலம் வெளியிடப்பட்ட மற்றொரு கோட்பாடு என்னவென்றால், மிக் 15 ஜெட் விமானத்தின் காக்பிட் திறந்ததால்  விமானத்தில் காற்றுவெட்டு (vacuum) ஏற்பட்டு விமானிகளுக்கு பிராணவாயு இழப்பு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும் என்பதாகும்.

இந்த அதிகாரபூர்வ அறிவிப்பைத் தவிர பல கோட்பாடுகள் – தொழில்நுட்ப காரணங்கள் (கட்டுப்பாட்டை இழத்தல், காட்டு மானை potshots எடுத்து) முதல் சதி வரை (சோவியத் அரசாங்கம், இராணுவம், KGB ஆகியவற்றால்)  - பல்வேறு சமயங்களில் எழும்பியுள்ளன.

இதைப்பற்றி யூரிகாகரினின் நண்பரும் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த அலெக்ஸி லியோனொவ் கூறுவதைப் பார்ப்போம்…

[அலெக்ஸி லியோனொவ்-உம் வரலாற்றில் இடம் பெற்றச் சிறந்த விண்வெளி வீரர். 1965-ஆம் ஆண்டு (மார்ச்,18) விண்வெளியில் திறந்த வெற்றிடத்தில் மிதந்த முதல் மனிதன் என்ற பெருமை பெற்றவர் அலெக்ஸி லெயோனொவ்]

இவர், ககாரினின் மரணத்திற்கானக் காரணத்தை அறிய அமைக்கப்பட்ட குழுவிலும் இடம் பெற்றுப் பணியாற்றியுள்ளார்.  அவர் சென்ற வாரம் (ஜூன் 14, 2013) ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் இதைப் பற்றிய விவரங்களைக் கூறினார்.

இதன் படி சம்பவம் நடந்த அந்த தினத்தில் ஒரு Su-15 [ஃபைட்டர் ஜெட்] சோதனை ஓட்டம் நடத்தியது, விமானி அதை 450-500 மீட்டர் [33,000 அடி] அல்லது உயர் 10,000 மீட்டர் [1,480-1,640 அடி] உயரத்தில் பறக்க வேண்டும். ஆனால், தவறுதலாக அந்த விமானி அதன் உயரத்தைச் சற்றுக் குறைவாக செலுத்த, அந்த  Sukhoi (Su-15) அதிவேக ஜெட், காகரின்னின் மிக்-15 ஐ நெருங்கிய போது மேகமூட்ட்த்தால் அதைச் சரியாக கணிக்க முடியாமல் அதன் ஆபத்தான அஃப்டர்பர்னிங் 10-15 மீட்டர் [30-50 அடி] தூரத்தில் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில்  அவரது விமானம் திரும்ப அதனால்  ஏற்பட்ட tailspin-ஆல் - ஒரு ஆழமான சுழல் போல் உள்வாங்க - ஒரு மணி நேரத்திற்கு 750 கிலோமீட்டர் வேகத்தில் [ஒரு மணி நேரத்திற்கு 470 மைல்] தரையில் விழுந்து நொறுங்கியது.

அரசு அந்த நேரத்தில் இந்தத் தகவலை வெளியிட்டால் பயிற்சி விமானங்களைப் பறக்கவிடுவதில் விதி மீறல் (அல்லது) விதிகள் சரியாக நிர்ணயிக்கப்படாதமை ஆகியவை வெளியே தெரிந்திருக்கும். அதனால், அப்பொழுது இதைப் பறவை/பலூன் மோதல் என்று கூறியுள்ளனர்.

மாற்றான் படத்தின் இதே போன்ற காட்சியைக் கண்டவுடன் கிட்டத்தட்ட இந்த நிகழ்வை ஒட்டி எடுத்த இயக்குநரைப் பாராட்டத்தான் தோன்றியது.

8 கருத்துகள்:

 1. நீங்கள் சொல்லித்தான் இந்த தகவல் தெரியும்... நன்றி....

  பதிலளிநீக்கு
 2. யூரி காகரின் விபத்தில் இறந்தது தெரியும். இத்தனை விரிவான பின்னணித் தகவல்களுடன் இப்போது தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. (நீங்க) சினிமா பார்ப்பதுகூட (எங்களுக்கு) உபயோகமாத்தான் இருக்கு போங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2003-இல் கேஜிபி-யின் இந்த ஆவணங்கள் வகைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன (declassified). ஆனாலும் சில தகவல்கள் வெளியிடப்படவில்லை. சென்ற வாரம் (ஜூன் 14) அலெக்ஸி லியோனொவ், அரசின் அனுமதி பெற்று, தொலைக்காட்சிப் பேட்டியில் இந்தத் தகவலை வெளியிட்டார்.

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் கணேஷ்!

   நீக்கு