திங்கள், நவம்பர் 18, 2019

வேடந்தாங்கிய பறவைகள்


வேடந்தாங்கிய பறவைகள்
[வல்லமை இதழின் 232-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]இயற்கையன்னை தானளித்த
இன்பபுரி இவ்வையகத்தை
நகரமயமாக்கி வைத்து
நரகமதை உருவாக்கினோம்!

நீர்வளத்தைக் கெடுத்துவிட்டோம்
நிலமடந்தை வளமொழித்தோம்
கால் வைக்கும் இடமெல்லாம்
கட்டிடங்கள் உயர்த்திவைத்தோம்!

பச்சைநிறத் தாயவளின்
கச்சைமலை முகடழித்து
மிச்ச மீதம் ஏதுமின்றி
தாய்ப்பாலை வீணடித்தோம்!

வான்பொழித்து மழையில்லை
கதிரவனால் அதிவெப்பநிலை
நில அதிர்வால் வீடில்லை எனக்கூறி
அப்பாவிப் பறவையென்ற
வேடங்கொண்டு வாழ்ந்திருப்போம்!


இயற்கை வளமழித்து

கான்க்ரீட் மரக்கிளையில் 
வண்ணமெல்லாம் தானிழந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக