திங்கள், பிப்ரவரி 17, 2020

பொன்னூஞ்சல்

பொன்னூஞ்சல்
[வல்லமை இதழின் 245-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


உறவென்றக் கயிறு கட்டி
உணர்வென்ற அச்சில் சுழல
மனமென்னும் காற்று ஆட
மணமக்கள் ஆடும் ஆட்டம்!

சொந்தங்கள் வாழ்த்துரைக்க
சீதையுடன் இராமனென
சந்ததிகள் தொடர்ந்துவாழ - இன்பச்
சன்னிதியில் ஆடும் ஆட்டம்!

சோர்வுற்ற நேரமெல்லம் சொந்தமெனத் தாகம்தீர்த்து
பருவம் கடந்த பின்னும் பரிவுடன் நீர்த்திருந்து
மேடுபள்ளம் தாண்டி ஜீவநதியாய் ஓட
இல்லறத்தின் இன்பம் காணும் துவக்க ஆட்டம்!

1 கருத்து: