திங்கள், பிப்ரவரி 03, 2020

விளையும் பயிர்

விளையும் பயிர்


சிறுகடுகு என்றாலும் அதன் காரம் குறைவதில்லை
சிறுமனிதன் என்று எண்ணித் துவளுவதில் ஞாயமில்லை
தீச்சுடரைக் கானகத்தில் இட்ட கதை அறிவோம்!
தத்தரிகிட நாதம் நமது நெஞ்சினிலே வைப்போம்..

சின்னத் துளிகள் என்று ஏண்ணி
துடைத்தழிக்க நினைப்போர் இருந்தாலும்
மடைகள் உடைக்கும் வெள்ளமாய் மாறி
தடைகள் தாண்டிச் சென்றிடுவோம்…

காரியம் யாவும் செய்திடும் வகையில்
வீரியம் கொண்ட விதையாய் ஆகி
விண்ணைத் தொடும் விருட்சமாய்ப் படர
மண்ணைப் பிளந்து முளைத்திடுவோம்…

2 கருத்துகள்: