பிரம்மனின் தூரிகை
[வல்லமை இதழின்264-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
மைபூசி திருடும் கள்வன்போல்கார்வண்டு தேன் எடுத்துச் சென்றுவிட
வெள்ளந்தியாகப் பூவண்ணம் மேனி பூசி
‘வெண்ணை’பூச்சியாக நிற்கும் பேதை நீ…
பூக்கடைக்கு விளம்பரம்
தேவையில்லை என்றாலும்
பூவழகை புவனிக்குக்
கொண்டு சேர்க்கும் தூதுவன் நீ…
காதலியின் கண் துடிப்பைக்
கண்டுணரும் காதலன்போல்
பூக்களின் இதயத் துடிப்பை – சிறகினில்
புலம்பெயர்த்த சித்துவித்தைககாரன் நீ….
வாடிச் சருகாகும் பூக்களின்
வண்ணத்தை வார்த்தெடுத்து
புனர்ஜென்மம் கொடுத்துவிடும்
பிரம்மனின் தூரிகை நீயன்றோ...
நல்ல கவிதை. பாராட்டுகள். உனது ஒரு கவிதை இன்றைய எனது பதிவில். தகவலுக்காக.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்கு