சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி
காலை
எழுந்து கடமையைச் செய்ய
மாடத்தில்
தினமும் கூவிடுவாய்
மாலை
நேரமாய் வீடுவந்து
சொந்தம்
கூடி வாழச் சொல்லிடுவாய்
சோம்பித்
திரிந்து வாடிடாமல்
உழைப்பைக்
கொண்டே உலகைச் சுற்றி
உண்மைக்
களிப்பைப் பெற்று வாழும்
சிறப்பை
தினமும் காட்டிடுவாய்
படைப்பின்
நியதிகள் மீறிடாமல்
அடைந்துக்
கிடந்துத் தேங்கிடாமல்
சிறகை
விரித்துப் பறந்து செல்லும்
விடுதலை
வேட்கை விதைத்திடுவாய்
ஆட்டம்
காட்டும் கிளை அமர்ந்தும்
வாட்டம்
முகத்தில் காட்டி வைத்து
அழுது
பொழுதைப் போக்காமல்
நிலையாய்
நிற்கும் உறுதி சொன்னாய்
சின்னச்சின்ன
குருவி நீயும்
சொல்லும்
சேதிகள் ஏராளம்
எண்ணத்தில்
அவற்றை நிலையிருத்தி
முன்னேற்றம்
நாங்களும் கண்டிடுவோம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக