செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

புத்தகப்பை


ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் திறக்கும் பொழுதேப் பெற்றோர்கள் அனைவருக்கும் குழந்தைகளுக்கு அந்த வருடம் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால் வயிற்றில் புளியைக் கரைக்கும். கடந்த ஆண்டு முழுவதும், சென்னை மற்றும் தமிழகத்தில் மாநில அரசு பாடதிட்டத்தில் எப்பொழுது என்னென்ன மாற்றம் செய்யுமோ அதற்கு எப்பொழுது புத்தகம் அச்சிடப்பட்டு அவை எப்பொழுது விற்பனைக்கு வருமோ என்று தினமும், கிட்டத்தட்ட மாணவர்கள் அந்த வருட இறுதித் தேர்வு எழுதும் வரை, பயந்து கொண்டே கண்விழிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. புத்தகங்கள் அரசினாலேயே அச்சிடப்படுவதால் இவை தேவையான அளவு அச்சிடப்படாமல் பாடபுத்தகம் கிடைப்பதில் இருக்கும் சிரமம் தனிக்கதை.

தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் CBSE பள்ளிகளைப் பொறுத்தவரை, சிபிஎஸ்ஐ-இன் பாடத்திட்டங்களின் படி NCERT பாடப்புத்தகங்களை அச்சிட்டாலும், இந்த முறையில் நடத்தப்படும் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் புத்தகங்களைத் தாங்களே அச்சிட்டுக் கொடுத்துவிடுகின்றன.  இதில் இருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் அவற்றின் விலை. சாதாரணமாக இவற்றின் விலை NCERT அச்சிடும் புத்தகங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

நடுத்தர மக்களே பயப்படும் அளவிற்கு இருக்கும் இதன் விலை ஏழைக் குழந்தைகளை மிகவும் அதிகமாக பயமுறுத்தும் என்பதைச் சொல்லவேத் தேவையில்லை.  என்னத்தான் அரசு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கொள்கை-யின் படி கட்டணம் இல்லாமல் ஏழைக் குழந்தைகளுக்கு இடம் வழங்க ஆணையிட்டுவிட்டாலும் இந்த புத்தகக் கட்டணச் சுமையை அவர்கள் எப்படி சுமக்கமுடியும். பள்ளிப் புத்தகமே வாங்க முடியாத அந்தக் குழந்தைகளைப் பொறுத்தவரை பாட சம்மந்தமற்றக் கதைப் புத்தகங்கள் போன்றவை எட்டாக்கனியே.

இந்நிலையில் சென்ற வாரம் தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிக்கைத் தன்னுடைய ‘நீங்கள் படியுங்கள் அவர்கள் கற்கட்டும் (You Read They Learn)’ எனற அமைப்பின் கீழ் ”புத்தகப்பை (Bag of Books)” என்றத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி 84 பள்ளிகளில் ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டு அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பாடபுத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வேறு உபயோகமுள்ள புத்தகங்களை அளிக்குமாறு கோரப்பட்டார்கள். என் மகள், மகன் ஆகியோரது பள்ளிகளிலும் இது போன்ற பெட்டிகள் வைக்கப்பட்டன. குழ்ந்தைகளும் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள்.

இதுவரை இந்தப் புத்தகங்கள், ’ப்ரதம்’, ‘கூஞ்ச்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம், 2574 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொண்டு நிறுவனமான 'CRY'-யும் இதில் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-உடன் கைகோர்த்துள்ளது. மேலும் 10000 மாணவர்களின் கல்விக்காகத் தனி நிதியையும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை குழுமம் அளித்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் தில்லி-தலைநகரத்தில் விற்பனையாகும் ஒவ்வொரு பத்திரிகையின் 5 காசுகளும் இதற்காக ஒதுக்கப்படுகின்றன.

மற்ற நகரங்களில் இருக்கும் நிறுவனங்களும் ஊடகங்களும் இது போன்ற முயற்சிகள் எடுத்தால் நல்லது.

10 கருத்துகள்:

  1. மிக மிக நல்ல விஷயம்... என் பள்ளிக் கூட காலங்களில் பழையோய புத்தகம் தேடி நாங்கள் அலைந்தது நியாபம் வருகிறது சார்

    பதிலளிநீக்கு
  2. மிக நல்ல முயற்சி சென்னையிலும் நடந்தால் நன்றாயிருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரளி, புத்தகங்கள் இலவசமாகவே வழங்கப்படுவதாகக் கூறியிருக்கிறாரே. அதுவும் நல்ல திட்டம் தானே.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  3. புத்தக வங்கிகள் சில அரசு பள்ளிகளில் இருந்தது. இப்போது இலவசமாக புத்தகங்கள் வழங்கப் படுவதால் இவை செயல் படுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுகூட நல்ல திட்டமாகவேத் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றிகள்.

      நீக்கு
  4. நல்ல முயற்சி சீனு. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். தொடர்ந்து நடந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு