செவ்வாய், அக்டோபர் 13, 2020

இளமையே நீ தாவி வா!

இளமையே நீ தாவி வா!

[வல்லமை இதழின் 277-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



தரையிருந்து வான் எட்டி
மலை முகடு வழியிறங்கி
தாவிக் குதித்தோடிக்
கடும் பாறைச் சமமாக்கி
பூமிவளம் தான் பெருக்கி
குளிர்விக்கும் நீர்ப்போல
தாயின் மடி குடியிருந்து
தந்தைத்தோள் சேர்ந்து
தன் காலில் தான் நின்று
தரைமீது நடைபயின்று
துள்ளிக் குதித்தோடி
பழமைக் கறைக் களைந்துப்
புதுப் புனல் பொங்கு நீராடிட
இளமையே நீ தாவி வா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக