புதன், நவம்பர் 16, 2011

மல்லையாவை கைத்தூக்கி விடுவோம்


சென்ற ஒரு வாரமாக ஒரு விஷயம் தான் நாட்டு மக்கள் அனைவருக்கும்  தீராத கவலையாக மனதை வாட்டி வருகிறது. அது விஜய் மல்லையாவின் “கிங்பிஷர்” நிறுவனம் அடைந்துள்ள 7000 கோடி நஷ்டமும் தான்.

பாவம் விஜய் மல்லையா 7000 கோடி நஷ்டம் ஏற்பட்டால் அவரால் என்ன செய்ய முடியும்? எப்படி IPL, Grant Prix  போன்றவற்றில் ஈடுபடமுடியும்? புது வருடம் வேறு வருகிறது. மாடல் அழகிகளை எப்படி படம் பிடித்து calendar வெளியிட முடியும். அவர் மகனை எப்படி Bollywood நடிகைகளுடன் பழக வைக்கமுடியும். டாஸ்மாக் supply வேறு பார்க்க வேண்டும். அவருக்கு எத்தனை கவலைகள்.

மேலும் அவர் நாம் விமானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்றுதானே நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விமான நிறுவனம் நடத்துகிறார். அது மட்டுமா அதே தொழிலில் இருக்கும் indigo நிறுவனம் மக்கள் மேல் அக்கரையின்றி லாபம் அடைந்து –  அதற்கு காரணம் நல்ல நிர்வாகம் என்று பொய் கூறி – வருவதை  போலல்லாமல் மக்களுக்காகவே உழைக்கும் நிறுவனம் அதுவல்லவா? அதனால் தான், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வரப் போகிறார் என்பது தான் அனைவருடைய பிரார்த்தனையாக இருக்கும்.

மேலும்,  மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி!!! என்பதையும் கவனிக்க வேண்டும்.

நம் பிரதமருக்கு மிகவும் இளகிய மனம். அதனால் தான் விஜய் மல்லையாவின் கவலைகளை நன்கு புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய நினைக்கிறார் போலிருக்கிறது.

இல்லையென்றால் தினம் தினம் உயரும் விலைவாசி பிரச்சனை - உணவு, பெட்ரோல் பொருட்களின் விலையேற்றம் அதை தொடர்ந்து ஏறு முகமாகவே இருக்கும் inflation, பெருகிவரும் ஊழல், தெலுங்கானா, கூடங்குளம் ஆகியவற்றின் மக்கள் போராட்டங்கள் போன்ற நாட்டின் தலையாய பிரச்சனைகளில் வாயையே திறக்காமல் மேலிடத்தின் உத்தரவிற்காகக் காத்திருந்த பிரதமர் மன்மோகன்சிங், இப்போது கிங்பிஷர்-ஐ bailout செய்வதைப் பற்றிக்  கவலைப் பட்டுள்ளார்.
 எனவே.  அவரை bailout செய்து கைத்தூக்கிவிடுவது நம் கடமை.
இல்லையென்றால் அவர்க்கென்ன இருக்கவே இருக்கிறது, ABCL-ல் அமிதாப் செய்தது போல் ஒரு மஞ்சள் காகிதம் கொடுத்தால் போதும். நஷ்டப்படப் போவது அந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களும் அவருக்கு கடன் கொடுத்த SBI வங்கியும் தானே.
என்ன SBI-இல் இருப்பது யாருடைய பணம்? முதலீட்டாளர்கள் சாதாரண மக்கள் இல்லையா? என்று தானே கேட்கிறீர்கள்.

உங்களுக்கு குசும்பு அதிகம் தான். நீங்கள் இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். இன்றைய தேதியில் விற்கும் விலைவாசியில் வங்கியில் பணம் சேமிக்கவோ பங்குகளில் முதலீடு செய்யும் அளவுக்கு வசதியாக மக்கள் இருக்கிறார்களா?

எனவே, விஜய் மல்லையாவைக் கைத்தூக்கிவிடுவது அரசின் கடமை. சரிதானே!!!

10 கருத்துகள்:

 1. ரொம்ப ரொம்ப சரிங்க.வாழ்க தேசத்தொண்டன் வேங்கட ஸ்ரீனிவாசன், பல்லாண்டு வாழ்கவே. அப்படியே விஜய் மல்லையாவும் வாழ்க, பல்லாண்டு பல்லாண்டு????????

  மன்மோகன் சிங்கை விடிவானேன். அவரும் வா.ஃக வாழ்க பல்லாண்டு.

  நாடும், நாட்டு மக்களும் எக்கேடோ கெட்டுப்போகட்டும்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் ஸ்ரீ, மிக அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. முனைவர் கந்தசாமி, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
  பிரதமரை இந்த விவகாரத்தில் கருத்து கூற அனுமதித்த மே(லி)டத்தை விட்டுவிட்டீர்களே. அவர்களையும் வாழ்த்துங்கள்.

  பதிலளிநீக்கு
 4. வேல்முருகன், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. பறவைகளைப் பாதுகாப்போம். குறிப்பாக ”கிங்பிஷர்” பறவையை என்று பிரதமர் சொன்னதெல்லாம் ஒரு தப்பாண்ணே!

  பதிலளிநீக்கு
 6. வாங்க பத்து,

  தப்பேயில்லை. அவர் (பிரதமராக) வேடங்தாங்(கி)களில் இருப்பவர்தானே. பறவைப் பாசம் இருக்கத்தான் செய்யும்.

  பதிலளிநீக்கு