திங்கள், நவம்பர் 21, 2011

கலவை – 9


மல்லையாவைக் கைத்தூக்கிவிடுவோம் என்று எழுதி ஒரு வாரம் கூட ஆகவில்லை, இது தான் சமயமென்று நிதி அமைச்சகம் விமானப் போக்குவரத்துத் துறையில் 24 சதவீதம் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (Foreign Direct Investment) அனுமதிக்க உள்ளது. இது பல நாட்களாகவே அரசின் திட்டத்தில் இருந்தாலும் அத்துறை நிறுவனங்களின் எதிர்ப்பால் அதற்கு அனுமதிக்கவில்லை. இப்போதைய ‘கிங்பிஷர்’-இன் நிலைமையைக் கண்டு இதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு தான் தீர்வு என்ற துறை வல்லுநர்களின் கூற்றுக்காகவே காத்திருந்தது போல் மத்திய அரசு இப்போது இதற்கு அனுமதி தந்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமை வேண்டுமானால் சீராகுமே தவிர மக்களுக்கு அதன் பலனாக போக்குவரத்து செலவு குறையுமா என்பது புரியவில்லை. பொதுவாக, இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின்  முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று முதலில் சில சலுகைகளைத் தந்து பின்னர் போட்டியிலிருக்கும் இந்திய நிறுவனங்களை மூழ்கடித்துத் துரத்திவிட்டு பின் சுரண்டத் தொடங்குவர். நம் கண் முன்னரேயே பெப்ஸி, கோக் நிறுவனங்கள் முதலில் ரூ.5/- க்கு விற்ற அதே அளவு பானத்தை இன்று ரூ.22/-க்கு விற்கிறார்கள். இடையில், இந்திய நிறுவனங்கள் தாக்கு பிடிக்க முடியாததால் தொழிலை விட்டுவிட்டன அல்லது அவற்றின் பிரபலமான brand-கள் (limca, thumpsup போன்றவை) இவற்றாலேயே வாங்கப்பட்டது தான் மிச்சம். ஆனால், இப்போதைக்கு இதன் அனுமதி வெறும் 24% என்பது தான் ஒரே ஆறுதல்.

தில்லி மெட்ரோ ரயில் சேவையின் நான்காம் கட்டத்தின் திட்ட விரிவாக்க அறிக்கைத் தயாரிக்கப் பட உள்ளது. இதன் படி, ஏழு புதிய இணைப்புகள் நடக்க இருக்கின்றன. அவை:
1.    யமுனா – லோனி எல்லை (11.97 கி.மீ)
2.    ஜனக்புரி (மே) – முகுந்த்புரி (18.74 கி.மீ)
3.    முகுந்த்புரி – தில்ஷாத் கார்டன் (17.54 கி.மீ)
4.    கீர்த்திநகர் – த்வாரகா (செ.28) (18.7 கி.மீ)
5.    பதர்பூர் – தில்லி ஏரோசிட்டி (20.79 கி.மீ)
6.    லாஜ்பத் நகர் – மதன்கீர் (7.33 கி.மீ)
7.    ஆசாத் பூர் – ராமக்ருஷ்ணா ஆஷ்ரமம் (8.3 கி.மீ)
மேற்கூறிய இணைப்புகள் நிறைவேறினால் தில்லி மெட்ரோ ரயில் லண்டன் மெட்ரோவை விட நீளமானதாக ஆகிவிடும். இது வரை காலக்கெடுவுக்குள் தன் புதுத் தளங்கள் மற்றும் இணைப்புகளை நிறைவேற்றியுள்ள DMRC இதையும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் என்று நம்புவோம்.

இங்கே கூடங்குளத்தில் புதிய அணு உலை திறப்பிற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ஈரானில் இதற்கு நேர் எதிர் நிலை. டெஹ்ரானில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தில் அணு உலையை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமன்றி ஆயுதம் தயாரிக்கவும் பயன் படுத்துகிறது என அமெரிக்காவும் பிரிட்டனும் புகார் கூறியுள்ளன. ஈரான் அரசும் இதை மறுத்துள்ளது. ஈராகிலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை (தவறாக) சதாமுக்கு எதிராகக் கூறியது நினைவுக்கு வருகிறது.

சென்ற வாரம், வினோத் காம்ப்ளி 1996 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் (இந்தியா-இலங்கை இடையே நடைபெற்றது) அணிக் கூட்டத்தில் முதலில் மட்டையாட்த் தீர்மானித்ததாகவும் ஆனால், டாஸில் வென்றதும் (அசார் தன்னிச்சையாக) முதலில் இலங்கையை விளையாட அனுமதித்த்தில் ஏதோ உள் நோக்கம் இருந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், அணியின் அப்போதைய பயிற்சியாளர் கெய்க்வாட் மற்றும் அணைத்து ஆட்டகாரகளும் (சித்து நீங்கலாக) மறுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் இது காலந்தவறிய குற்றச்சாடு. இந்தக் குற்றச்சாட்டை அவர் அப்போதே (ஏனெனில் அப்போது அசார் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அவர் தனிமை படுத்தப் பட்டிருந்தார். அதாவது அவர் influence-இல் இல்லை; அந்த சமயத்தில் அவர் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் நம்பப் பட்டிருக்கும்) அதைவிட்டு இப்பொழுது கூறுவதை “கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது” என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அன்றைய தேதியில் இலங்கை நல்ல chaser-களாக இருந்தார்கள்; தவிர தில்லியில் நடந்த லீக் போட்டியில் சச்சின் சதம் அடித்தும் முதலில் விளையாடிய இந்தியா தோற்றது. அதனால், பொதுவாக ரசிகர்கள் மத்தியிலேயே இந்தியா முதலில் பந்து வீச வேண்டும்; அப்படி வீசினால் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடாமல் சற்று நிதானமாக ஆடுவார்கள் (யார் ஜெயசூர்யா கலு ஜோடியா என்று எதிர்கேள்வி கேட்பது புரிகிறது) மைதானமும் fresh ஆக இருப்பதால் துவக்க ஆட்டக் காரர்களால் அடிக்க முடியாது என்று தான் பேசிக் கொண்டோம். அது ஓரளவு நல்ல முடிவாக துவக்க ஆட்டக் காரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். (அரவிந்தா வேறு திட்டம் வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்?). அதே போல, இந்திய வீரர்கள் 92/2 என்ற நிலையிலிருந்து சச்சின் அவுட் ஆனவுடன்108/8 என்று மாறியதிலும் ”ஏதோ” நடந்திருக்கிறது என்கிறார். ஆனால், வல்லுநர்கள் புதிதாக இடப்பட்ட மைதானம் உடைந்தது தான் காரணம் என்று அன்றைய தினம் comment செய்தனர்; இதைப் பற்றி மைதானத்தில் அவுட் ஆகாமல் இருந்த காம்ப்ளி கூறுவது தான் சரியாக இருக்கும் என்று கொண்டாலும், இத்தனைக் காலம் கழித்து இதைக் கூறுவது சரியில்லை என்பது தான் என் கருத்து.

கடைசியாக படித்ததில் பிடித்தது,

”ராஜராஜ சோழனுக்குப் பின் ”அம்மா” அரசாண்டிருந்தால்…..
பெரிய கோவில், பெரியாஸ்பத்திரி ஆகியிருக்கும்.”
Mummy Returns!!!

10 கருத்துகள்:

 1. ////இந்தக் குற்றச்சாட்டை அவர் அப்போதே (ஏனெனில் அப்போது அசார் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அவர் தனிமை படுத்தப் பட்டிருந்தார். அதாவது அவர் influence-இல் இல்லை; அந்த சமயத்தில் அவர் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் நம்பப் பட்டிருக்கும்) அதைவிட்டு இப்பொழுது கூறுவதை “கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது” என்பார்கள்.////சரியாகச்சொன்னீர்கள் பாஸ் காம்ளி காலம் கடந்து குற்றம் சொல்கின்றார் அப்போது சொல்லியிருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் காரணம் அசார் ஒன்றும் உத்தமர் இல்லை சூதாட்ட புகாரில் சிக்கி தடைவிதிக்கப்பட்டவர்தானே....

  பதிலளிநீக்கு
 2. //”ராஜராஜ சோழனுக்குப் பின் ”அம்மா” அரசாண்டிருந்தால்…..
  பெரிய கோவில், பெரியாஸ்பத்திரி ஆகியிருக்கும்.”
  Mummy Returns!!!//

  good joke....

  நல்ல கலவை....

  பதிலளிநீக்கு
 3. I Kamblieve it!

  I haven't been to Delhi ever since 1999. I am very eager to come there & see the new airport, metro etc. and of course, you all.

  பதிலளிநீக்கு
 4. //அசார் ஒன்றும் உத்தமர் இல்லை சூதாட்ட புகாரில் சிக்கி தடைவிதிக்கப்பட்டவர்தானே//
  ஆம், அப்போது தடைவிதிக்கப் பட்டு பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால் exonerate செய்யப் பட்டார். அந்த நேரத்தில் இந்த குற்றச்சாட்டை எழுப்பி நிரூபித்திருந்தால் அது ஞாயம். அதை விட்டுவிட்டு இப்போது இதைச் சொல்வது சரியில்லை.

  பதிலளிநீக்கு
 5. என்ன செய்வது வெங்கட்,
  அரசியல்வாதிகள் மக்களை jokers ஆக ஆக்கிவிடுகிறார்கள்!!!!

  பதிலளிநீக்கு
 6. மோகன் குமார் தங்களின் வருகைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. //I Kamblieve it!//

  ரகு, we know it [phonetic-ல் படித்தால் வி நோ த்] சரிதானே!!

  //I am very eager to come there//
  Me too. It's been quite long time, isn't it.

  பதிலளிநீக்கு
 8. நல்ல பகிர்வு.
  கடைசி வரிகளில் நகைச்சுவை. :)))

  பதிலளிநீக்கு