வியாழன், நவம்பர் 17, 2011

உத்திர பிரதேசத்தின் எதிர்காலம்



நேற்று மாயாவதி உத்திர பிரதேசத்தை நான்கு – பஷ்சிம் ப்ரதேஷ், ஆவாத் ப்ரதேஷ், புந்தேல்கந்த், பூர்வாஞ்சல் - புதிய மாநிலங்களாக மாற்ற சட்டசபைத் தீர்மாணம் இயற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

உத்திர பிரதேசம் சுமார் 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், இன்றைய நிலையில் சுமார் 20 கோடி மக்கள் தொகையையும் (அதாவது தேசத்தின் 16% மக்கள் தொகை) கொண்ட ஒரு பெரிய மாநிலம். எனவே அது ஒரு கட்டுபாடற்ற மாநிலமாக இருப்பதாகவும், அதை நான்காகப் பிரிப்பதுதான் தீர்வு என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கானா விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாத காங்கிரஸ், இது மிகவும் நாசூக்கான விஷயம் என்று கருத்து கூறியுள்ளது. பாஜக-வோ இது மக்களைத் திசை திருப்பும் வெறும்  கண் துடிப்பு நாடகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளன. ஆக, இவர்களின் நிலை என்ன என்று வெளிப்படையாக இன்னமும் சொல்லவில்லை.

மறைமுகமாக பாஜக சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப் படுவதையே விரும்பும் என்று நினைக்கிறேன். தெலுங்கானா  விலும் சற்றேரக் குறைய இதே நிலைதான். ஏனென்றால் அதில் ஒன்றிரண்டு முதலமைச்சராக ஆக வாய்ப்பு கிட்டும். புள்ளிவிவரங்களை மாற்றி கட்சி வளர்ந்துள்ளதாக – அதாவது 2000 ஆண்டில் அத்தனை முதல்வர்கள், இன்று இது இத்தனையாக உயர்ந்துள்ளது – என்று காட்டிக் கொள்ளலாம்.

காங்கிரசுக்கும் ஓரளவு ஏற்புடையதாக – atleast யுவராஜனின் கைங்கர்யத்தால் வென்றதாகக் கணக்கு காட்ட உதவும் என்பதால் – ஏற்புடையதாகவே இருக்கும். மேலும், சில வருடங்களுக்கு முன்பே ராகுல் உத்திர பிரதேசத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் (அப்போது உத்திர பிரதேசத்திலிருந்து ஹரீத் ப்ரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த அஜித் சிங் – முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகன் – உடன் கூட்டு வைத்திருந்ததால் கூட இருக்கலாம். (அது அஜித் சிங் பலமாக இருந்த அவர் ஜாதியை சேர்ந்த ஜாட்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதை ஊகித்திருந்தால் நீங்கள் இந்திய அரசியல் வாதிகளைப் பற்றி சரியாகப் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று பொருள்). ஆனால், இன்றைய நிலையில் இது தெலுங்கானா பிரிவினைக்கு போராடுபவர்களுக்கு மேலும்  சாதகமாக இருக்கும் என்பதால் அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம்.

மாயாவதியைப் பொறுத்தவரை இது உடனடியாக நடக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும். அதே நேரம் தேர்தல் வருவதால் மக்களைத் திசைத் திருப்ப வேண்டிய கட்டாயம். [மேலும், அப்படியே பிரிக்கப் பட்டாலும் இரண்டு மாநிலத்தில் – at least பச்சிம் ப்ரதேசத்திலாவது – அவருக்கு வாய்ப்பு கிட்டும். அவர் ஒருவருக்கு தானே, அதுவே போதும். இரண்டு மாநிலம் ஆகிவிட்டால், மம்தா பானர்ஜி யாருக்கு மத்திய அமைச்சர் பதவி  கொடுப்பது என்று குழம்பியது போல் குழப்பம் வேறு வரும்.] ஏதோ குட்டையைக் குழப்பலாம் என்று தான் இதை அறிவித்திருப்பதாகவேத் தெரிகிறது. ஆனாலும், பிரிவினைக்கான விதையைத் தூவிவிட்டு விட்டார்.

[ஒரு சின்ன diversion : நோய்டாவைப் பொருத்தவரை மாயாவதிதான். நோய்டாவின் இன்றைய முன்னேற்றம் தில்லியின் வளர்ச்சியை ஒட்டியதாகவும், தேசிய தலைநகர் பகுதியில் இடம் பெற்றிப்பதாலும் என்றாலும் கூட, இங்குள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் அவரின் செயல்கள் யாராலும் மறுக்க முடியாது. அதிலும், முலாயாம் ”அம்மா” ஜெயலலிதாவின் சிஷ்யனாக முந்தைய மாயாவதி அரசின் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நிறுத்தியது, பஸ் வசதிகளில் செய்த குளறுபடிகள் ஆகியவற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மேலும், அவரது சொந்த தொகுதி வேறு நோய்டாவை ஒட்டி இருக்கிறது.]

முலாயம் சிங்கைப் பொறுத்தவரை இது மாயாவதியின் திட்டம் அதனால் அனைவரும் எதிர்பார்த்தபடியே அவரும் இதை எதிர்த்து அறிக்கை விட்டுவிட்டார்.

இந்தியாவிற்கு பெரும்பாலான பிரதமர்களைத் தந்து இந்திய அரசியலைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த உத்திர பிரதேசம் இன்னும் எத்தனை நாள் இந்திய வரைபடத்தில் முழுமையாக இருக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் தர இயலும்.


10 கருத்துகள்:

  1. சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் அப்போது! இப்போ திரும்பவும் கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு மேய்ந்துடுவாங்க போல இருக்கு...

    பதிலளிநீக்கு
  2. என்னமோ இவர்களின் அரசியலில் பாதிக்கப்படுவது மக்கள் தான்

    பதிலளிநீக்கு
  3. ஓரளவு அது பிரிக்கப் பட்டால நல்லதுதான். உ.பி. மிகப் பெரிய மாநிலம்; எனவே அதில் ஒரு பகுதியில் செல்வாக்கிருந்தால் முழு மாநிலத்தையும் கட்டுப் படுத்தலாம்; இந்த பிரிவினையால் அரசியல் சக்தி பரவலாகும் என்ற காரணத்தால். மேலும், சமீபத்தில் பிரிக்கப் பட்ட மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் (சதீஸ்கர், உத்தராஞ்சல், குறிப்பாக பீகார்) அதிகம்.
    ஆனால், இதில் எந்தெந்த பகுதிகள் (மாவட்டங்கள்) ஒன்று சேர்க்கப்பட்டு புது மாநிலம் உருவாகும் என்பதுதான் முக்கியம். அப்போதுதான் அதிகார பரவாலாக்கல் சம நிலையில் இருக்கும். அதில்தான் பெரும்பாலும் கட்சிகளின் அடிதடி இருக்கும்.

    இதே காரணங்கள் தான் தெலுங்கானாவின் பிரிவினைக்கும் உள்ளன. தெலுங்கானா என்பது பெரும்பாலும் பாமினி பேரரசாலும் பின்னர் நிஜாமின் கட்டுப் பாட்டிலும் இருந்த பகுதி. மீதமுள்ள ஆந்திரா கிருஷ்ணதேவராயரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதி. தெலுங்கானாவை பிரித்துவிட்டால், பெரும்பாலான இஸ்லாமிய பகுதிகள் அதில் சென்றுவிடும், மீதமுள்ள ஆந்திராவில் தற்போது தெலுகுதேசம் கட்சியோடு சேர்ந்தும் பின்னர் தனியாகவும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதுதான் பாஜக அதை ஆதரிப்பதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் அதிகார மையம் ஹைதராபாதில் இருந்ததால் பெரும்பாலான பிற பகுதி மக்கள் (குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்) அங்கு தான் தங்கள் முத்லீடுகளைச் செய்துள்ளனர். அதுதான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

    கருத்திற்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  4. ராஜா, நீங்கள் சொல்வது சரிதான். அதைத் தான் நாம் காலங்காலமாகப் பார்த்து வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  5. இப்போது ரயிலில் ஊர் போகும் போது அஞ்சு மாநிலங்களைத் தாண்டிப் போகிறோம். உ.பி யைப் பிரித்தால் இன்னும் இரண்டு மூணு ஸ்டேட்களை எக்ஸ்ட்ராவா தாண்டணும் அவ்வளவுதானே!

    பதிலளிநீக்கு
  6. வாங்க பத்து,
    அஞ்சு மாநிலங்களைத் தாண்டினால் பரவாயில்லை, கல்கத்தா செல்லும் மக்களைப் போல், சில மாநிலங்களை அஞ்சித்தான் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற நிலைமை வந்தால் தான் பிரச்சனை இல்லையா?

    பதிலளிநீக்கு
  7. நானும் இந்தியாவிலதானிருக்கேன்.இந்த விசியங்களை புதிதா படிக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஆச்சி,
    இன்றைக்கு உ.பி. யில் சூடான விவாதமே அதன் பிரிவினைப் பற்றித் தான்.
    வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. //Clear case of gerrymandering //
    ஆமாம் ரகு, சாதாரணமாக வாக்காளர்த் தொகுதிகளைத் தீர்மானிக்கும் பொழுது ஆளும் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு இது போன்ற gerrymandering, malapportionment ஆகியவற்றைச் செய்ய அழுத்தம் கொடுப்பது வழக்கம் தானே.

    பதிலளிநீக்கு