புதன், டிசம்பர் 07, 2011

ராஜா இது ஞாயமா?




ஜெயா தொலைக்காட்சியில் கடந்த இரண்டு நாட்களாக அனைவரையும் கவர்ந்த ஓர் அறிவிப்பு வெளியானது. அது ராஜா, அவருடைய ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்குப் பிடித்த10 பாடல்களை பாட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பே.

ராஜா இசையமைத்த பாடல்களோஆயிரக்கணக்கில். அதில் நாங்களெல்லாம் வித்யாசமான combination-களை வைத்து,

  • ராஜா-SPB-solo;
  • ராஜா-SPB-duet (ஜானகியுடன், சித்ராவுடன், மற்றவர்களுடன் என்று sub-category வேறு உண்டு);
  • ராஜா; தாஸ்-solo;
  • ராஜா-தாஸ்-duet;
  • ராஜா-வைரமுத்து;
  • ராஜா-ஜானகி(duets);
  • ராஜா – சித்ரா
  • ராஜா - வாசு
  • ராஜா (solo); தவிர
  • ராஜாவின் கர்நாடக சங்கீத பாடல்கள்; மேற்கத்திய இசைபாடல்கள்
  • ராஜாவின் ஜதி வரிசை பாடல்கள்;
  • ராஜாவின் குழலிசை பாடல்கள்; கிடார் பாடல்கள்; இன்னும் பல

அதில் பத்து பாடல்களைத் தேர்வு செய்வதிலேயே கஷ்டப் படுவோம். இதில், மொத்தமே பத்து பாடல்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் அது எப்படி முடியும்.

ராஜா இது ஞாயமா?

ராஜா ஒரு சங்கீத சாகரம், அதில் 10 மட்டும் கமண்டலத்தில் பிடிக்க நாங்கள் என்ன அகத்திய முனிவரா? இது சற்றும் ஞாயமில்லை.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது. இது என் தேர்வு –

  1. இதயம் ஒரு கோவில் - இது என் all-time favorite; எழுதியதும் ராஜா தான் என்று நினைக்கிறேன். அதிலும் ராஜாவே பாடும் track version – பாலு கலக்கிதான் இருப்பார்; ஆனாலும் ராஜா பாட்டோடு ஒன்றியிருப்பார்; அதுதான் என் தேர்வு. Incidentally, இந்த நிகழ்ச்சி அறிவிப்பின் bgm-ம் இதுதான். (உடனேயே என் மனைவி உங்கள் பாட்டே வந்து விட்டது என்று கூறினார்).
  2.  நான் தேடும் செவ்வந்தி பூவிது – ராஜா, ஜானகி combination ஒரு பாடல் கூட சோடை போனதில்லை; அதில் இது முதல்.
  3. சிறிய பறவை சிறகை விரிக்க – மூன்று காதலர்கள் ரோமியோ, மஜ்னு, அம்பிகாபதி; மூவருக்கும் மூன்று சரணங்கள்; அதற்கேற்ப இசை வித்யாசம் – இது என் all-time favorite.
  4.  ஒரு குங்கும செங்கமலம் – எனக்கு மிகவும் பிடித்த பாடல்; No more explanation.
  5.  ராசாவே உன்ன எண்ணி இந்த ரோசாபூ – ராஜா-வைரமுத்து எனக்குப் பிடித்த combination. பிரிவதற்குச்  சற்று முன்னர் எழுதிய பாடல் என்பதால்  ஒரு நெருக்கம்.
  6. பொன்வானம் தண்ணீர் தூவுது – குரலா இசையா எது பெஸ்ட் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
  7.  விழியிலே மணி விழியில் மௌன மொழி – ஜொதெகளு போல இல்லை என்றாலும் 30 வருடம் கழித்தும் ஹிட்டடிக்கும் tune.
  8.  தென்றல் வந்து தீண்டும் போது – musical rainbow
  9.  சங்கத்தில் பாடாத கவிதை – இதுவும் வேறு மொழியில் (original மலையாளம்) இருந்து தமிழுக்கு இறக்குமதிதான்.
  10. அழகான பூக்கள் (படம்: அன்பே ஓடிவா!!!) – இளையராஜா என்றால் என்னவோ ராகதேவன், நிறைய இசை சாதனங்களை வைத்து  பெரிய ஜாம்பவான்கள் ரசிக்க தரும் மேட்டுக்குடி இசையமைப்பாளர் அல்ல; அவரால் குறைந்த இசைக்கருவிகளூடன் உயர்ந்த தரமான பாடல்களை சாதாரண ரசிகர்களுக்கும் நிறைவு தரும் பாடல்கள் தருபவர் என்பது பல பாடல்களில் நமக்குத் தெரியும். அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

29 கருத்துகள்:

  1. ராஜா அள்ள அள்ள குறையாத இசையருவி...

    நீங்கள் குறிப்பிட்ட அந்த நான்காவது பாடல் எந்த படத்தில் இடம்பெற்றது? அதன் தரவிறக்க முகவரி ஏதேனும் இருக்கிறதா நண்பரே?

    பதிலளிநீக்கு
  2. முரளிகண்ணன், தங்கள் வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ராஜா, அது 1981-ல் வெளிவந்த “ஆராதனை” படத்தின் பாடல். அது ராஜாவின் super-hit பாடல்களில் ஒன்று. youtube-ல் கூட இருக்கிறது. youtube downloader இருந்தால் தரவிறக்குவது எளிது.

    பதிலளிநீக்கு
  4. எல்லா பாடல்களுமே சூப்பரான பாடல்கள். எதை விடுவது...

    மெட்டி ஒலி காற்றோடு... இதுவும் இனிமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஆதி,

    //மெட்டி ஒலி காற்றோடு... இதுவும் இனிமையான பாடல். //

    என்ன செயவது 10 தான் முடியும். ”பதிற்றுபத்து”-இல்திணைக்கு 10 பாடல் மாதிரி, வகைக்கு 10 பாட்டுத் தேர்வு செய்யலாம். இதில் கூட ஜேசுதாஸ் பாடல் ஒன்று கூட இல்லை. ராஜா-ஜானகி 2 பாடல் வந்து விட்டது. இதையும் சேர்த்தால் மற்ற வகைக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுமே அதுதான். மற்றபடி அதுவும் என் தேர்வில் உண்டு.

    பதிலளிநீக்கு
  6. ஒரு சாகரத்திலிருந்து ஒரு துளி எடுப்பது எனக்கும் கஷ்டம் தான் சீனு...

    பார்த்துப் பார்த்து ஒலிநாடாக்களில் சேமித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

    பிடித்த பாடல் என்று யோசிக்க ஆரம்பித்தால் நூற்றுக்கணக்கில் வருமே...

    நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
  7. SOnna madhiri ethana paatunga very difficult to choose from the maestro

    பதிலளிநீக்கு
  8. Kazhugu padathula janaki yoda paadina Ponnoviam kandenamma engengum adu kooda super paatu

    பதிலளிநீக்கு
  9. ஆமாம் வெங்கட், அதுவும் வேறு வேறு combination-களில் எத்தனை 90 நிமிட cassette வைத்திருந்தோம். எல்லாம் பரணில்; இப்போது தான் mp3-ஆக கணினியில் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் ராம்குமார், இது உன் favorite ஆச்சே. 80-களிலேயே ராஜா செய்த fusion என்று சிலாகிப்பாயே!!

    பதிலளிநீக்கு
  11. Ama, Raja dan complete music director. Western, fusion, classical (both western and indian, gramathu manam ellame irukara ore music rajavodadu dan. Recenta 'Kannil theriyum kadaigal' padathulendu "Naan oru ponnoviam kanden edire" nu oru paatu. Rare combinatina SPB, SJ and P Susheela paadi irukanga. Aha enna oru music!! Nijamave genius dan. Nee ketirupiyanu theriyala. Also listen to 'Mozart I love you" in 'How to name it?'. Brilliant combination of Western and Indian music!! Pakkam pakkama ezhudalam avar music pathi.

    பதிலளிநீக்கு
  12. ஆமாம் ராம் “கண்ணில் தெரியும் கதைகள்” படமே ஒரு அதிசயம் தான். அதில் 5 பாடல்களுக்கும் 5 வேறு வேறு இசையமைப்பாளர்கள்

    நான் ஒரு பொன்னோவியம் - ராஜா;
    நான் உன்னை நினைச்சேன் - சங்கர்-கணேஷ்,
    மற்றவர்கள், GKவெங்கடேஷ், TR பாப்பா, KVMமும் என்று நினைக்கிறேன் பாடல் ஞாபகம் இல்லை. தயாரிப்பு பாடகர் ஏ.எல்.ராகவன். பாடல்கள் ஹிட்; படம் எப்பவும் போல் பொட்டிக்குள்ளதான்.

    பதிலளிநீக்கு
  13. இவ்வாரக் குமுதத்தில் வந்திருக்கும் செய்தியின் தொடர்ச்சியாக ராமும் நீங்களும் கண்ணில் தெரியும் கதைகள் படத்தைப்பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள சங்கர்-கணேஷ் மற்றும் இளையராஜா பாடல்கள் மட்டும்தாம் அந்தப் படத்தில் ஹிட். மற்ற பாடல்கள் யாவும் படத்தோடு போய்விட்டன. படமும் நல்ல தோல்வி. எதற்காக இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் அந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவன் நான்தான்(தோல்வி ஏன் என்பதற்கு தனிப்பதிவே எழுதவேண்டும்)

    பதிலளிநீக்கு
  14. தங்கள் வருகைக்கு நன்றிகள் அமுதவன்.

    நான் குமுதம் செய்தி இன்னமும் படிக்கவில்லை. ஆனால் 80 களின் ஞாபகங்களிலிருந்து தான் எழுதினேன். ஒரு ரசிகனாக யார் இசை என்று (என் நண்பர்களிடமும் என் அக்காவிடமும்) போட்டி போடுவத்ற்காக வானொலியில் பாடலுடன் கூறும் தகவல்களைக் கேட்பதுண்டு.

    மற்றபடி பாடல்களைத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன் ஒளியும் ஒலியும்) பார்த்ததுண்டு. திரைப்படங்கள் (தியேட்டரில்) அதிகம் பார்த்ததில்லை.

    ஒருபடத்தின் வெற்றி தோல்வியை பாடல்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை, அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்பதையும் அறிவேன். இந்த படத்தின் தோல்விக்கான காரணங்களை எங்களை விட நீங்கள் தான் அறிவீர்கள். அதை நீங்கள் எழுதினால் (வெளியிட முடியுமானால் அல்லது அதன் தேவை உள்ளது என்று கருதினால் மட்டுமே) நாங்கள் அறிந்து கொள்வோம்.

    மற்றபடி உங்கள் உழைப்பின் பலன் கிட்ட வில்லை என்ற அளவில் என் ஆழ்ந்த வருத்தங்கள்.

    பதிலளிநீக்கு
  15. Kannil theriyum kadaigal padathai patri ivlo newsa? I am surpised!!! It's just co-incidence. Cheenu sonnadiruku mele solla ondrum illai. Coming back to subject, matha music director galidamirundu Rajavai vidhyasapaduthi kaatuvadu paadl naduve varum interlude music dan enbadhu en thazhmaiyana karuthu. Pala music dir galain paadalgalil adu edo edathai nirapum oru porulaga irukum; Raaja isail adu udambil odum ratham pola part and parcel aga irukum. Eg. Paruvame pudia paadal paadu (nenjathai killade), Sendurapoove (16 vayadile), En vaanile ore vennila (johny, Azhagiya kanne uravugal neeye (Udhiri pookal) so on and on.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ராம் குமார்,

    உன்னுடைய பட்டியல் எங்கே?

    பதிலளிநீக்கு
  17. Romba kashtamana vela. Poduvave enaku ellarukum pidicha paatunga enaku pudikadu. OK, I will try :-

    1. Sendhoorapoove (16 vayadinile)
    2. Sandana kaatre (Pokiri raja??)
    3. Vellai pura ondru (duet) (pudukavidhai)
    4. Germaniyin sendhen malare (Guru)
    5. Naan oru ponnoviam kanden (Kannil therium kadaigal)
    6. Poove illaya poove (Kozhi koovudhu)
    7. Maragada veenai isaikum raagam (Maragada veenai)
    8. Thazhamboove kanurangu (Indru nee naalai naan)
    9. Boopalam isaikum poomagal Oorvalam (Thooral ninu pochu)
    10. Inda minminiku kannil oru minnal vandadu (Sigappu rojakal)

    Hi hi enaku malaysia vasudevan a romba pidikum adan avar paatu rendu sethuten.

    பதிலளிநீக்கு
  18. நன்றி ராம் குமார்,

    சந்தனக் காற்றே படம் தனிக்காட்டு ராஜா. போக்கிரி ராஜாவிற்கு MSV இசை அதில் ”விடிய விடிய சொல்லித் தருவேன்” இதே genere-ல வந்த ஹிட்.

    வாசு மிக நல்ல பாடகர்; எனக்குப் பிடித்தது “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிலி (தூ.நி.போ)”

    பதிலளிநீக்கு
  19. ஜெர்மனியின் செந்தேன் மலரே, படம் குரு அல்ல உல்லாச பறவைகள்.

    பதிலளிநீக்கு
  20. ஹே ராம் குமார்

    அது Mr. இல்லை Mrs.கோவை2தில்லி.

    btw, Mr.கோவை2தில்லி, நம் வெங்கட் தான்(!!!!)
    அந்த profile படம் வெங்கட்-இன் மகள் ரோஷ்ணி.

    பதிலளிநீக்கு